டிரைக்குளோசான்

டிரைக்குளோசான் என்னும் வேதிப்பொருள் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்புத் தன்மை கொண்ட ஒரு பொருள். இதில் மூன்று குளோரின் அணுக்கள் இருப்பதால் டிரைகுளோ (டிரை, tri =மூன்று) என்னும் முன்னொட்டு உள்ளது. இது ஒரு பாலிகுளோரோ பீனாக்ஃசி பீனால் (polychloro phenoxy phenol). மக்கள் பயன்படுத்தும் மிகப்பல நுகர்பொருட்களில் டிரைக்குளோசான் பயன்படுத்தப்பட்டாலும், பற்பசையில், பல்லின் ஈற்றில் வீக்கம் உண்டாகும் பல்லரணை அல்லது பல்லீறுக்கட்டி எனப்படும் சிஞ்சிவைட்டிசு (gingivitis) நோயைத் தடுபதற்காகச் சேர்ப்பதைத் தவிர, வேறு கூடுதலான தூய்நலம் பேணும் நல்விளைவுகள் ஏதும் இருப்பதற்கான சான்றுகள் இல்லை (அமெரிக்க உணவு, மருந்து பராமரிப்பகக் (FDA) கணிப்பின் படி இல்லை)[1] டிரைக்குளோசான் தற்பொழுது அமெரிக்க உணவு, மருந்து பராமரிப்பகத்தின் (FDA) மீள்பார்வைக்கு உட்பட்டுள்ளது [1] இது தசையின் சுருங்கும் தொழிற்பாட்டை எலிகளில் சீர்குலைக்கின்றது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.[2][3]

டிரைக்குளோசான்
டிரைக்குளோசான்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
5-chloro-2-(2,4-dichlorophenoxy)phenol
வேறு பெயர்கள்
2,4,4'-trichloro-2'-hydroxydiphenyl ether,
5-chloro-(2,4-dichlorophenoxy)phenol,
trichloro-2'-hydroxydiphenyl ether,
CH-3565, Lexol 300, Irgasan DP 300
இனங்காட்டிகள்
3380-34-5 Y
ChEMBL ChEMBL849 Y
ChemSpider 5363 Y
InChI
  • InChI=1S/C12H7Cl3O2/c13-7-1-3-11(9(15)5-7)17-12-4-2-8(14)6-10(12)16/h1-6,16H Y
    Key: XEFQLINVKFYRCS-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D06226 Y
பப்கெம் 5564
  • Clc2cc(Cl)ccc2Oc1ccc(Cl)cc1O
UNII 4NM5039Y5X Y
பண்புகள்
C12H7Cl3O2
வாய்ப்பாட்டு எடை 289.54 g/mol
தோற்றம் white powdered solid
அடர்த்தி 1.49g/cm3
உருகுநிலை 55-57 °C
கொதிநிலை 120 °C (248 °F; 393 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 162.2°C
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

வேதியியல் கட்டமைப்பும் பண்புகளும்

தொகு

இந்தக் கரிமவேதிப் பொருள் வெள்ளை நிறத்தில் தூள்வடிவில் காணப்படும் ஓரு திண்மம். இதற்கு மெலிதான பீனால் வாடை (மணம்) உண்டு. குளோரின் சேர்ந்த அரோமாட்டிக் வளைய கட்டமைப்புக் கொண்ட, ஈத்தர் (ether), பீனால் (phenol) ஆகிய இரண்டு வினைக்குழுகளும் கொண்ட, ஒரு வேதிப்பொருள். பீனால் வேதிப்பொருள்கள் பலவும் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை கொண்டவை. டிரைக்குளோசான் மிகவும் சிறிதளவே நீரில் கரையும் தன்மை கொண்டது, ஆனால் எத்தனால், மெத்தனால், டையெத்தில் ஈத்தர் ஆகியவற்றிலும், சோடியம் ஐதராக்சைடு போன்ற அடர்த்தியான காரக்கரைசல்களிலும் கரையும் தன்மை கொண்டது. டிரைகுளோசானை 2,4-டைக்குளோரோபீனால் (2,4-dichlorophenol) இல் இருந்து உருவாக்கலாம்.

