டார்ஜிலிங் இமாலயன் இருப்புப்பாதை


டார்ஜிலிங் இமாலய இருப்புப்பாதை (Darjeeling Himalayan Railway) டி.எச்.ஆர் அல்லது பொம்மை ரயில் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் மற்றும் டார்ஜிலிங் இடையே இயங்கும் 2 அடி (610 மிமீ) கொண்ட குற்றகலப் பாதை இருப்புப்பாதை ஆகும். 1879 மற்றும் 1881 க்கு இடையில் கட்டப்பட்ட இது சுமார் 88 கிமீ (55 மைல்) நீளம் கொண்டது. இந்த உயரத்தைப் பெற ஆறு கொண்டை ஊசி வளைவுகளையும் ஐந்து சுழல் வளைவுகளையும் பயன்படுத்துகிறது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
டார்ஜிலிங் இமாலயன் இருப்புப்பாதை
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
டார்ஜிலிங்கில் ஒரு பழக் கடையை கடந்து செல்கிறது

யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
பகுதிஇந்திய மலைப்பாதை தொடருந்துகள்
கட்டளை விதிபண்பாட்டுக் களம்: (ii)(iv)
உசாத்துணை944ter-001
பதிவு1999 (23-ஆம் அமர்வு)
விரிவுகள்2005, 2008
பரப்பளவு5.34 ha (13.2 ஏக்கர்கள்)
Buffer zone70 ha (170 ஏக்கர்கள்)
ஆள்கூறுகள்26°40′48″N 88°27′36″E / 26.68000°N 88.46000°E / 26.68000; 88.46000
டார்ஜிலிங் இமாலயன் இருப்புப்பாதை is located in இந்தியா
டார்ஜிலிங் இமாலயன் இருப்புப்பாதை
இந்தியாவில் டார்ஜிலிங் இமாலயன் இருப்புப்பாதையின் இருப்பிடம்

இந்தியாவின் மிக உயர்ந்த இருப்புப்பாதை நிலையமான டார்ஜிலிங்கிலிருந்து கும்- (இந்தியாவின் அதி உயரத்திலுள்ள தொடருந்து நிலையம், 7,407 அடி 2.258 மீ)- வரை தினசரி சுற்றுலா தொடருந்தும், டார்ஜிலிங்கிலிருந்து குர்சியோங் வரை நீராவியால் இயக்கப்படும் ரெட் பாண்டா சேவையும் ஆறு டீசல் இயந்திரங்கள் திட்டமிடப்பட்ட சேவையை கையாளுகின்றன.

வரலாறு

தொகு

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள சிலிகுரி, கொல்கத்தாவுடன் 1878 இல் ஒரு குறுகிய இருப்புப்பாதை மூலம் இணைக்கப்பட்டது. சிலிகுரி மற்றும் டார்ஜிலிங்கிற்கு இடையில், டோங்கா சேவைகள் ஒரு வண்டி சாலையில் - இன்றைய ஹில் கார்ட் சாலை- தொடங்கப்பட்டது. [1] கிழக்கு வங்க இருப்புப்பாதை நிறுவனத்தின் முகவரான பிராங்க்ளின் பிரஸ்டேஜ், சிலிகுரியிலிருந்து டார்ஜிலிங் வரை நீராவி இருப்புப்பாதை போடுவதற்கான திட்டத்துடன் அரசாங்கத்தை அணுகினார். [1] வங்காளத்தின் துணைநிலை ஆளுநரான ஆஷ்லே ஈடன், திட்டத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு ஒரு குழுவை அமைத்தார். குழுவின் நேர்மறையான அறிக்கையின் பின்னர் இந்த திட்டம் 1879 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கட்டுமானம் அந்த ஆண்டே தொடங்கியது.

சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் இந்த இருப்புப்பாதை அசாம் இருப்புப்பாதையுடன் இணைக்கப்பட்டு, பின்னர் அசாம் வங்காளம் இடையே தொடருந்து இணைப்பை நிர்மாணிப்பதற்கும் மற்றும் கிஷான்கஞ்ச் வரை குறுகிய பாதை விரிவாக்கமும் ஏற்படுத்த தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் மற்றொரு விரிவாக்க இணைப்பான காலிம்பாங் வரையுள்ள தொடருந்து பாதை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இது 1952ல் மீண்டும் திறக்கப்பட்டு வடகிழக்கு தொடருந்து மண்டலத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் 1958 ஆம் ஆண்டு வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தோடு இணைக்கப்பட்டது.

சிறப்புகள்

தொகு

டார்ஜிலிங் இமாலயன் தொடருந்து பின்வரும் காரணங்களுக்காக உலகம் முழுவதும் புகழ் அடைந்துள்ளது:

  • இது இமயமலையின் நுழைவாயில்
  • இது இந்திய இருப்புப்பாதை நிறுவனத்தால் நீராவி வண்டியால் இயக்கப்படும் புகையிரதப் பாதை சின்னமாகும்.
  • 19 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த மிகச்சிறிய நான்கு சக்கர நீராவி வண்டிகளால் இந்த தொடருந்து இயக்கப்படுகின்றது.
  • இந்த தொடருந்து பாதை மிகவும் சவாலானது, செங்குத்தான ஏற்றங்களும், இறக்கங்களும் மேலும் குறுகிய வளைவுகளுடன் கூடிய இமயமலைப் பாதை ஆகும்.
  • திந்தாரியா பட்டறையில் 13 நீராவி வண்டிகள் வைத்துள்ளனர்.அதில் சில 100 வருடங்கள் பழமையானவை. மிகவும் இளைய நீராவிவண்டியின் வயது சுமார் 70ஆக இருக்கும்.

டார்ஜிலிங் இமாலயன் தொடருந்து காலவரிசை

தொகு
  • ஜனவரி 20, 1948: இந்திய அரசாங்கம் வாங்கியது
  • ஜனவரி 26, 1948: அசாம் தொடருந்து இணைப்பு பாதையுடன் இணைக்கப்பட்டது
  • ஜனவரி 26, 1950: அசாம் ரயில்வேயோடு இணைக்கப்பட்டது
  • ஜனவரி 14, 1952: வட கிழக்கு ரயில்வேயோடு இணைக்கப்பட்டது
  • ஜனவரி 15, 1958: வடகிழக்கு முன்னணி ரயில்வேயோடு இணைக்கப்பட்டது.
 
டார்ஜிலிங் முதல் கும் வரை செயற்படும் பழமைமிக்க குறுகிய பாதை தொடருந்து

இந்தப் பாதையில் 13 தொடருந்து நிலையங்கள் உள்ளன, அவை [2] புது ஜல்பைக்குரி, சிலிகுரி நகரம், சிலிகுரி சந்திப்பு, சுக்னா, ரோங்டாங், தின்தாரியா, கயாபாரி, மகாநதி, கர்சியாங், துங், சோனாடா, கும் மற்றும் டார்ஜிலிங் ஆகும்.

உலகப் பாரம்பரியக் களம்

தொகு

1999 திசம்பர் 2 அன்று, யுனெஸ்கோ டார்ஜிலிங் இமாலய இருப்புப்பாதையை உலக பாரம்பரிய களமாக அறிவித்தது. பின்னர் மேலும் இரண்டு இருப்புப் பாதைகள் சேர்க்கப்பட்டன.[3] மேலும் இந்த இடம் இந்தியாவின் மலை மலைப்பாதை தொடருந்துகளில் ஒன்றாக அறியப்பட்டது.

 
பொம்மை ரயில்
டார்ஜிலிங் ரயில் நிலையம்

காட்சியகம்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "DHR History". darjeelingnews.net. Darjeelingnews. Archived from the original on 13 December 2003. பார்க்கப்பட்ட நாள் 24 February 2007.
  2. "நிலையங்கள்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.
  3. "Mountain Railways of India". UNESCO World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 30 April 2006.