டைகுளோரோ அசிட்டைல் குளோரைடு

டைகுளோரோ அசிட்டிக் அமிலத்தினுடைய அசைல் குளோரைடு

டைகுளோரோ அசிட்டைல் குளோரைடு (Dichloroacetyl chloride) என்பது CHCl2COCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். டைகுளோரோ அசிட்டிக் அமிலத்தினுடைய அசைல் குளோரைடு டைகுளோரோ அசிட்டைல் குளோரைடு எனக் கருதப்படுகிறது [1]. நிறமற்ற நீர்மமான இச்சேர்மத்தை அசைலேற்ற வினைகளில் பயன்படுத்துகிறார்கள் [2][3].

டைகுளோரோ அசிட்டைல் குளோரைடு
இனங்காட்டிகள்
79-36-7
Beilstein Reference
1209426
ChEBI CHEBI:34688
ChEMBL ChEMBL449486
ChemSpider 21106100
EC number 201-199-9
Gmelin Reference
430743
InChI
  • InChI=1S/C2HCl3O/c3-1(4)2(5)6/h1H
    Key: FBCCMZVIWNDFMO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14867
பப்கெம் 6593
வே.ந.வி.ப எண் AO6650000
  • C(C(=O)Cl)(Cl)Cl
UNII 52O60099FY
UN number 1765
பண்புகள்
C2HCl3O
வாய்ப்பாட்டு எடை 147.38 g·mol−1
தோற்றம் நிறமற்ற புகையும் நீர்மம்
அடர்த்தி 1.5315 கி/செ.மீ3
கொதிநிலை 107 °C (225 °F; 380 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

குறிப்பிடத்தக்க சில அமிலக் குளோரைடுகளைப் போல அல்லாமல் டைகுளோரோ அசிட்டைல் குளோரைடு அமிலங்களில் இருந்து தயாரிக்கப்படுவதில்லை. 1,1,2-டிரைகுளோரோயீத்தேனை ஆக்சிசனேற்றுதல், பென்டாகுளோரோயீத்தேனை நீராற்பகுத்தல், குளோரோஃபார்மை கார்பாக்சிலேற்றம் செய்தல் போன்ற தொழிற்துறை முறை தயாரிப்பு வழிமுறைகளும் டைகுளோரோ அசிட்டைல் குளோரைடு தயாரிக்கப் பயன்படுகின்றன :[4].

CHCl2CH2Cl + O2 → CHCl2COCl + H2O
CHCl2CCl3 + H2O → CHCl2COCl + 2 HCl
CHCl3 + CO2 → CHCl2COCl + 1/2 O2

பயன்கள்

தொகு

டைகுளோரோ அசிட்டைல் குளோரைடை நீராற்பகுப்புக்கு உட்படுத்தினால் டைகுளோரோ அசிட்டிக் அமிலம் உருவாகிறது. குளோராம்பெனிக்கால் உள்ளிட்ட நுண்ணுயிர் கொல்லிகள் தயாரிப்பதற்கு உதவும் முன்னோடிகளில் இதுவும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Pubchem". Pubchem. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  2. Richard P. Pohanish; Stanley A. Greene (25 August 2009). Wiley Guide to Chemical Incompatibilities. John Wiley & Sons. pp. 327–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-52330-8.
  3. Science of Synthesis: Houben-Weyl Methods of Molecular Transformations Vol. 26: Ketones. Georg Thieme Verlag. 14 May 2014. pp. 759–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-172011-5.
  4. Koenig, G.; Lohmar, E.; Rupprich, N. (2005), "Chloroacetic Acids", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a06_537{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)