பொருளுருவாக்கம்

தொகு

2,4,4-டிரைக்குளோரோ-2-மெத்தாக்சிடைபீனைல் ஈத்தர்(2,4,4-trichloro-2-methoxydiphenyl ether) ஐ அலுமினியம் குளோரைடோடு பென்சீனில் மீளாவிப்படிவு முறையில் (reflux) உருவாக்கப்படுகின்றது.

வேதிவினைகள்

தொகு

20 °C வெப்பநிலையில் சல்பூரைல் குளோரைடோடு (SO2Cl2)சேர்த்து தொழிற்படச்செய்தால் 2- (2,4-டைகுளோரோ-பீனாக்சி)-4,5-டைக்குளோரோ-பீனால் (2-(2,4-dichloro-phenoxy)-4,5-dichloro-phenol) உருவாக்கலாம்.

பயன்பாடு

தொகு

டிரைக்குளோசான் என்னும் வேதிப்பொருள் 1972 முதல் பயன்பாட்டில் உள்ளது. இது சோப்புகளில் சிறிதளவும் (0.10-1.00%), வியர்வைஎதிர்ப்பிகள் (டியோடரன்ட், deodorant), பற்பசைகள், சவரக்குழைமங்கள், வாய்க்கொப்பளிப்பு நீர்மங்கள் (mouth wash), தூய்மை செய்யப்பயன்படும் தூய்ப்பொருட்கள் போன்றவற்றில் சிறிதளவு சேர்க்கப்படுகின்றது. குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் முதல் காலுறை, படுக்கைத்துனிகள், சமையல் பயன்கருவிகள் முதலான மிகப்பல பொருட்களிலும் சேர்க்கப்படுகின்றது[4]. கைகளிலும் பொருள்களிலும் பாக்டீரியா ஒட்டுவதை டிரைக்குளோசான் தடுப்பதாகக் கருதபப்டுகின்றது. அண்மையில் மெத்திசிலின் எதிர்ப்பு இசுட்டாஃவைலோகோக்கசு ஓரியாசு (மெ.எ.இசு.ஓ)(Methicillin-resistant Staphylococcus aureus, MRSA) தங்கள் தோலில் கொண்டிருக்கும் நோயாளிகளுக்குக் குளிக்கும்பொழுது 2% டுரைக்குளோசான் சேர்ப்பதை ஒரு தேவைபப்டும் நல்வழக்கமாகப் பின்பற்றுகின்றனர்[5]. இது இந்த எதிர்ப்புத்தன்மை கொண்ட பாக்டீரியாப் பரவலை வெற்றியுடன் தடுத்ததின் விளைவாக இந்த முறை பின்பற்றப்படுகின்றது [6][7]

மேற்கோள்களும் உசாத்துணைகளும்

தொகு
  1. 1.0 1.1 "Triclosan: What Consumers Should Know". U S Food and Drug Administration. 8 April 2010. பார்க்கப்பட்ட நாள் 13 April 2010.
  2. "Antibacterial agent Triclosan shown to hinder muscle movement in mice, fish". 14 ஆகத்து 2012. Archived from the original on 2012-08-16. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2012.
  3. "Chemical in many antibacterial soaps linked with impaired muscle function". 14 ஆகத்து 2012. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2012.
  4. வார்ப்புரு:HPD
  5. Coia JE, Duckworth GJ, Edwards DI, et al. (2006). "Guidelines for the control and prevention of meticillin-resistant Staphylococcus aureus (MRSA) in healthcare facilities". J. Hosp. Infect. 63 Suppl 1: S1–44. doi:10.1016/j.jhin.2006.01.001. பப்மெட்:16581155. 
  6. Brady LM, Thomson M, Palmer MA, Harkness JL (1990). "Successful control of endemic MRSA in a cardiothoracic surgical unit". Med. J. Aust. 152 (5): 240–5. பப்மெட்:2255283. 
  7. Zafar AB, Butler RC, Reese DJ, Gaydos LA, Mennonna PA (1995). "Use of 0.3% triclosan (Bacti-Stat) to eradicate an outbreak of methicillin-resistant Staphylococcus aureus in a neonatal nursery". American journal of infection control 23 (3): 200–8. doi:10.1016/0196-6553(95)90042-X. பப்மெட்:7677266. https://archive.org/details/sim_american-journal-of-infection-control_1995-06_23_3/page/200. 

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரைக்குளோசான்&oldid=3556673" இலிருந்து மீள்விக்கப்பட்டது