டெம்புரோங்கு மாவட்டம்

டெம்புரோங்கு (Temburong) மாவட்டம் புரூணை நாட்டின் கிழக்குக்கோடி மாவட்டமாக அமைந்துள்ளது. மலேசியா, புரூணை விரிகுடா ஆகியவற்றால் புரூணையின் எஞ்சிய பகுதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட சிறு பகுதியாக உள்ளது. தெம்புரோங்கு மாவட்டத்தின் தலைநகரம் பங்கர் என்ற சிறுநகரம் ஆகும். மேலும், மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரம் பெக்கான் பங்கர் ஆகும்.

டெம்புரோங்கு
Temburong
மாவட்டம்
Capitalபெகான் பங்கர்
பரப்பளவு
 • டெம்புரோங்கு மாவட்டம்1,304 km2 (503 sq mi)
மக்கள்தொகை (2011)
 • டெம்புரோங்கு மாவட்டம்8,852
 • அடர்த்தி6.8/km2 (18/sq mi)

புவியியல் தொகு

இம்மாவட்டத்திற்கு வடக்கில் புரூணை விரிகுடாவும், சரவாக்கும், கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் மலேசியாவும் எல்லைகளாக உள்ளன. 1166 கிலோ மீட்டர் 2 அல்லது 450 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ள இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 9300 நபர்களாகும்.

சுங்கை டெம்புரோங்கு ஆறு, டெம்புரோங்கு மாவட்டம் முழுவதிலும் பாய்கிறது. மலேசியாவுடன் எல்லை கொண்டுள்ள மேற்கு பகுதியில் சுங்கை பண்டாருவான் ஆறு உருவாகி பாய்கிறது.

 
டெம்புரோங்கு மாவட்டத்தின் துணைமாவட்டங்கள்

டெம்புரோங்கு மாவட்டம் மேலும் ஐந்து துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

  • அமோ
  • பங்கர்
  • பாட்டு அபொய்
  • போகோக்
  • லாபு என்பன அவ்வாறு பிரிக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களாகும்.

புரூணை நாட்டின் முதலாவது தேசிய பூங்காவான உலு டெம்புரோங்கு தேசியப் பூங்கா இம்மாவட்டத்திற்குத் தெற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. டெம்புரோங்கு காட்டுப்பகுதியின் 550 கிலோ மீட்டர் 2 அல்லது 210 சதுரமைல் பரப்பளவில் இப்பூங்கா விரிந்து பரவியுள்ளது. மேலும், இத்தேசியப் பூங்காவில் பெலாலாங்கு மழைக்காடு களக்கல்வி மையம் என்ற பெயரில் ஒரு அறிவியல் ஆய்வு மைய வசதியும் உள்ளது. இக்கல்வி மையத்திற்கு நீர்வழியாக படகில் பயணம் செய்துதான் செல்ல முடியும்.

சமீபத்தில் குவாலா பெலாலாங்கு நிலப்பரப்பில், 25 எக்டேர்கள் அல்லது 62 ஏக்கர்கள் நிலப்பகுதியானது, ஆராய்ச்சித் திட்டத்தின் கூட்டு முயற்சிக்காக ஒதுக்கப்பட்டது. புரூணை தருசலாம் பல்கலைக் கழகம், குவாலா பெலாலாங்கு கள ஆய்வுகள் மற்றும் சுமித்சோனியன் வெப்ப மண்டல ஆய்வு நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இக்கூட்டு முயற்சியில் ஈடுபட்டன. இத்திட்டம் ”பெலாலாங்கு மழைக்காடுகள் அனுபவம்” என்ற பெயரால் அழைக்கப்பட்டது. புரூனையிலுள்ள ஆங்காங் மற்றும் சாங்காய் வங்கிசார் கூட்டுரிமை ஆணையம் இத்திட்டத்திற்கான நிதியுதவியை நல்கியது [1].

தேசியப் பூங்காவின் உள்ளேயே ஒரு வெளிப்புறத் தொடர்பு கல்வி மையமும் உள்ளது.

பங்கர் வழியாக உட்புறக் கிராமங்களுக்குச் செல்லும் 67 கிலோமீட்டர் அல்லது 42 மைல் நீளமுள்ள சாலைகள் டெம்புரோங் மாவட்டத்தில் காணப்படுகின்றன. இவற்றுடன் கூடுதலாக மேலும் 54 கிலோமீட்டர் அல்லது 34 மைல் நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள் உட்புறமுள்ள கிராமங்களை இணைக்கின்றன.

