தங்குதன்(II) அயோடைடு
தங்குதன்(II) அயோடைடு (Tungsten(II) iodide) என்பது WI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்குதன் தனிமத்தின் அயோடைடு உப்பு என வகைப்படுத்தப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
13470-17-2 | |
ChemSpider | 464830 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 533504 |
| |
பண்புகள் | |
I2W | |
வாய்ப்பாட்டு எடை | 437.65 g·mol−1 |
தோற்றம் | அடர் பழுப்பு நிற திண்மம்[1] |
அடர்த்தி | 6.79 கி·செ.மீ−3[2] |
உருகுநிலை | 800 °செல்சியசு (சிதைவடையும்)[2] |
கரையாது [2] | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தங்குதன்(II) குளோரைடு தங்குதன்(II) புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | குரோமியம்(II) அயோடைடு மாலிப்டினம்(II) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதங்குதன்(III) அயோடைடு சேர்மத்தை சிதைவு வினைக்கு உட்படுத்தி தங்குதன்(II) அயோடைடை தயாரிக்கலாம்:[1]
- 6WI3 -> [W6I8]I4 + 3I2
தங்குதன்(II) குளோரைடுடன் அயோடினைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இடப்பெயர்ச்சி வினையின் மூலம் தங்குதன்(II) அயோடைடு உருவாகிறது:[1]
- [W6Cl8]Cl4 + 12I -> [W6I8]I4 + 12 Cl
தங்குதன் மற்றும் அயோடின் ஆகிய தனிமங்கள் நேரடியாக வினைபுரிவதாலும் தங்குதன்(II) அயோடைடு உருவாகிறது. இது ஒரு மீளக்கூடிய வினையாகும். இந்த வினை ஆலசன் விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது:[3]
- W + I2 <-> WI2
தங்குதன் அறுகார்பனைலுடன் அயோடின் சேர்ந்து வினைபுரிவதாலும் தங்குதன்(II) அயோடைடு உருவாகிறது.[4]
பண்புகள்
தொகுதங்குதன்(II) அயோடைடு அடர் பழுப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. காற்று மற்றும் ஈரப்பதத்தில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. இதன் அமைப்பு தங்குதன்(II) குளோரைடு சேர்மத்தின் படிக அமைப்பை ஒத்துள்ளது. Bbem (எண். 64) என்ற இடக்குழுவில் a = 1258 பைக்கோமீட்டர், b = 1259 பைக்கோமீட்டர், c = 1584 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களில் செஞ்சாய்சதுரப் படிகக்கட்டமைப்பில் தங்குதன்(II) அயோடைடு படிகமாகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Handbuch der präparativen anorganischen Chemie. 3 (3., umgearb. Aufl ed.). Stuttgart: Enke. 1981. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-87823-2.
- ↑ 2.0 2.1 2.2 Haynes, William M.; Lide, David R.; Bruno, Thomas J. (2012). CRC handbook of chemistry and physics: a ready reference book of chemical and physical data (93rd ed.). Boca Raton: CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-8049-4.
- ↑ Latscha, Hans Peter; Mutz, Martin (2011). Chemie der Elemente. Chemie-Basiswissen. Berlin Heidelberg: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-16915-1.
- ↑ Johnson, Brian Frederick Gilbert (1972). Inorganic chemistry of the transition elements. A specialist periodical report. London: Chemical society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85186-500-3.