டிராய் டேவிஸ் வழக்கு

டிராய் அந்தோணி டேவிஸ் (Troy Anthony Davis, அக்டோபர் 9, 1968 – செப்டம்பர் 21, 2011)[1][2] ஜியார்ஜியா மாநில சவன்னாவில் காவல்துறை அதிகாரி மார்க் மக்ஃபலியை ஆகத்து 19, 1989இல் கொலை செய்தக் குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஓர் ஆபிரிக்க அமெரிக்கர். பர்கர்கிங் என்ற விரைவுணவு விடுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மக்ஃபலி அண்மையிலிருந்த மகிழுந்து நிறுத்துமிடத்தில் அடிபட்டுக்கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்ற தடுக்க வந்தார்.1991ஆம் ஆண்டு விசாரணையில் ஏழு சாட்சிகள் டேவிஸ் மக்ஃபலியை சுடுவதைக் கண்டதாகவும் மேலும் இருவர் கொலை செய்ததை தங்களிடம் டேவிஸ் ஒப்புக்கொண்டதாகவும் சாட்சியம் அளித்தனர். கொலைக்குக் காரணமான துப்பாக்கியை கைப்பற்றாவிடினும் குற்றவிசாரணையி்ன்போது குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் டேவிஸ் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்திய துப்பாக்கி குண்டுகளுடன் சம்பவ இடத்தில் கைப்பற்றிய குண்டுகளுடன் தொடர்பு படுத்தி காவல்துறை சாட்சியமளித்தது. ஆகத்து 1991இல் முன்னதான ஓர் துப்பாக்கிச்சூடு உட்பட, பல்வேறு குற்றங்களுடன் கொலைக்குற்றம் புரிந்ததாக தீர்ப்பளிக்கப்பட்டு மரணதண்டனை அளிக்கப்பட்டது.

டிராய் டேவிஸ் வழக்கு
பிறப்பு(1968-10-09)அக்டோபர் 9, 1968
இறப்புசெப்டம்பர் 21, 2011(2011-09-21) (அகவை 42)
பட்ஸ் கௌன்ட்டி, ஜியார்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
தீர்ப்பு(கள்)கொடுமையான கொலை
தண்டனைமரணதண்டனை
தற்போதைய நிலைஜியார்ஜியா மாநில சிறையில் நிறைவேற்றப்பட்டது
டேவிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஜியார்ஜியா மாநில நோய் நாடல் மற்றும் வகையாக்க சிறை

குற்றவிசாரணையின் போது டேவிஸ் "குற்றம் புரியவில்லை" என மன்றாடியதுடன் தனது தண்டனை நிறைவேற்றப்படும்வரை தான் குற்றமற்றவர் என்றே கூறி வந்தார். தீர்ப்பு வழங்கலுக்கும் தண்டனை நிறைவேற்றுகைக்கும் இடைப்பட்ட 20 ஆண்டுகளில் டேவிசும் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்களின் ஆதரவை நாடினர். பன்னாட்டு மன்னிப்பு அவை மற்றும் தேசிய கருநிற மக்கள் முன்னேற்ற சங்கம் போன்ற அமைப்புகள் டேவிசின் நியாயத்திற்காக வாதாடின. முதன்மையான அரசியல்வாதிகள், முன்னாள் அமெரிக்க குடியரசுத்தலைவர் ஜிம்மி கார்டர் , மதிப்பிற்குரிய அல் ஷார்ப்டன், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், பேராயர் டெசுமான்ட் டுட்டு, ஜியார்ஜியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் குடியரசுத்தலைவர் வேட்பாளருமான பாப் பர் எனப் பலரும் நீதிமன்றங்கள் மீண்டும் சாட்சிபூர்வ விசாரணை நடத்த வேண்டும் என கோரினர். சூலை 2007, செப்டம்பர் 2008, அக்டோபர் 2008 களில் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தபோதும் ஒவ்வொரு முறையும் இடைக்காலத்தடையால் தள்ளிப் போயிற்று.

