டொலுய் உள்நாட்டுப் போர்

மங்கோலியப் பேரரசில் 1260-64இல் நடந்த வாரிசுரிமைப் போர்


டொலுய் உள்நாட்டுப் போர் என்பது குப்லாய் கான் மற்றும் அவரது தம்பி அரிக் போகேவிற்கு இடையே நடைபெற்ற வாரிசுரிமைச் சண்டையாகும். இப்போர் 1260 முதல் 1264 வரை நடைபெற்றது.[1] மோங்கே கான் 1259ல் இறந்தார். தனக்கு அடுத்த கானாக யாரையும் அவர் அறிவிக்கவில்லை. பிறகு டொலுய் குடும்ப உறுப்பினர்களிடையே ககான் பட்டத்துக்கான போட்டியானது உள்நாட்டுப் போராக மாறியது.[1] இப்போர் மற்றும் இதற்குப் பிந்தைய போர்களான பெர்கே-குலாகு போர் மற்றும் கய்டு-குப்லாய் போர் ஆகியவை மங்கோலியப் பேரரசு மீதான ககானின் ஆளுமையைக் குறைத்தன. பேரரசை தன்னாட்சியுடைய கானரசுகளாகப் பிரித்தன.[2]

டொலுய் உள்நாட்டுப் போர்
மங்கோலியப் பேரரசின் பிரித்தல்
தேதி 1260–1264
இடம் மங்கோலியப் பேரரசுக்குக் கீழிருந்த மங்கோலியா, வட மற்றும் மேற்கு சீனா, மற்றும் நடு ஆசியா
முடிவு
நாடுகள்
குப்லாய் கான் மற்றும் அவரது கூட்டாளிகள் அரிக் போகே மற்றும் அவரது கூட்டாளிகள்
மன்னர் மற்றும் தளபதிகள்
குப்லாய் கான் (இடது) மற்றும் அரிக் போகே (வலது) ஆகியோர் ககான் பட்டத்துக்காக ஒரு உள்நாட்டுப் போரில் சண்டையிட்டனர்.
அல்குவுக்கு எதிரான அரிக் போகேயின் வெற்றி

மேலும் காண்கதொகு

உசாத்துணைதொகு

  1. 1.0 1.1 Allsen 1994, பக். 411.
  2. Allsen 2001, பக். 24.