தசகோணம்
வடிவவியலில் தசகோணம் (decagon) என்பது பத்து பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம் ஆகும். சமபக்கங்களும் சமகோணங்களும் கொண்டஒரு தசகோணம் ஒழுங்கு தசகோணம் அல்லது சீர் தசகோணம் எனப்படும். ஒழுங்கு தசகோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு 144°. இதன் ஷ்லாஃப்லி குறியீடு {10}.
ஒழுங்கு தசகோணம் | |
---|---|
விளிம்புகள் மற்றும் உச்சிகள் | 10 |
சிலாஃப்லி குறியீடு | {10} t{5} |
கோஎக்சிட்டர்-டின்க்கின் படம் | |
சமச்சீர் குலம் | Dihedral (D10) |
உட்கோணம் (பாகை) | 144° |
பண்புகள் | convex, cyclic, equilateral, isogonal, isotoxal |
ஒழுங்கு தசகோணம்
தொகுt பக்க அளவு கொண்ட ஒழுங்கு தசகோணத்தின் பரப்பு காணும் வாய்ப்பாடு:
மற்றொரு வாய்ப்பாடு:
d என்பது தசகோணத்தின் இரு இணைபக்கங்களுக்கு இடையேயுள்ள தூரம் அல்லது தசகோணம் அதன் ஒரு பக்கத்தை அடியாகக் கொண்ட நிலையில் தசகோணத்தின் உயரம்.
d -ன் மதிப்பு:
- .
பக்கங்கள்
தொகுஓரலகு வட்டத்துக்குள் வரையப்பட்ட ஒரு ஒழுங்கு தசகோணத்தின் பக்க நீளம்:
- ,
இங்கு ϕ = -தங்க விகிதம்.
வரைதல்
தொகுகவராயம் மற்றும் நேர்விளிம்பு கொண்டு ஒரு ஒழுங்கு தசகோணத்தை வரைய முடியும்:
இதேபோன்ற மற்றொரு வரைமுறை:
- ஒரு வட்டத்துக்குள் ஐங்கோணம் ஒன்று வரைந்து கொள்க.
- இந்த ஐங்கோணத்தின் ஒவ்வொரு உச்சியிலிருந்தும் ஐங்கோணத்தின் மையத்தின் வழியாக வட்டத்தின் மறுபுறத்தைச் சந்திக்குமாறு ஒரு கோடு வரைக.
- இக்கோடு, வட்டத்தை மறுபுறத்தில் சந்திக்கும் புள்ளி தசகோணத்தின் ஒரு உச்சியாக அமையும்.
- ஐங்கோணத்தின் ஐந்து உச்சிகளும் தசகோணத்தின் ஒன்றுவிட்ட உச்சிகளாகும்.
- இந்தப் புள்ளிகளை, புதிதாகக் கிடைத்த அடுத்துள்ள புள்ளிகளுடன் இணைக்க தசகோணம் கிடைக்கும்.
தொடர்புள்ள வடிவங்கள்
தொகுஒழுங்கு தசகோணத்தின் பத்து முனைகளையும், ஒவ்வொரு மூன்றாவது முனையுடன் இணைத்தால் ஒரு நட்சத்திர தசகோணம் {10/3} கிடைக்கும். , {10/2} நட்சத்திர தசகோணமானது இரண்டு ஐங்கோணங்களாகவும் (2{5}) மற்றும் {10/4} நட்சத்திர தசகோணமானது இரண்டு நட்சத்திர ஐங்கோணங்களாகவும் (2{5/2})உள்ளன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நட்சத்திர தசகோணங்களின் படங்கள் முறையே:
{10/3} நட்சத்திர தசகோணம். |
{10/2} or 2{5} |
{10/4} or 2{5/2} |
வெளி இணைப்புகள்
தொகு- Weisstein, Eric W., "Decagon", MathWorld.
- Definition and properties of a decagon With interactive animation