தங்கக் கன்று
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தங்கக் கன்று விவிலிய தொன்மவியல் கதைகளில் உருவச்சிலை ஒன்றை மையமாக வைத்து சுழலும் ஒரு சம்பவமாகும். இஸ்ரவேலர் ,எகிப்தின் அடிமை வாழ்வை விட்டு விடுதலைப்பெற்று வாக்களிக்கப்பட்ட கானான் நாடு நோக்கிய நெடுபயணப் பாதையில், சினாய் மலையடிவாரத்தில் இச்சம்பவம் நிகழ்கின்றது. இது கிறிஸ்தவ விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இரண்டாவது நூலான யாத்திராகமம் நூலில் 31 மற்று 32 ஆம் அதிகாரங்களில் எழுதப்பட்டுள்ளது.
விவிலியத்தின் படி, மோசே இறைவனிடம் இருந்து பத்துக் கட்டளைகளைப் பெற சினாய் மலை உச்சி நோக்கி சென்றிருந்தார். பல நாட்களாக மோசே திரும்பாததைக் கண்ட இஸ்ரவேலர் , அரோனிடம் தமக்கு கடவுள்களை உருவாக்கி தரும்படி கேட்டனர். அதற்கு இணங்கிய அரோன், மக்களிடமிருந்த தங்கத்தை பெற்று உருக்கி தங்கக் கன்று உருவச்சிலை ஒன்றை உருவாக்கி ஒரு பீடத்தில் உயர்த்தி வைத்தான். அத்தங்கக் கன்றை கடவுள் என்று கூறி இஸ்ரேல் மக்கள் நிவேதனம் மற்றும் பலி கொடுத்து வணங்கினர். மேலும் அவர்கள் பல விதமாக கொண்டாடினார்கள்.
இதனால் ஆத்திரமுற்ற இறைவன் இஸ்ரவேலர் (இசுரேலியர்) தங்கள் ஒழுக்க நெறியில் இருந்து தவறிவிட்டதாகவும், ஆகையால் அவர்களை அழிக்கப்போவதாகவும் மோசேயிடம் சொன்னார். ஆனால் மோசே அவர்களை மன்னித்துவிடும்படி மன்றாடினார். இறைவனும் அவரின் கோரிக்கைக்கு இணங்கினார். மோசே பத்துக் கட்டளைகளோடு சினாய் மலையில் இருந்து இறங்கிய போது, அவரும் இஸ்ரவேலர்களின் ஒழுக்கமீறல்களை கண்டு கோபமுற்றவராக பத்துக் கட்டளைகள் எழுதப்பட்டிருந்த கல்வெட்டுக்களை கீழே போட்டுடைத்தார். தங்கக் கன்றின் உருவச்சிலையை எரித்து, அதன் சாம்பலை இஸ்ரேலியரை பருக வைத்தார். அரோனிடம் என்ன நடந்தது என்பதை கேட்டறிந்து, லேவி கோத்திரத்து ஆண்களைக் கூட்டி தவறுகளுக்கு தலைமை வகித்த 3000 ஆண்களை கொல்லும்படி உத்தரவு இட்டார்.
அதன் பின்னர் ஒரு கொடிய கொள்ளை நோய் இஸ்ரவேலர்களை வாட்டியது. மீண்டும் இறைவனிடம் சென்ற மோசே இறைவனிடம் தன்னை தண்டிக்கும் படியும், மக்களை மன்னிக்கும் படியும் வேண்டினார். இறைவன் அவரவர் தம்முடைய குற்றங்களுக்கு தாமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், மோசேயை மீண்டும் சென்று இஸ்ரேலியருக்கு தலைமை தாங்குமாறு கூறி மீண்டும் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார்.
வெளி இணைப்புகள்
தொகு- Golden Calf –யூத கலைக்களஞ்சியம் - (ஆங்கிலம்)
- தங்கக் கன்று கதியின் இஸ்லாமிய நோக்கு- (ஆங்கிலம்)
- தங்கக் கன்று பரணிடப்பட்டது 2005-12-17 at the வந்தவழி இயந்திரம்- (ஆங்கிலம்)
- The Golden Calf - 3000 பேரின் பாவத்துக்கு ஏன் 300,000 பேரை தண்டிக்க வேண்டும் பரணிடப்பட்டது 2006-04-26 at the வந்தவழி இயந்திரம்- (ஆங்கிலம்)
- இஸ்ரவேல் மக்கள் ஏன தங்கக் கன்றை படைத்தனர்- (ஆங்கிலம்)