டைபீனைல்பாசுபைட்டு
ஓர் இருகரிம பாசுபைட்டு
டைபீனைல்பாசுபைட்டு (Diphenylphosphite) என்பது (C6H5O)2P(O)H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இருபீனைல்பாசுபைட்டு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். இருகரிமபாசுபைட்டு என்று வகைப்படுத்தப்படும் இப்பாசுபைட்டு நான்முகி வடிவத்தைக் கொண்டுள்ளது. பாகுத்தன்மையுடன் நிறமற்ற நீர்மமாக டைபீனைல்பாசுபைட்டு காணப்படுகிறது. பாசுபரசு முக்குளோரைடை பீனாலுடன் சேர்த்து சூடுபடுத்தினால் டைபீனைல்பாசுபைட்டு உருவாகிறது. இதே முறையில் இதனை ஒத்த வரிசைச் சேர்மங்கள் பல தயாரிக்கப்படுகின்றன. டைபீனைல்பாசுபைட்டு, ஆல்டிகைடுகள் மற்றும் அமீன்கள் வினைபுரிந்து அமினோபாசுபோனேட்டுகள் உருவாகும் காபாச்சினிக்-பீல்டுசு வினை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு வினையாகும் [1].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாசுபோனிக் அமிலம், டைபீனைல் எசுத்தர்
| |
இனங்காட்டிகள் | |
4712-55-4 | |
ChEMBL | ChEMBL132913 |
ChemSpider | 377689 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 426896 |
| |
பண்புகள் | |
C12H11O3P | |
வாய்ப்பாட்டு எடை | 234.19 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.2268 கி/செ.மீ3 |
உருகுநிலை | 12 °C (54 °F; 285 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Bhagat, Srikant; Chakraborti, Asit K. (2007). "An Extremely Efficient Three-Component Reaction of Aldehydes/Ketones, Amines, and Phosphites Kabachnik-Fields reaction for the Synthesis of α-Aminophosphonates Catalyzed by Magnesium Perchlorate". Journal of Organic Chemistry 72: 1263–1270. doi:10.1021/jo062140i.