டு ஃபூ
டு ஃபூ (Du Fu, சீனம்: 杜甫; பின்யின்: Dù Fǔ; வேட்-கில்சு: Tu Fu; 712–770) தாங் வம்ச காலத்தில் வாழ்ந்த ஓர் புகழ்பெற்ற சீன கவிஞர். லி பையுடன் இவரும் சீனத்தின் கவிஞர்களிலேயே சிறந்த கவிஞராகக் கருதப்படுகிறார்.[1] தனது நாட்டிற்கு சிறந்த அரசு ஊழியனாகப் பணிபுரிய பேரவா கொண்டிருந்த டு ஃபூவினால் அதற்குத் தக்கவாறு தம்மை மாற்றிக்கொள்ள இயலவில்லை. 755இல் நிகழ்ந்த அன் லூஷன் புரட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட டு ஃபூ தமது கடைசி 15 ஆண்டுகள் தொடர்ந்த குழப்பங்களுடனேயே கழித்தார்.
டு ஃபூ (杜甫) | |
---|---|
டு ஃபூ வாழ்நாள்காலத்திய படம் கிடைக்கவில்லை; இது பிற்காலத்தில் ஓர் ஓவியர் வரைந்ததாகும். | |
பிறப்பு | 712 |
இறப்பு | 770 |
தொழில் | கவிஞர் |
துவக்கத்தில் பிற கவிஞர்களுக்கு அறியப்படாதிருந்தபோதும் இவரது படைப்புக்கள் சீனத்தின் மற்றும் சப்பானின் இலக்கியப் பண்பாட்டில் பெரும் தாக்கமேற்படுத்தியுள்ளது. இவரது கவிதைகளில் 1500 கவிதைகள் காலத்தினால் அழியாது காக்கப்பட்டுள்ளன.[1] டு ஃபூ வரலாற்றுக் கவிஞர் என்றும் ஞானி-கவிஞர் என்றும் சீன மக்களிடையே அறியப்படுகிறார். மேற்கத்திய பண்பாட்டினருக்கு சேக்சுபியர், மில்டன், வேர்ட்ஸ்வொர்த், ஹியூகோ போன்றோருக்கு இணையாக இவர் அறிமுகப்படுத்தப்படுகிறார்.[2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Tu Fu's poems பரணிடப்பட்டது 2004-08-17 at the வந்தவழி இயந்திரம் included in 300 Selected Tang poems, translated by Witter Bynner
- Du Fu: Poems A collection of Du Fu's poetry by multiple translators.
- Du Fu in English at Poems Found in Translation
- டு ஃபூ திறந்த ஆவணத் திட்டத்தில்
- Du Fu's poems organized roughly by date written; shows both simplified and traditional characters