டிராய், மிச்சிகன்

டிராய் (Troy) ஐக்கிய அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் பெருநகர டிட்ராயிட்டின் வடக்குப் புறநகர்ப்பகுதியில் ஓக்லாந்து மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமாகும். 2010 ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 80,980 ஆகும். மிச்சிகனில் இது 11வது பெரிய நகரமாக விளங்குகின்றது. பெருநகர டிட்ராய்ட்டின் வணிக, அங்காடி மையமாக டிராய் விளங்குகின்றது. இங்கு பல அலுவலகக் கட்டிடங்களும் மிக நவீன சாமர்செட் அங்காடி வளாகமும் உள்ளன.

டிராய், மிச்சிகன்
மாநகரம்
டிராயிலுள்ள 16 மைல் சாலையின் கிழகத்திய காட்சி
டிராயிலுள்ள 16 மைல் சாலையின் கிழகத்திய காட்சி
குறிக்கோளுரை: நாளைய நகரம் ... இன்று
மிச்சிகன் மாநிலத்தில் அமைவிடம்
மிச்சிகன் மாநிலத்தில் அமைவிடம்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மாநிலம்மிச்சிகன்
மாவட்டம்ஓக்லாந்து
அரசு
 • வகைமன்றம்-மேலாளர்
 • நகரத்தந்தைடேன் இசுலேட்டர்
 • நகர மேலாளர்பிரியன் கிழ்ச்னிக்[1]
பரப்பளவு[2]
 • மொத்தம்33.64 sq mi (87.13 km2)
 • நிலம்33.47 sq mi (86.69 km2)
 • நீர்0.17 sq mi (0.44 km2)
ஏற்றம்748 ft (228 m)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்80,980
 • Estimate (2012[3])82,212
 • அடர்த்தி2,419.5/sq mi (934.2/km2)
நேர வலயம்கி.நே.வ (ஒசநே-5)
 • கோடை (பசேநே)கி.ப.நே.வ (ஒசநே-4)
சிப் குறியீடுகள்48007, 48083, 48084, 48085, 48098, 48099
தொலைபேசி குறியீடு248, 947
பிப்சு குறியீடு26-80700
புவியியல் பெயர்த் தகவல் அமைப்பு எண்1615125[4]
இணையதளம்http://www.troymi.gov

2011இல் மிச்சிகனின் மிகவும் பாதுகாப்பான நகரமாக டிராய் மதிப்பிடப்பட்டுள்ளது. 2008இல் வீடு, கல்வி, பொருளியல் நிலை, மகிழ்கலை வாய்ப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டு சிஎன்என் மணி நடத்திய ஆய்வில் ஐக்கிய அமெரிக்காவின் "வாழ மிகச் சிறந்தவிடங்கள்" பட்டியலில் 22ஆம் இடத்தில் இருந்தது.[5] 2008இல் வீட்டு வருமானம் ஏறத்தாழ $79,000 இருந்த டிராய் ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் தாங்கத்தகு நகரங்களில் நான்காமிடத்தில் இருந்தது.[6][7]

புவியியல் தொகு

ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு நிறுவனத்தின் தரவுகளின்படி இந்நகரத்தின் பரப்பளவு 33.64 சதுர மைல்கள் (87.13 km2) ஆகும்; இதில் நிலப்பகுதி 33.47 சதுர மைல்கள் (86.69 km2), நீர்ப்பகுதி 0.17 சதுர மைல்கள் (0.44 km2) ஆகும்.[2] டிராயின் நிலநேர்க்கோடு: 42.605 N, நிலநிரைக்கோடு : 83.15 W ஆகும். சராசரி உயரம் 748 அடி (228 m) ஆகும்.

வானிலை தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், டிராய், மிச்சிகன் (48098)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °F (°C) 66
(18.9)
65
(18.3)
78
(25.6)
87
(30.6)
92
(33.3)
102
(38.9)
104
(40)
101
(38.3)
98
(36.7)
90
(32.2)
79
(26.1)
64
(17.8)
104
(40)
உயர் சராசரி °F (°C) 30
(-1.1)
34
(1.1)
45
(7.2)
58
(14.4)
70
(21.1)
79
(26.1)
82
(27.8)
80
(26.7)
73
(22.8)
60
(15.6)
46
(7.8)
34
(1.1)
57.6
(14.21)
தாழ் சராசரி °F (°C) 16
(-8.9)
18
(-7.8)
26
(-3.3)
36
(2.2)
48
(8.9)
57
(13.9)
61
(16.1)
60
(15.6)
53
(11.7)
42
(5.6)
32
(0)
22
(-5.6)
39.3
(4.03)
பதியப்பட்ட தாழ் °F (°C) -21
(-29.4)
-12
(-24.4)
-5
(-20.6)
8
(-13.3)
24
(-4.4)
34
(1.1)
41
(5)
40
(4.4)
31
(-0.6)
19
(-7.2)
2
(-16.7)
-11
(-23.9)
−21
(−29.4)
பொழிவு inches (mm) 1.77
(45)
2.02
(51.3)
2.18
(55.4)
2.75
(69.9)
3.16
(80.3)
3.25
(82.6)
2.86
(72.6)
2.88
(73.2)
3.10
(78.7)
2.97
(75.4)
2.75
(69.9)
2.20
(55.9)
31.89
(810)
ஆதாரம்: Intellicast [8]

மேற்சான்றுகள் தொகு

  1. "City Manager". troymi.gov. Archived from the original on 2013-01-15. பார்க்கப்பட்ட நாள் 2016-09-07.
  2. 2.0 2.1 "US Gazetteer files 2010". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Population Estimates". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2013-06-03.
  4. U.S. Geological Survey Geographic Names Information System: டிராய், மிச்சிகன்
  5. "Best places to live 2008". CNN. http://money.cnn.com/magazines/moneymag/bplive/2008/snapshots/PL2680700.html. 
  6. Gopal, Prashant. (August 29, 2008). America's Most and Least Affordable Housing Markets பரணிடப்பட்டது 2008-09-08 at the வந்தவழி இயந்திரம். Business Week
  7. "Troy city, Michigan - Fact Sheet - American FactFinder". Archived from the original on 2007-12-22. பார்க்கப்பட்ட நாள் 2016-09-07.
  8. "Troy Historic Averages in Michigan (48098)". Intellicast. பார்க்கப்பட்ட நாள் January 20, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராய்,_மிச்சிகன்&oldid=3759505" இலிருந்து மீள்விக்கப்பட்டது