டைமெதிலமீன்

டைமெதிலமீன் (Dimethylamine) (CH3)2NH என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும்.. இந்த ஈரிணைய அமீன் ஒரு  நிறமற்ற, எளிதில் தீப்பற்றக் கூடிய, அமோனியாவைப் போன்ற மணமுடைய வாயுவாகும்.  டைமெதிலமீனானது, பொதுவாக வணிக நோக்கில் நீரில்  கரைக்கப்பட்ட 40% கரைசலாக எதிர்கொள்ளப்படுகிறது.  2005 ஆம் ஆண்டில் 270,000 டன்கள் அளவுக்கு தொழிற்துறை உற்பத்தி இருந்தது. [3] ஆனால், இச்சேர்மம் இயற்கையாகவும் காணப்படுகிறது.

டைமெதிலமீன்
Skeletal formula of dimethylamine
Ball and stick model of dimethylamine
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
N-மெதில்மீதேனமீன்
வேறு பெயர்கள்
(டைமெதில்)அமீன்
(டைமெதிலமீன் என்ற பெயர் வழக்கொழிந்து விட்டது)
இனங்காட்டிகள்
124-40-3 Y
3DMet B00125
Beilstein Reference
605257
ChEBI CHEBI:17170 Y
ChEMBL ChEMBL120433 Y
ChemSpider 654 Y
EC number 204-697-4
Gmelin Reference
849
InChI
  • InChI=1S/C2H7N/c1-3-2/h3H,1-2H3 Y
    Key: ROSDSFDQCJNGOL-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00543 Y
ம.பா.த டைமெதிலமீன்
பப்கெம் 674
வே.ந.வி.ப எண் IP8750000
  • CNC
UNII ARQ8157E0Q Y
UN number 1032
பண்புகள்
(CH3)2NH
வாய்ப்பாட்டு எடை 45.09 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
மணம் மீனின் நாற்றமுடையது, அம்மோனியாக்கலாக்கப்பட்ட கரைசல்
அடர்த்தி 649.6 கிகிமீ−3 (25 °செ)
உருகுநிலை −93.00 °C; −135.40 °F; 180.15 K
கொதிநிலை 7 முதல் 9 °C; 44 முதல் 48 °F; 280 முதல் 282 K
3.540 கிகி லி−1
மட. P −0.362
ஆவியமுக்கம் 170.3 கிலோபாசுகல் (20 °செ)
310 μமோல் பாசுகல்−1 கிகி−1
காரத்தன்மை எண் (pKb) 3.29
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−21–−17 கிலோயூல்மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word DANGER
H220, H302, H315, H318, H332, H335
P210, P261, P280, P305+351+338
தீப்பற்றும் வெப்பநிலை −6 °C (21 °F; 267 K) (liquid)
Autoignition
temperature
401 °C (754 °F; 674 K)
வெடிபொருள் வரம்புகள் 2.8–14.4%
Lethal dose or concentration (LD, LC):
698 மிகி/கிகி (எலி, வாய்வழி)
316 மிகி/கிகி (சுண்டெலி, வாய்வழி)
240 மிகி/கிகி (முயல், வாய்வழி)
240 மிகி/கிகி (சீமைப் பெருச்சாளி, வாய்வழி)[2]
4700 ppm (rat, 4 hr)
4540 ppm (எலி, 6 மணி நேரம்)
7650 ppm (சுண்டெலி, 2 மணி நேரம்)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 10 ppm (18 மிகி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 10 ppm (18 மிகி/மீ3)[1]
உடனடி அபாயம்
500 ppm[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அமைப்பு மற்றும் பண்புகள்

தொகு

இந்த மூலக்கூறு ஒரு நைட்ரசன் அணுவுடன் இரண்டு மெதில் பதிலிகளையும் ஒரு புரோட்டானையும் ாண்டுள்ளது.  டைமெதிலமீன் ஒரு வலிமை குறைந்த காரமாகும். இதன் அம்மோனியம் உப்பின்  (CH3-NH2+-CH3 pKa  மதிப்பானது 10.73 ஆக உள்ளது. இந்த மதிப்பானது. மெதிலமீன் (10.64) மற்றும் டிரைமெதிலமீன் (9.79) இவற்றின் மதிப்புகளை விட அதிகமானது.

