டார்பெலா அணை

டார்பெலா அணை (Tarbela Dam, உருது\பச்தூ:تربیلا بند) ஒரு மண் அணையாகும். இது பாக்கித்தானில் கைபர்-பத்துன்கவா மாகாணத்தின் வழியே பாயும் சிந்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ளது.

டார்பெலா அணை
2010ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது டார்பெலா அணை
அதிகாரபூர்வ பெயர்டார்பெலா அணை
அமைவிடம்டார்பெலா, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பாக்கித்தான்
புவியியல் ஆள்கூற்று34°05′23″N 72°41′54″E / 34.0897222222°N 72.6983333333°E / 34.0897222222; 72.6983333333
கட்டத் தொடங்கியது1968
திறந்தது1976
கட்ட ஆன செலவுஅமெரிக்க டாலர் 1.497 பில்லியன் [1]
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுசிந்து ஆறு
உயரம்143.26 மீட்டர்கள் (470 அடி) from river level
நீளம்2,743.2 மீட்டர்கள் (9,000 அடி)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு13.69 கன சதுர கிலோமீட்டர்கள் (3.28 cu mi)
நீர்ப்பிடிப்பு பகுதி168,000 km2 (65,000 sq mi)
மேற்பரப்பு பகுதி250 km2 (97 sq mi)
மின் நிலையம்
சுழலிகள்10 × 175 MW
4 × 432 MW
நிறுவப்பட்ட திறன்3,478 MW
6,298 MW (max)

1976ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் 148 மீட்டர் உயரம் உடையது, இதுவே பாக்கித்தானின் பெரிய அணையாகும். இது 250 சதுர கிமீ பரப்புடைய டார்பெலா நீர்த்தேக்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் மின்சார உற்பத்தியும் வெள்ளக்கட்டுப்பாடும் ஆகும் [2]. முதலில் 3,478 மெகாவாட் திறனுடைய இது நான்காவது நீட்சிக்குப் பின் 6,2978 மெகாவாட் திறனுடையதாகியது. திட்டமிடப்பட்டுள்ள ஐந்தாவது நீட்சிக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் உலக வங்கியும் நிதி உதவி செய்கின்றன.[3]

திட்ட விளக்கம் தொகு

டார்பெலா என்ற இடத்துக்கு அருகே சிந்து ஆறு குறுகலான இடத்தில் பாய்கிறது, இவ்விடம் இசுலாமாபாத்துக்கு சுமார் 60 கிமீ தொலைவில் உள்ளது. முதன்மையான அணை மண்னாலும் பாறைகளாலும் கட்டப்பட்டது. இது 2,473 மீட்டர் நீளம் உடையது. இது ஆற்றுக்கு வலது புறம் உள்ளது. இடது புறம் இரண்டு பைஞ்சுதை துணை அணைகள் உள்ளன. முதன்மையான அணையில் இல்லாமல் இரு நீர்வெளியேறும் பாதைகள் துணை அணைகள் பகுதியி்ல் அமைந்துள்ளன. முதன்மை நீர்வெளியேற்றும் பாதை விநாடிக்கு 18,406 கன மீட்டர் நீரை வெளியேற்றும் திறன் உடையது. துணை நீர்வெளியேற்றும் பாதை விநாடிக்கு 24,070 கன மீட்டர் நீரை வெளியேற்றும் திறன் உடையது. ஆண்டுக்கு 70% இக்கும் அதிகமான நீர் இந்த நீர் வெளியேற்றும்ம் பாதைகள் வழியாக வெளியேறுகிறது, இந்த நீர் மின்சார உற்பத்திக்கு பயன் படாமல் வீணாகிறது.[4]

தொடக்கத்தில் அணையில் ஐந்து சுரங்கள் அமைக்கப்பட்டன. இதில் மூன்று சுரங்கங்கள் நீர் மின் உற்பத்திக்கும் மற்ற இரண்டு பாசனத்திற்கும் அமைக்கப்பட்டன ஆனால் பின்னாளில் அவையும் மின் உற்பத்தியை அதிகரிக்க மின்உற்பத்திக்கு சுரங்கங்களாக மாற்றப்பட்டன. இந்த சுரங்கள் அணை கட்டுமானத்தின் போது நீரை வழி மாற்றி பாய கட்டப்பட்டன.