முவாரா மற்றும் டெம்புரோங்கு மாவட்டங்களை இணைக்கும் 30 கிலோமீட்டர் அல்லது 19 மைல் நீளத்திலான ஒரு புதிய சாலை வழி 2019 ஆம் ஆண்டில் அமைத்து முடிக்கும் விதமாக திட்டமிடப்பட்டது [2]. இப்பாதையின் 14 கிலோமீட்டர் அல்லது 8.7 மைல் நீளப்பாதை வழியானது புரூணை விரிகுடா வழியாக செல்கிறது [3]. டெம்புரோங்கு மாவட்டத்தின் பெரும்பகுதி தூய்மையான மாசற்ற [4] காடுகளால் நிறைந்துள்ளது. இதனால் சூழலுக்குக் கேடு விளைவிக்காத சூழலியல் சுற்றுலாத் தொழில் இம்மாவட்டத்தில் தீவிரமாக வளர்ச்சியடைந்து வருகிறது. சூழலியல் சுற்றுலாவை பரவலாக்கும் திட்டமாக “கட்டி-கட்டி டெம்புரோங்கு” (டெம்புரோங்கு விடுமுறை நாட்கள்) என்ற திட்டமொன்று 2008 ஆம் ஆண்டின் இறுதியில் துவங்கப்பட்டது. ”கெனாலி நெகர கிடானி” (உங்களது நாட்டை அறியுங்கள்) என்ற உள்ளூர் சுற்றுலா குழு இத்திட்டத்தை முன்னெடுத்து தொடங்கியது. உள்ளூர் மக்களையும், வெளிநாடுகளில் இருந்து புரூணைக்கு வந்து இம்மாவட்டத்தில் பயணம் செய்பவர்களையும் ஊக்குவிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். புரூணை அருகேயுள்ள போர்னியோ மழைக்காடுகள் திட்டத்திற்கு, மேற்கண்ட ஊக்குவிப்புத் திட்ட நிகழ்வுகள் நல்லதொரு தொடக்கமாக அமைந்தது.

கல்வி தொகு

பங்கரில் அமைந்துள்ள எசு.எம்.சுல்தான் அசன் உயர் நிலைப்பள்ளி மட்டுமே இம்மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே பள்ளிக்கூடமாகும். இதுதவிர மாவட்டம் முழுவதும் 14 தொடக்கப்பள்ளிகள் கல்வியளிக்கும் பணியில் ஈடுபடுகின்றன.

உடல்நலம் தொகு

பெங்கிரியன் இசுடேரி ஆய்சா மரியம் மருத்துவமனை என்ற ஒரு மருத்துவமனை 1987 ஆம் ஆண்டு 10 மில்லியன் டாலர் மதிப்பில் இம்மாவட்டத்தில் கட்டப்பட்டது. 50 படுக்கை வசதிகளுடன் கூடிய இம்மருத்துவமனையில் பல்வகை மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. பல கிராமப்புற மருத்துவமனைகளும் இங்கு மக்களின் உடல்நலம் பேணுகின்றன.

பாதுகாப்பு தொகு

பங்கர் இராணுவ முகாமில் இம்மாவட்டத்திற்கான ஒரு இராணுவப் படை மாவட்டத்தின் பாதுகாப்பிற்காக உள்ளது. பங்கரில் ஒரு பெரிய காவல் நிலையமும், புனியில் ஒரு சிறிய காவல்நிலையமும் செயல்படுகின்றன.

பொழுதுபோக்கு அம்சங்கள் தொகு

கால்பந்து, வலைப்பந்தாட்டம், பம்பரம்-சுழற்றுதல், செபாக் டக்ரோ போன்ற விளையாட்டுகள் டெம்புரோங்கு மாவட்டத்தில் பிரபலமாக விளையாடப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Rasidah, H.A.B. (April 4, 2009). "Project for in-depth study of local forests". The Brunei Times இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 9, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090409081717/http://www.bt.com.bn/en/home_news/2009/04/04/project_for_in_depth_study_of_local_forests. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-02-01. பார்க்கப்பட்ட நாள் 2016-11-09.
  3. Rabiatul, Kamit (10 May 2013). "Temburong bridge ready 2018". Brunei Times. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 10 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Exploring Brunei in 'Cuti-Cuti Temburong". The Brunei Times. December 6, 2008 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 24, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091124030832/http://www.bt.com.bn/en/home_news/2008/12/06/exploring_brunei_in_cuti_cuti_temburong. 

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,

Temburong District

என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெம்புரோங்கு_மாவட்டம்&oldid=3930553" இலிருந்து மீள்விக்கப்பட்டது