டெக்காமெத்தில்சிருக்கோனோசின் டைகுளோரைடு

வேதிச் சேர்மம்

டெக்காமெத்தில்சிருக்கோனோசின் டைகுளோரைடு (Decamethylzirconocene dichloride) என்பது Cp*2ZrCl2 என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமசிருக்கோனியம் சேர்மம் ஆகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள Cp* என்பது C5(CH3)5 என்ற ஓர் அலகைக் குறிக்கும். பெண்டாமெத்தில்சைக்ளோபெண்டாட்டையீனிலிருந்து வழிப்பெறுதியாக இச்சேர்மம் பெறப்படுகிறது. வெண்மை நிறத்துடன் காற்றில் நிலைப்புத் தன்மை கொண்டதாக காணப்படும் டெக்காமெத்தில்சிருக்கோனோசின் டைகுளோரைடு முனைவற்ற கரைப்பான்களான பென்சீன், கார்பன் டெட்ராகுளோரைடு, டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும். இந்த ஒருங்கிணைவுச் சேர்மம் விரிவான ஆராய்ச்சிக்கு உட்பட்டதாகும். டைநைட்ரசன் ஒருங்கிணைவு [Cp*2Zr]2(N2)3).[1] போன்ற பல ஒருங்கிணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது. எத்திலீன் மற்றும் புரோப்பிலீன் சேர்மங்களின் பலபடியாக்கல் வினைகளுக்கு இதுவொரு முன்வினையூக்கியாக பயன்படுத்தப்படுகிறது. [2]

டெக்காமெத்தில்சிருக்கோனோசின் டைகுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிசு(பெண்டாமெத்தில்சைக்ளோபெண்டாடையீனைல்)சிருக்கோனியம் டைகுளோரைடு
இனங்காட்டிகள்
54039-38-2
ChemSpider 17339332
InChI
  • InChI=1S/2C10H15.2ClH.Zr/c2*1-6-7(2)9(4)10(5)8(6)3;;;/h2*1-5H3;2*1H;/q2*-1;;;+4/p-2
    Key: UJYDWRDELGVHLP-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5148137
  • C[C-]1C(=C(C(=C1C)C)C)C.C[C-]1C(=C(C(=C1C)C)C)C.Cl[Zr+2]Cl
பண்புகள்
C20H30Cl2Zr
வாய்ப்பாட்டு எடை 432.58 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.451 கி/செ.மீ3
உருகுநிலை > 300 °C (572 °F; 573 K)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H312, H314, H332
P260, P261, P264, P270, P271, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+312, P304+340, P305+351+338, P310
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேலும் படிக்க

தொகு
  • Buchwald, S. L.; Nielsen, R. B. (1988). "Group 4 Metal Complexes of Benzynes, Cycloalkynes, Acyclic Alkynes, and Alkenes". Chemical Reviews 88: 1047–1058. doi:10.1021/cr00089a004. 
  • Rosenthal, U. (2000). "What Do Titano- and Zirconocenes Do with Diynes and Polyynes?". Chemical Reviews 33: 119–129. doi:10.1021/ar9900109. 

மேற்கோள்கள்

தொகு
  1. Sikora, David J.; Moriarty, Kevin J.; Rausch, Marvin D. (1990). "Dicarbonylbis(η5 -Cyclopentadienyl) Complexes of Titanium, Zirconium, and Hafnium". Inorganic Syntheses 28: 248–257. doi:10.1002/9780470132593.ch64. 
  2. Resconi, Luigi; Piemontesi, Fabrizio; Franciscono, Giuseppe; Abis, Luigi; Fiorani, Tiziana (1992). "Olefin Polymerization at Bis(pentamethylcyclopentadienyl)zirconium and -hafnium Centers: Chain-Transfer Mechanisms". Journal of the American Chemical Society 114: 1025–1032. doi:10.1021/ja00029a035.