வலது புறம் உற்ற முன்று சுரங்களில் மொத்தம் பதினான்கு சுழலிகள் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. முதல் சுரங்கத்தில் நான்கு 175 மெவா திற்ன் சுழலிகளும் இரண்டாவது சுரங்கத்தில் ஆறு 175 மெவா திற்ன் சுழலிகளும் மூன்றாவது சுரங்கத்தில் நான்கு 432 மெவா திற்ன் சுழலிகளும் பயன்படுகின்றன. மொத்தம் 3,478 மெகாவாட். நீர்த்தேக்கத்தின் பரப்பு 250 கிமீ, நீளம் 80 கிமீ. ஆரம்பத்தில் 11,600,000 ஏக்கட் அடி (14.3 கன கிமீ) நீர் தேக்கப்பட்டது. அதில் பயன்பாட்டுக்கு உரியது 9,700,000 ஏக்கர் அடி. பின்னாளில் அது படிப்படியாக குறைந்து 35 ஆண்டுகளில் 6,800,000 ஏக்கர் அடி நீர் மட்டுமே பயன்பாட்டுக்கு உரியதாக குறைந்தது. இதற்கு காரணம் அணையின் அடியில் ஆறால் அடித்து வரப்பட்டு தேங்கியுள்ள வண்டலாகும். டார்பெலா அணையின் மேலுள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பு 168,000 சதுர கிமீ ஆகும். இந்த நிலத்தில் பெரும் பகுதி பனியாறுகள் உருகும் இமாலயத்தின் தென்புறமாகும். டார்பெலா அருகில் சிரன் ஆறு சிந்துவுடன் கலக்கிறது, சியோக் ஆறு சிகர்டு அருகில் சிந்துவுடன் கலக்கிறது.

பின்னணி தொகு

டார்பெலா அணை சிந்து வடிநில திட்டத்தின் பகுதியாக கட்டப்பட்டது. சிந்து ஆற்று நீர் உடன்பாடு 1960ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்டது இதன் பகுதியாக சிந்து வடிநில திட்டம் உருவாகியது. இத்திட்டம் சிந்தின் துணை ஆறுகளான ராவி, பியாச், சட்லச் ஆகியவை இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டதால் [5] ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்ய உருவாக்கப்பட்டது. அணையின் முதன்மை நோக்கம் பருவகாலத்தில் வரும் பெருவெள்ளத்தை கட்டுப்படுத்தி ஆண்டு முழுவதும் பாசனத்துக்கு பயன்படுவது என்ற போதிலும் 1970ஆம் ஆண்டின் நடுவில் மின்சார உற்பத்திக்காக மூன்று நீட்சிகளில் கட்டுமானம் செய்யப்பட்டது. இது 1992 ஆம் ஆண்டு முழு கட்டுமானம் செய்து முடிக்கப்பட்டது. மூன்று சுரங்கங்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக 3,478 மெவா மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.[6]

கட்டுமானம் தொகு

அணையானது மூன்று கட்டங்களாக கட்டப்பட்டது. இத்தாலிய பொறியில் நிறுவனம் இம்பெர்கிலோ (தற்போது சாலினி இம்பெர்லகிலோ) இதை கட்டியது.[7]

கட்டம் 1 தொகு

சிந்து ஆறு அதன் இயற்கையான வழித்தடத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது. அப்போது ஆற்றின் வலப்புறம் 1500 அடி நீளமும் 694 அடி அகலமும் உடைய மாற்று கால்வாய் வெட்டப்பட்டது. இதற்கு துணையாக 105 அடி சுவர் அணை தோண்டப்பட்டது. பகுதி 1 கட்டிமுடிக்க 2.5 ஆண்டுகள் ஆனது

கட்டம் 2 தொகு

முதன்மையான மண் அணை கட்டப்பட்டது. சிந்து ஆற்று நீர் மாற்று கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டது. இதன் பணி முடியும் போது நீரை திருப்பிவிடுவதற்காக சுரங்கள் வெட்டப்பட்டது. இக்கட்டம் நிறைவடைய மூன்று ஆண்டுகள் ஆனது[8]

கட்டம் 3 தொகு

மாற்று கால்வாய் மூடப்பட்டது. ஆற்று நீர் சுரங்கள் வழியாக அனுப்பப்பட்டது. இக்கட்டத்தில் அணை முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு பணி நிறைவுபெற்றது.[8]

பாதிக்கப்பட்டோர் மீள்குடியேற்றம் தொகு

அணை சுமார் 250 சதுர கிமீ அளவுக்கு நீர்த்தேக்கத்தை உருவாக்கியது. இதனால் 135 சிற்றூர்கள் நீர்தேக்கத்தில் மூழ்கின. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 96,000.[9] நீர்த்தேக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் நிறைய குடியிறுப்பு பகுதிகளிலும் அருகில் உள்ள பள்ளத்தாக்குகளிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர் .[10]

1984 நில கையகப்படுத்தும் சட்டம் மூலம் அணைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டோருக்கு பாக்கித்தானிய ரூபாய் 496.65 மில்லியன் வழங்கப்பட்டது.[11] பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தேசிய அளவில் கொள்கை இல்லாததால் உலக வங்கியுடன் ஏற்பட்ட உடன்பாட்டை நிறைவேற்ற அவசரமாக இழப்பீடு வழங்கப்பட்டது, பலருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.[12] பாதிக்கப்பட்ட பலர் பஞ்சாப் & சிந்து மாகாணத்தில் குடியேறினர்.[13]

