அரவிந்த டி சில்வா

தேசபந்து பின்னாதுவகே அரவிந்த டி சில்வா (Deshabandu Pinnaduwage Aravinda de Silva சிங்களம்: අරවින්ද ද සිල්වා( பிறப்பு: அக்டோபர் 17, 1965) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாளர் ஆவார் . கொழும்பில் பிறந்த இவர் டீ. எஸ். சேனானாயகே மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டத்திலும் விளையாடியுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை இலங்கைத் துடுப்பாட்ட அணி வெல்வதற்கு பிரதான பங்களிப்பை அளித்தார். இலங்கைத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பல பதவிகளில் இருந்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து 2003 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

அரவிந்த டி சில்வா
SPGPECT120.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பின்னாதுவகே அரவிந்த டி சில்வா
பிறப்பு17 அக்டோபர் 1965 (1965-10-17) (அகவை 57)
கொழும்பு, இலங்கை
பட்டப்பெயர்Mad Max
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை புறத்திருப்பம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 93)23 ஆகஸ்ட் 1984 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு23 ஜூலை 2002 எ வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 308)31 மார்ச் 1984 எ நியூசிலாந்து
கடைசி ஒநாப18 மார்ச் 2003 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 93 308 220 392
ஓட்டங்கள் 6361 9284 15000 12095
மட்டையாட்ட சராசரி 42.97 34.90 48.38 36.32
100கள்/50கள் 20/22 11/64 43/71 17/77
அதியுயர் ஓட்டம் 267 145 267 158*
வீசிய பந்துகள் 2595 5148 9005 7377
வீழ்த்தல்கள் 29 106 129 156
பந்துவீச்சு சராசரி 41.65 39.40 29.17 36.30
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 8 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 3/30 4/30 7/24 4/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
43/– 95/– 108/– 116/–
மூலம்: Cricinfo, 25 ஆகஸ்ட் 2007

கல்விதொகு

அரவிந்த டி சில்வா கொழும்பில் உள்ள டி. எஸ். சேனானாயகே கல்லூரியிலும் , இசிபதானா கல்லூரியிலும் பயின்றார்.

உள்ளூர் போட்டிகள்தொகு

இவர் இங்கிலாந்தின் கென்ட் மாகாண அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டங்களில் 1995 ஆம் ஆண்டுகளில் விளையாடினார். இவரின் துடுப்பாட்ட வாழ்க்கையில் இது திருப்புமுனையாக அமைந்தது.

சர்வதேச போட்டிகள்தொகு

1984 ஆம் ஆண்டில் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[1] இவர் துவக்க காலங்களில் அதிரடியாக ரன் குவிப்பவர் ஆனால் நிலையில்லாத ஆட்டத் திறனை வெளிப்படுத்தக் கூடியவர் என்று அறியப்பட்டார். இதனால் மேட் மேக்ஸ் என்ற புனைபெயரால் அழைக்கப்பட்டார். பின் இவரது அதிரடியாக அடிக்கும் திறன்களால் இவர் பரவலாக அறியப்படுகிறார். தனது மூர்க்கத்தனமான ஆட்டத் திறனைப் பற்றிக் கூறும்போது இது தான் எனது இயற்கையான விளையாட்டு முறை. இவ்வாறு விளையாடும் போது தான் எனக்கு நம்பிக்கை வருகிறது. எனவே எனது விளையாடும் முறையினை மாற்றம் செய்யவேண்டியதில்லை. பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அவர்கள் அதனைச் செய்யட்டும்.ஆனால் இது தான் எனது விளையாடும் முறை. என்னுடைய இளவயதில் இருந்து இந்தமாதிரி தான் விளையாடி வருகிறேன் எனத் தெரிவித்தார்.[2]

1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை இலங்கைத் துடுப்பாட்ட அணி வெல்வதற்கு பிரதான பங்களிப்பை அளித்தார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தது மட்டுமின்றி மூன்று இலக்குகளை எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். தேர்வுத் துடுப்பாட்டத்தின் இரு பகுதிகளிலும் நூறு அடித்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தச் சாதனையை இந்தியத் துடுப்பாட்ட அணியைச் சார்ந்த சுனில் காவஸ்கர், ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த ரிக்கி பாண்டிங் ஆகியோர் மூன்று முறைகள் அடித்துள்ளனர்.

பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.[3] பின் அந்தத் தொடரின் இரண்டாவது போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பாக இவர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்தப் போட்டியின் முதல் பகுதியில் ரன்கள் எதுவும் இவர் எடுக்கவில்லை. ஆனால் இரண்டாவது பகுதியில் சந்திகா ஹதுருசிங்ஹாவுடன் இணைந்து 176 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.[4] மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று அந்தத் தொடரை 2-1 என்று வெற்றி பெற்றது. மேலும் அதே அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரையும் 2-1 என வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் போது 5 இலக்குகள் எடுத்து இலங்கை வீரர்களில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும் இவரின் பந்துவீச்சு சராசரி 17.80 ஆகும்.[3][5]

சான்றுகள்தொகு

  1. "TEST: England v Sri Lanka at Lord's, 23–28 Aug 1984". கிரிக்இன்ஃபோ. 28 August 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 August 2007 அன்று பார்க்கப்பட்டது.
  2. Murray Hedgcock. "Hi Ho de Silva". கிரிக்இன்ஃபோ. 4 August 2007 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "Sri Lanka in Pakistan 1995/96". CricketArchive. 21 செப்டம்பர் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 August 2007 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  4. "2nd Test: Pakistan v Sri Lanka at Faisalabad, 15–19 Sep 1995. Match Report". கிரிக்இன்ஃபோ. 5 August 2007 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Sri Lanka in Pakistan Aug/Oct 1995 – ODI Averages". கிரிக்இன்ஃபோ. 5 August 2007 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த_டி_சில்வா&oldid=3585967" இருந்து மீள்விக்கப்பட்டது