தங்குதன் ஈரார்சனைடு

வேதிச் சேர்மம்

தங்குதன் ஈரார்சனைடு (Tungsten diarsenide) என்பது WAs2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்குதனின் ஆர்சனைடு உப்பு என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. தங்குதன் மூவார்சனைடும், இருதங்குதன் மூவார்சனைடும் பிற தங்குதன் ஆர்சனைடுகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.[1][3]

தங்குதன் ஈரார்சனைடு
இனங்காட்டிகள்
12006-39-2
InChI
  • InChI=1S/2As.W
    Key: FPQIORWKRHXRSI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [As].[As].[W]
பண்புகள்
As2W
வாய்ப்பாட்டு எடை 333.68 g·mol−1
தோற்றம் கருப்பு நிற திண்மம்[1]
அடர்த்தி 6.9 கி·செ.மீ−3[1]
pratically insoluble[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

600 முதல் 1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் தங்குதன் மற்றும் ஆர்சனிக்கு தனிமங்கள் நேரடியாக வினையில் ஈடுபட்டு தங்குதன் ஈரார்சனைடு'உருவாகிறது. ஆர்சனிக்கு அல்லது ஆர்சினுடன் தங்குதன் அறுகுளோரைடு சேர்ந்து வினைபுரிந்தாலும் தங்குதன் ஈரார்சனைடு உருவாகும்.[1][2]

பண்புகள் தொகு

தங்குதன் ஈரார்சனைடு கருப்பு நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. மாலிப்டினம் ஈரார்சனைடின் அதே மூலக்கூற்று கட்டமைப்புடன் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் இது படிகங்களாக உருவாகிறது. தங்குதன் ஈரார்சனைடு ஐதரோபுளோரிக் அமிலம், ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் கார நீரிய கரைசல்களில் கரையாது. செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலம் மற்றும் சல்பியூரிக் அமிலத்துடன் இது வினைபுரிகிறது.[1] அதிக வெப்பநிலையில், தங்குதன் ஈரார்சனைடு காற்றுடன் வினைபுரிந்து தங்குதன் மூவாக்சைடு மற்றும் ஆர்சனிக் மூவாக்சைடு ஆகியவற்றை உருவாக்குகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Erik Lassner, Wolf-Dieter Schubert (2012). Tungsten Properties, Chemistry, Technology of the Element, Alloys, and Chemical Compounds. Springer Science & Business Media. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4615-4907-9.
  2. 2.0 2.1 2.2 R. J. Meyer (2013). Wolfram. Springer-Verlag. p. 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-13401-6.
  3. Taylor, J. B.; Calvert, L. D.; Hunt, M. R. (1965-11-01). "THE ARSENIDES OF TUNGSTEN AND MOLYBDENUM: WAs 2 , W 2 As 3 , MoAs 2 , Mo 2 As 3 , AND Mo 5 As 4" (in en). Canadian Journal of Chemistry 43 (11): 3045–3051. doi:10.1139/v65-419. பன்னாட்டுத் தர தொடர் எண்:0008-4042. http://www.nrcresearchpress.com/doi/10.1139/v65-419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்_ஈரார்சனைடு&oldid=3920715" இலிருந்து மீள்விக்கப்பட்டது