2009 இல், ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஜியார்ஜியா தென்மாவட்ட ஐக்கிய அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்திற்கு "குற்றவிசாரணையின்போது கிடைக்காத, டேவிசின் குற்றமற்றத்தன்மையை நிரூபிக்கும் வகையிலான புது சாட்சியங்கள்" ஏதேனும் உள்ளனவா என்று ஆராயுமாறு உத்தரவிட்டது. அத்தகைய சாட்சிய விசாரணை சூன், 2010 அன்று நடத்தப்பட்டது. டேவிஸ் தரப்பு ஒன்பதில் ஏழு சாட்சிகளிடமிருந்து தங்கள் சாட்சியத்தை மாற்றிக்கொள்ளும் அல்லது மீட்டுக்கொள்ளும் உறுதிமொழி ஆவணங்களை நீதிமன்றத்திற்கு அளித்தது. இவற்றில் சிலர் தாங்கள் காவல்துறையால் வற்புறுத்தப்பட்டதாகவும் வேறு சிலர் முதன்மை சாட்சிகளில் ஒருவரான சில்வெஸ்டர் ரெட் கோல்ஸ் இந்தக் கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருந்தனர். அரசுத்தரப்பில் விசாரணை வற்புறுத்தல் எதுவும் இன்றி நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை வழங்கியது. கோல்ஸ் கொலை செய்ததாக கூறப்பட்டது "வதந்தி" என தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகத்து 2010 அன்று வெளியிடப்பட்ட தீர்ப்பில் குற்றமும் தண்டனையும் உறுதிசெய்யப்பட்டன. இதனை அடுத்த மேல்முறையீடுகள், உச்சநீதிமன்றத்திற்கு உட்பட, நிராகரிக்கப்பட்டு நான்காவது முறையாக தண்டனை நிறைவேற்ற செப்டம்பர் 21, 2011 நாள் குறிக்கப்பட்டது.ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் ஜியார்ஜியா மன்னிப்பு மற்றும் பரோல் வாரியத்திற்கு மன்னிப்பு வழங்க கோரிய மனுவில் கையொப்பமிட்டனர்.[3] மன்னிப்பு வழங்க வாரியம் மறுத்ததையடுத்து[4] செப்டம்பர் 21 அன்று தனது முடிவை மாற்றிக்கொள்ள மறுத்தது.[5] ஐக்கிய அமெரிக்க கடைசிநேர முறையீடும் மறுக்கப்பட செப்டம்பர் 21, 2011 அன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Troy Davis put to death – This Just In – CNN.com Blogs". News.blogs.cnn.com. Archived from the original on டிசம்பர் 2, 2020. பார்க்கப்பட்ட நாள் September 22, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Davis executed". Yahoo.
  3. "Not In Our Name: Georgia Must Not Execute Troy Davis". Amnesty USA. September 22, 2011 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 11, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201111194548/https://blog.amnestyusa.org/deathpenalty/not-in-our-name-georgia-must-not-execute-troy-davis/. பார்த்த நாள்: September 22, 2011. 
  4. "Georgia Board Denies Clemency for Troy Davis". Fox News. September 20, 2011. http://www.foxnews.com/us/2011/09/20/georgia-board-denies-clemency-for-troy-davis/. பார்த்த நாள்: September 20, 2011. 
  5. "georgia state board of pardons and paroles". Pap.state.ga.us. Archived from the original on செப்டம்பர் 23, 2011. பார்க்கப்பட்ட நாள் September 22, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Troy Davis Executed After Stay Denied". ABC News. September 22, 2011. http://abcnews.go.com/US/troy-davis-executed-stay-denied-supreme-court/story?id=14571862. பார்த்த நாள்: September 22, 2011. 

வெளியிணைப்புகள்

தொகு
ஐக்கிய அமெரிக்க உயர்நீதிமன்றம்
ஐக்கிய அமெரிக்க மாவட்ட நீதிமன்றம்
பல்லூடகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராய்_டேவிஸ்_வழக்கு&oldid=3930539" இலிருந்து மீள்விக்கப்பட்டது