அணையின் ஆயுள் தொகு

சிந்து ஆற்றின் மூலம் இமாலயத்தின் பனியாறுகள் உருகுவதால் ஏற்படுவதால் ஆறு ஏராளமான வண்டல்களை கொண்டு வருகிறது. ஆண்டுக்கு 200 மில்லியன் டன் வண்டல் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[14] இதனால் அணையின் நீர்த்தேக்கத்தின் பயன்படும் அளவு 38 ஆண்டுகளில் 9.679 மில்லியன் ஏக்கர் அடி என இருந்தது படிப்படியாக குறைந்து 6.434 மில்லியன் ஏக்கர் அடி என்று ஆனது. இது 33.5% குறைவு ஆகும்.[15] அணையின் ஆயுள் 50 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வண்டல் எதிர்பார்த்ததை விட குறைவு என்பதால் அணையின் ஆயுள் 85 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[16] டார்பெலா அணைக்கு மேலே பல பெரிய அணைகளை கட்ட பாக்கித்தான் திட்டமிட்டுள்ளது, இவை நிறைவேறினால் டார்பெலா அணைக்கு வரும் வண்டல் 69% குறைந்து விடும்[17]

மேற்கோள்கள் தொகு

  1. "Tarbela Dam Costs" (PDF). Archived from the original (PDF) on 13 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 30 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Rodney White (2017-03-27). Evacuation of Sediments from Reservoirs. Thomas Telford Publishing. பக். 163–169. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0727729538. http://books.google.com.pk/books?id=xmPjUnwJYQYC&pg=PA163. பார்த்த நாள்: 2017-03-27. 
  3. "World Bank approves $390m loan for Tarbela fifth extension - The Express Tribune" (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-03-27. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  4. "PROJECT APPRAISAL DOCUMENT ON A PROPOSED LOAN IN THE AMOUNT OF US$400 MILLION AND Report No: 60963-PK PROPOSED CREDIT IN THE AMOUNT OF 283.7 MILLION SDRS (US$440 MILLION EQUIVALENT) TO THE ISLAMIC REPUBLIC OF PAKISTAN FOR THE TARBELA FOURTH EXTENSION HYDROPOWER PROJECT (T4HP)" (PDF). World Bank. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27. Annually, over 70 percent of the water is spilled over the spillway instead of generating hydropower.
  5. "History". Archived from the original on 6 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Tarbela Dam Project, Haripur District, Pakistan". Water Technology. பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.
  7. Tarbela Dam Project, Haripur District, Pakistan
  8. 8.0 8.1 "Tarbela Dam". WAPDA. Archived from the original on 29 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 29 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. Terminski, Bogumil (2013). "Development-Induced Displacement and Resettlement: Theoretical Frameworks and Current Challenges", Indiana University
  10. "Pakistan: Tarbela dam". பார்க்கப்பட்ட நாள் 30 August 2016.
  11. [https://web.archive.org/web/20200730122241/http://www.pakistaneconomist.com/issue1999/issue30/f%26m4.htm பரணிடப்பட்டது 2020-07-30 at the வந்தவழி இயந்திரம் Settlement of Tarbela Dam affectees claims
  12. "Settlement of Tarbela Dam affectees claims". Pakistan & Gulf Economist. Archived from the original on 30 ஜூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 12 April 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. Internal Displacement in South Asia: The Relevance of the UN's Guiding ...
  14. Roca, M.. Tarbela Dam in Pakistan. Case study of reservoir sedimentation. p. 1. http://eprints.hrwallingford.co.uk/567/1/HRPP533_Tarbela_Dam_in_Pakistan._Case_study_of_reservoir_sedimentation.pdf. பார்த்த நாள்: 24 March 2016. 
  15. Reporter, The Newspaper's Staff (7 March 2015). "Another $51m to expedite Tarbela project completion". பார்க்கப்பட்ட நாள் 30 August 2016.
  16. Lorrai, C and Pasche, N. 'Tarbela Dam-Case Study' Swiss Federal Institute of Technology Zurich: April 2007
  17. Roca, M.. Tarbela Dam in Pakistan. Case study of reservoir sedimentation. p. 7. http://eprints.hrwallingford.co.uk/567/1/HRPP533_Tarbela_Dam_in_Pakistan._Case_study_of_reservoir_sedimentation.pdf. பார்த்த நாள்: 24 March 2016. 

வெளி இணைப்பு தொகு

Tarbela Dam, Pakistan இதை பார்க்கும் போது முதன்மையான அணையில் இல்லாமல் இரு நீர்வெளியேறும் பாதைகள் இடபுற துணை அணைகள் பகுதியி்ல் அமைந்துள்ளது நன்கு தெரிகிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்பெலா_அணை&oldid=3908966" இலிருந்து மீள்விக்கப்பட்டது