டையோமெதி தீவுகள்

டையோமெதி தீவுகள் (Diomede Islands), ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு கிழக்கே உள்ள பெரிங் நீரிணையில் அமைந்த பெரிய டையோமெதி தீவு மற்றும் சிறிய டையோமெதி தீவுகளின் தொகுதியாகும். இதில் பெரிய டையோமெதி தீவு உருசியாவின் ஆளுகையிலும், சிறிய டையோமெதி தீவு ஐக்கிய அமெரிக்காவின் ஆளுகையிலும் உள்ளது. இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே உள்ள பகுதி, இருநாடுகளின் பன்னாட்டு கடல் எல்லையாக உள்ளது. இத்தீவுகளின் வடக்கே சுக்ச்சி கடல் மற்றும் தெற்கே பெரிங் கடல் உள்ளது. இத்தீவுக் கூட்டத்தின் பெரிய தீவிற்கும், சிறிய தீவிற்கும் இடையே நேர வேறுபாடு 21 மணி நேரம் ஆகும். கோடையில் நேர வேறுபாடு 20 மணி நேரம் ஆகும். [2]இத்தீவின் மக்கள் தொகை 115 மட்டுமே. அலாஸ்காவின் புவியியல் பகுதியாக கருதப்படும் டையோமெதி தீவுகள், தென்கிழக்கில் 9.3 km (5.8 mi) செங்குத்தான பாறைகள் கொண்டது.

டையோமெதி தீவுகள்
டையோமெதி தீவுகள் is located in Alaska
டையோமெதி தீவுகள்
டையோமெதி தீவுகள்
புவியியல்
அமைவிடம்பெரிங் நீரிணை
ஆள்கூறுகள்65°47′N 169°01′W / 65.783°N 169.017°W / 65.783; -169.017
தீவுக்கூட்டம்டையோமெதி தீவுகள்
உயர்ந்த ஏற்றம்494 m (1,621 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை115[1]
அடர்த்தி48 /sq mi (18.5 /km2)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்s
வடக்கே சுக்சிக் கடலுக்கும் தெற்கே பெர்பெரிங் கடலுக்கும் நடுவே உள்ள பெரிங் நீரிணையில் டையோமெதி தீவுகளின் அமைவிடம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Local Economic Development Plan for Diomede, 2012–2017, citing 2010 U.S. census (and this was a decline since the 2000 census). பரணிடப்பட்டது 2016-12-02 at the வந்தவழி இயந்திரம்.
  2. "Two of the world's largest countries, Russia and the United States, at their closest points are separated by 2.4 miles, but are 21 hours apart! Find out how ... | ePaper | DAWN.COM". epaper.dawn.com (in ஆங்கிலம்). 18 November 2017. பார்க்கப்பட்ட நாள் 2018-06-21.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டையோமெதி_தீவுகள்&oldid=3504500" இலிருந்து மீள்விக்கப்பட்டது