மாலிப்டினம் ஈரார்சனைடு

வேதிச் சேர்மம்

மாலிப்டினம் ஈரார்சனைடு (Molybdenum diarsenide) MoAs2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாலிப்டினம் தனிமத்தின் ஆர்சனைடு உப்பு என்று இது கருதப்படுகிறது. Mo2As3, மற்றும் Mo5As4 என்பவை மாலிப்டினத்தின் இதர ஆர்சனைடுகளாகும்.[2][3]

மாலிப்டினம் ஈரார்சனைடு
இனங்காட்டிகள்
2006-24-5
InChI
  • InChI=1S/2As.Mo
    Key: SUNOQBBRKUWPGB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Mo].[As].[As]
பண்புகள்
As2Mo
வாய்ப்பாட்டு எடை 245.79 g·mol−1
தோற்றம் கருப்பு நிற திண்மம்[1]
அடர்த்தி 8.07 கி·செ.மீ−3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

570 பாகை செல்சியசு வெப்பநிலையில் மாலிப்டினமும் ஆர்சனிக்கும் சேர்ந்து வினைபுரிந்தால் மாலிப்டினம் ஈரார்சனைடு உருவாகிறது.[1]

இயற்பியல் பண்புகள்

தொகு

மாலிப்டினம் ஈரார்சனைடு கருப்பு நிறத் திண்மமாகப் படிகமாகிறது.[1] மற்றும் 0.41 கெல்வின் கடத்துத் திறன் கொண்ட ஒரு மீக்கடத்தியுமாகும்.[4] 12 என்று எண்ணிடப்பட்ட இடக்குழுவில் ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பில் இது படிகமாகிறது.[5] மாலிப்டினம் இருபாசுபைடு போன்ற அதே கட்டமைப்பை கொண்டுள்ளது. செறிவூட்டப்பட்ட ஐதரோகுளோரிக் அமிலம் அல்லது ஐதரசன் பெராக்சைடில் இது கரையாது. ஆனால் நைட்ரிக் அமிலம், சூடான செறிவூட்டப்பட்ட கந்தக அமிலம் மற்றும் இராச திராவகம் ஆகியவற்றில் எளிதில் கரையும்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Molybdenum Arsenide, MoAs2". arsenic.atomistry.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
  2. Murray, J.J.; Taylor, J.B.; Usner, L. (Aug 1972). "Halogen transport of molybdenum arsenides and other transition metal pnictides" (in en). Journal of Crystal Growth 15 (3): 231–239. doi:10.1016/0022-0248(72)90123-6. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022024872901236. 
  3. Taylor, J. B.; Calvert, L. D.; Hunt, M. R. (1965-11-01). "The Arsenides of Tungsten and Molybdenum: WAs2, W2As3, MoAs2, Mo2As3, and Mo5As4" (in en). Canadian Journal of Chemistry 43 (11): 3045–3051. doi:10.1139/v65-419. பன்னாட்டுத் தர தொடர் எண்:0008-4042. http://www.nrcresearchpress.com/doi/10.1139/v65-419. 
  4. Jane E. Macintyre (1994). Dictionary of Inorganic Compounds, Supplement 2. CRC Press. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-49100-9.
  5. Wang, Jialu; Li, Lin; You, Wei; Wang, Tingting; Cao, Chao; Dai, Jianhui; Li, Yuke (2017-11-15). "Magnetoresistance and robust resistivity plateau in MoAs2" (in en). Scientific Reports 7 (1): 15669. doi:10.1038/s41598-017-15962-w. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:29142314. 
  6. A Text Book Of Inorganic Chemistry Volume VI Part IV Arsenic வார்ப்புரு:Web archive, Edited by J. Newton Friend, Charles Griffin, 1938.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிப்டினம்_ஈரார்சனைடு&oldid=3968137" இலிருந்து மீள்விக்கப்பட்டது