டைமெதிலமீனானது அமிலங்களுடன்  வினை புரிந்து டைமெதிலமீன் ஐதரோகுளோரைடு(மணமற்ற வெண்மை நிறத் திண்மம்)  உப்பு போன்ற உப்புக்களைத் தருகின்றன டைமெதிலமீன் ஐதரோகுளோரைடின் உருகு நிலை 171.5 °C ஆக உள்ளது. டைமெதிலமீனானது. மெதனால் மற்றும் அமோனியாவின் வினைவேகமாற்றி முன்னிலையிலான வினையில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலைகளில் தயாரிக்கப்படுகிறது:[4]

2 CH3OH + NH3 → (CH3)2NH + 2 H2O

இயற்கை மூலங்கள்

தொகு

டைமெதிலமீனானது விலங்குகள் மற்றும் தாவரங்களில் மிகுதியாகப் பரவிக் காணப்படுகிறது. மேலும், பலவிதமான உணவுப் பொருட்களிலும் ஒரு கிலோவிற்கு ஒரு சில மில்லிகிராம் என்ற அளவில் காணப்படுகிறது. [5]

பயன்கள்

தொகு

டைமெதிலமீனானது பல தொழிற்துறை முக்கியத்துவம் வாய்ந்த சேர்மங்களுக்கு முன்னோடிச் சேர்மமாக உள்ளது. [6] இது கார்பன் டை சல்பைடுடன் வினைபுரிந்து டைமெதில் டைதயோகார்பமேட்டைத் தருகிறது.  இவ்வாறு கிடைக்கும் டைமெதில் டைதயோகார்பமேட்டானது, இயற்கை மீள்மத்தின் பற்றவைப்பு அல்லது இரப்பர் பற்றவைப்பில் பயன்படும் பல வேதிப்பொருட்களின் தொகுதியில் உள்ள சேர்மங்களின் முன்னோடி சேர்மமாக உள்ளது.   டைமெதில்பார்மமைடு மற்றும் டைமெதில் அசிட்டமைடு போன்ற கரைப்பான்கள் டைமெதிலமீனிலிருந்து வருவிக்கப்படுகின்றன. பல விவசாயம் சார்ந்த வேதிப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் மூலப் பொருளாக இச்சேர்மம் உள்ளது. (உதாரணம் முறையே, டைமெபாக்சு மற்றும் டைபின்ஐதரமீன்) டாபனட எனப்படும் வேதியியல் ஆயுதம் டைமெதிலமீனிலிருந்து தயாரிக்கப்படுகிறது.  லாரைல் டைமெதிலமீன் எனப்படும் பரப்பியங்கியான (பரப்பு இழுவிசையைக் குறைக்கப் பயன்படும் சேர்மங்கள்) சவர்க்காரம் (சோப்பு) எனப்படும் துாய்மையாக்கி சேர்மங்களில் பயன்படுகிறது. இராக்கெட் எரிபொருளாகப் பயன்படும் சீர்மையற்ற டைமெதில்ஐதரசீன் டைமெதிலமீனிலிருந்து தயாரிக்கப்படுவதே இரக்கெட்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0219". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 "டைமெதிலமீன்". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. A. B. van Gysel, W. Musin "Methylamines" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005 Wiley-VCH Verlag, Weinheim. எஆசு:535 10.1002/14356007.a16 535
  4. Corbin D.R.; Schwarz S.; Sonnichsen G.C. (1997). "Methylamines synthesis: A review". Catalysis Today 37 (2): 71–102. doi:10.1016/S0920-5861(97)00003-5. 
  5. Neurath, G. B. (1977). "Primary and secondary amines in the human environment". Fd. Cosmet. Toxicol 15: 275–282. 
  6. Ashford's Dictionary of Industrial Chemicals, 3rd edition, 2011, pages 3284-3286
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைமெதிலமீன்&oldid=4145768" இலிருந்து மீள்விக்கப்பட்டது