டிரெவர் பெய்லிஸ்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

திரெவர் பெய்லிசு (Trevor Harley Bayliss, பிறப்பு: திசம்பர் 21, 1962) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர் ஆவார்[1]. இவர் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநில அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் அவ்வணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆவார்[2].

பயிற்சியாளராக

தொகு

நியூ சவுத் வேல்சு மாநில அணிக்காக விளையாடிய பின்னர் மாநில துடுப்பாட்டக் கழகத்தின் திட்டமிடல் அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் நியூ சவுத் வேல்சு மாநில இரண்டாவது XI அணியின் பயிற்சியாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 2004-2005 காலப்பகுதியில் மாநில அணிப் பயிற்சியாளராகி, பியூரா கிண்ணத் தொடரில் அவ்வணியை இறுதிப் போட்டி வரை தயார்ப்படுத்தியிருந்தார். இறுதிப் போட்டியில் குயின்சுலாந்து அணியொடம் ஒரு விக்கெட்டால் நியூ சவுத் வேல்சு அணி தோற்றது. அடுத்த ஆண்டில் ஐஎன்சி கிண்ணத்தை வென்றது[3].

2007 இல் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த ஆத்திரேலியாவின் டொம் மூடி அப்பதவியில் இருந்து விலகவே பெய்லிசு இலங்கை அணியின் பயிற்சியாளராக ஆகத்து 2007 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். குயின்சுலாந்து புல்சு அணியின் பயிற்சியாளர் டெரி ஒலிவர் இவருடன் இப்பணிக்காகப் போட்டியிட்டார். முன்னாள் இலங்கை அணி வீரர்கள் அரவிந்த டி சில்வா, ரஞ்சன் மடுகல்ல, மைக்கல் திசேரா, சிடத் வெத்திமுனி, பந்துல வர்ணபுர ஆகியோரைக் கொண்ட தெரிவுக் குழு டிரெவர் பெய்லிசைத் தெரிவு செய்தது.[2].

மேற்கோள்கள்

தொகு
  1. ராய்ட்டர்ஸ் "Trevor Bayliss named Sri Lanka cricket coach" 15 சூலை 2007[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "The Australian, "Bayliss named new Sri Lanka coach" July 15 2007". Archived from the original on 2007-06-22. பார்க்கப்பட்ட நாள் 2011-02-19.
  3. கிரிக்இன்ஃபோ profile "Trevor Bayliss"
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரெவர்_பெய்லிஸ்&oldid=3986719" இலிருந்து மீள்விக்கப்பட்டது