டாப்சி பன்னு
இந்திய நடிகை
டாப்சி பன்னு (பிறப்பு: 1987 ஆகஸ்ட் 1) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். இவர் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
டாப்சி பன்னு | |
---|---|
சாஸ்மி பட்டூர் திரைப்படத்தின் இசைவெளியீட்டில் டாப்சி | |
பிறப்பு | டாப்சி பன்னு 1 ஆகத்து 1987[1][2] தில்லி, இந்தியா |
மற்ற பெயர்கள் | டப்சி |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2010–இற்றை |
வலைத்தளம் | |
www |
திரைப்படவிபரம்
தொகுஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2010 | சும்மாண்டி நாதம் | ஸ்ராவ்யா | தெலுங்கு | |
2011 | ஆடுகளம் | ஐரின் | தமிழ் | |
2011 | வஸ்டாடு நா ராஜு | பூஜா | தெலுங்கு | |
2011 | டபுள்ஸ் | சாய்ரா பானு | மலையாளம் | |
2011 | மிஸ்டர். பேர்பெக்ட் | மாகி | தெலுங்கு | |
2011 | வீரா | ஐக்கி | தெலுங்கு | |
2011 | வந்தான் வென்றான் | அஞ்சனா | தமிழ் | |
2011 | மோகுடு | ராஜ ராஜேசுவரி | தெலுங்கு | |
2012 | தராவு | சுவேதா | தெலுங்கு | |
2013 | குண்டெல்லோ கோதாரி / மறந்தேன் மன்னித்தேன் | சரளா | தெலுங்கு / தமிழ் | |
2013 | சாஸ்மி பட்டூர் | சீமா | இந்தி | |
2013 | சாடேவ் | தெலுங்கு | ||
2013 | வலை | தமிழ் | ||
2013 | ஆரம்பம் | அனிதா | தமிழ் | |
2014 | கதை திரைக்கதை வசனம் இயக்கம் | நடிகை டாப்ஸி (கௌரவ தோற்றம்) | தமிழ் | |
2015 | வை ராஜா வை | ஷ்ரேயா (கௌரவ தோற்றம்) | தமிழ் | |
2015 | முனி 3: கங்கா | நந்தினி | தமிழ் | |
2019 | கேம் ஓவர் | சொப்னா | தமிழ் / தெலுங்கு | |
2021 | அனபெல் சேதுபதி | அனபெல் சேதுபதி/ருத்ரா | தமிழ் |
சான்றுகள்
தொகு- ↑ August 1st, 20121 Comment (2012-08-01). "Tapsee Pannu birthday - Get Latest News & Movie Reviews, Videos, Photos of Tapsee Pannu birthday at". Bollywoodlife.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-11.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Moviebuzz. "Happy Birthday to Taapsee". Sify Technologies Ltd. பார்க்கப்பட்ட நாள் 23 January 2012.