டி. எம். வர்கீசு

இந்திய அரசியல்வாதி

டி.எம். வர்கீசு (T. M. Varghese) (1886-1961) இவர் ஓர் சுதந்திர போராட்ட வீரரும், அரசியல்வாதியுமாவார்

சட்டமன்ற அமைப்பு தொகு

திருவிதாங்கூரில் புதிய சட்டமன்ற அமைப்பை உருவாக்க மகாராஜா சித்திரைத் திருநாள் பலராம வர்மன் 1932 அக்டோபர் 21 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இது 1933 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த உத்தரவின் படி, கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி இடங்கள் சமூகங்களிடையே பிரிக்கப்பட்டன: சமூகம் (மக்கள் தொகை (பத்தாயிரத்தில்), சட்டமன்றத்தில் பிரதிநிதிகளின் எண்ணிக்கை): - கிறிஸ்தவர்கள் (160.4, 10); ஈழவர்கள் (86.9, 3); நாயர்கள் (86.8, 36); மற்ற இந்துக்கள் (47.9, 15); முஸ்லிம்கள் (35.3, 3) குறைந்த சாதி (91.7, 1) ஐரோப்பியர்கள் (578 பேர், 2). மொத்த மக்கள் தொகை 5,090,000. சட்டசபையில் மொத்த இடங்கள் 70. [1]

தேர்தல் தொகு

பொதுச் சேவைக்கான நியமனங்களில் வகுப்புவாத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் கூட்டு அரசியல் கட்சியின் கோரிக்கைகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. 1936 ஆகத்து மாதத்தில் ஒரு புதிய அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும், திருவிதாங்கூர் மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் 1937 ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்டன. கூட்டு அரசியல் கட்சியின் வேட்பாளராக டி.எம். வர்கீசு தேர்தலில் வெற்றி பெற்றார். சிறீ மூலம் பிரபல சட்டசபையில் இவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது வெளிப்படையான தேர்தல்களால் அடையக்கூடிய மிக உயர்ந்த பதவியாகும்.

பதவி பறிப்பு தொகு

1935 இல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சி.கேசவன், தேர்தலுக்குப் பின்னர் 1937 இல் விடுவிக்கப்பட்டார். கொல்லத்திலும் ஆலப்புழாவிலும் கேசவனை வரவேற்ற வர்கீசு, "திருவிதாங்கூரின் 5.1 லட்சம் மக்களின் பெயரிலும், சார்பிலும், நான் மகிழ்ச்சியுடன் உடன்படுகிறேன். மிகவும் சுய தியாகம் செய்யும் தனிநபர் சி. கேசவனுக்கு மனமார்ந்த வரவேற்பு" என்றார். [2] இதனால், திவான் (சிறீ மூலம் பிரபல சட்டமன்றத்தின் முன்னாள் அலுவல் தலைவர்) கோபமடைந்தார். வர்கீசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில், 42 பேர் பிரேரணையை ஆதரித்தனர், 24 பேர் எதிர்த்தனர். 2 பேர் நடுநிலை வகித்தனர். இதனால் வர்கீசு துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுதல் தொகு

திருவிதாங்கூர் மாநில காங்கிரசு கட்சியின் நிறுவன உறுப்பினராக வர்கீசு இருந்தார். திருவிதாங்கூர் மாநிலத்தின் திவானான சி.பி.ராமசாமி ஐயருக்கு எதிரான (பொறுப்பான அரசாங்க போராட்டம்) போராட்டத்தின் தலைவராக இவர் இருந்தார். 1947 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் பெற்றபோது, திருவிதாங்கூர் இந்திய ஒன்றியத்தின் மாநிலமாக மாறியது. திருவிதாங்கூர் சட்டமன்றத்திற்கான முதல் பொதுத் தேர்தலில், திருவிதாங்கூரும் கொச்சியும் ஒன்றிணைந்த பின்னர் வர்கீசு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்துறை அமைச்சரானார். திருவிதாங்கூர்-கொச்சி சட்டமன்றத்தின் முதல் சபாநாயகராகவும் இருந்தார். 1951 இல் மீண்டும் உள்துறை அமைச்சரானார். 1955 இல் இவர் அரசியலில் இருந்து விலகினார்.

இறப்பு தொகு

டி.எம். வர்கீசு 1961 இல் இறந்தார். இவருக்கு 11 குழந்தைகள் இருந்தன.

குறிப்புகள் தொகு

  1. Saroja Sundararajan [2002] Sir C. P. Ramaswami Aiyar- a biography, Page 293.
  2. Saroja Sundararajan [2002]. Sir C. P. Ramaswamy Aiyar- a biography, Page 147.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._வர்கீசு&oldid=3285713" இலிருந்து மீள்விக்கப்பட்டது