டாட்டா டெலிசர்விசசு

டாட்டா டெலிசர்விசசு லிமிடெட் (Tata Teleservices Limited, TTSL) (முபச532371 ) மகாராட்டிர மாநிலத்தின் மும்பை நகரைத் தலைமையகமாகக் கொண்டு தொலைத்தொடர்பு சேவைகளையும் அகலப்பட்டை இணைய அணுக்கச் சேவைகளையும் வழங்கும் ஓர் இந்திய தொலைதொடர்பு சேவையாளராவர். டாட்டா குழுமத்தின் ஓர் துணை நிறுவனமாக விளங்குகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் டாட்டா டொகோமோ என்ற வணிகப்பெயரில் நகர்பேசி சேவைகளையும் டாட்டா இண்டிகாம் என்ற பெயரில் நிலையிட தொலைபேசிச் சேவைகளையும் சிடிஎம்ஏ நகர்பேசிச் சேவைகளையும் வழங்கி வருகிறது.

டாட்டா டெலிசர்விசசு வரையறுக்கப்பட்டது
வகைபொதுப்பரவல் நிறுவனம் (முபச532371 )
நிறுவுகை1996
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
முதன்மை நபர்கள்கிஷோர் அனந்த் சௌகார்
(தலைவர்)
நரசிம்மன் சிரீநாத்
(மேலாண்மை இயக்குநர்)
தொழில்துறைதொலைதொடர்புத் துறை
உற்பத்திகள்நிலைத்தயிடப் பேசி மற்றும் நகர்பேசி சேவைகள், அகலப்பட்டை இணைய அணுக்கம், எண்ணிமத் தொலைக்காட்சி மற்றும் பிணையச் சேவைகள்
வருமானம்3,191 கோடி (US$400 மில்லியன்) (2011)[1]
தாய் நிறுவனம்டாட்டா குழுமம்
பிரிவுகள்டாட்டா டொகோமோ (சிடிஎம்ஏ/ஜிஎஸ்எம்)
வெர்ஜின் மொபைல் (சிடிஎம்ஏ/ஜிஎஸ்எம்)
இணையத்தளம்www.tatateleservices.com

நவம்பர் 2008இல் சப்பானிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்டிடி டொகோமோ இநிறுவனத்தின் 26 விழுக்காடு பங்குகளைஏறத்தாழ ரூ.13,070 கோடிகளுக்கு ($2.7 பில்லியன்) வாங்கியது.[2]

பெப்ரவரி 2008இல் ஐக்கிய இராச்சியத்தின் வெர்ஜின் குழுமத்துடன் இணைந்து வெர்ஜின் மொபைல் என்ற மெய்நிகர் நகர்பேசிச் சேவைகளை வழங்கி வருகிறது.

சான்றுகோள்கள்

தொகு
  1. ">> Company Info >> Print Financials". Moneycontrol.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-28.
  2. "NTT DoCoMo buys 26% in Tata Tele for $2.7 bn". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_டெலிசர்விசசு&oldid=3214435" இலிருந்து மீள்விக்கப்பட்டது