டா கிராபே கோயில்

டா கிராபே கோயில் (Ta Krabey temple) அல்லது பிரசாத் டா கவாய் (Prasat Ta Khwai) என்பது தாய்லாந்து, கம்போடிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில். வரலாற்றுப் புகழ் மிக்க இந்தக் கெமர் கோயில் பிரியா விகார் கோயிலுக்கு 200 கிமீ மேற்கே பானொம் டாங்கிரேக் மலைப் பகுதியின் உச்சியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன.

உள்ளூர் கெமர் மொழி பேசும் விவசாயிகள் இக்கோயிலை பிரசாத் டா சவாய் அல்லது டா கவாய் என அழைப்பர். சவாய் என்பது கெமர் மொழியில் மாங்காய், தாய் மொழியில் எருமை எனப் பொருள் படும். கம்போடியர்கள் இக்கோயிலை டா கிராபே என்பர். இதுவும் எருமை எனவே பொருள். 120 ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சு நடுகாண் பயணி எட்டியென் ஆய்மோனியே என்பவர் இக்கோயிலை பிரியா எய்செய் (Preah Eisei) அல்லது பிரியா ரைசெய் (Preah Risei) என அழைத்தார்[1]. இந்துத் தெய்வம் இயமனின் வாகனம் எருமை ஆகும்.

டா கிராபே கோயிலின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் இயற்கைப் பாறைகளைக் கொண்டுள்ளது. இதன் நடுப் பகுதியில் இயற்கையாக உருவான சுயம்பு லிங்கம் ஒன்று காணப்படுகிறது[2].

வரலாறு

தொகு

டா கிராபே கோயில் ஐந்தாம் ஜெயவர்மன் (கிபி 968-1001) காலத்தில் கட்டப்பட்டது[1].

இன்றைய நிலை

தொகு

இரு நாடுகளும் உரிமை கோரும் டா கிராபே கோயிலைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் எறிகணை மற்றும் துப்பாக்கித் தாக்குதல்கள் 2011 ஏப்ரல் 22 ஆம் நாள் இடம்பெற்றன. இத்தாக்குதல்களில் இரு தரப்புகளிலும் இருந்து 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்[3].

 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Prasat Ta Khwai (Ta Krabey)". Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2011-04-23.
  2. Briggs, p. 55, The Ancient Khmer Empire
  3. Thailand and Cambodia clash again along border, பிபிசி, ஏப்ரல் 23, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=டா_கிராபே_கோயில்&oldid=3556430" இலிருந்து மீள்விக்கப்பட்டது