தசார்ணதேசம்
தசார்ணதேசம் சேதிதேசத்திற்கு நேர் வடமேற்கிலும், சர்மண்வதீ நதியின் இருபுறத்திலும், பரவி இருந்த தேசம்.[1]
இருப்பிடம்
தொகுஇந்த தேசம் உத்தமம், ஆரவாடம், என்ற இரண்டு உப தேசங்கள் உண்டு. சர்மண்வதீ நதிக்கு வடபுறம் முழுமைக்கும் உத்தமம் என்றும், சர்மண்வதீ நதிக்கு தென்புறம் ஆரவாடம் என்றும் பெயர். குரு, சூரசேநம், குந்தி, குந்தலம், என்ற தேசங்களைக் காட்டிலும் இது மண் கலந்த பூமியாக கொஞ்சம் நல்லதாக இருக்கும்.[2]
மலை, காடு, விலங்குகள்
தொகுஇந்த தேசம் தெற்கிலிருக்கும் மண் வளமானதென்றும், இந்த தேசம் மேற்கில் உயர்ந்தும், கிழக்கில் தாழ்ந்தும், இந்த தேசத்தின் பூமிவளம் மிகுந்தும் வளம் நிறைந்த தோட்டங்கள் அதிகமாயும், சிறிய காடுகளும், அவைகளில் கரடி, பன்றி, புலி, யானை, குயில், மயில், அணில் ஆகிய விலங்குகள் அதிகமாக இருக்கும்.
நதிகள்
தொகுஇந்த தேசம் தெற்குபாகத்தில் சர்மண்வதீ நதியின் கரை ஓரமாக உயரமான விந்தியமலைகள் அதிகம். வடக்கில் குந்தல தேசத்தின் சில மலைகளிலிருந்து வந்தனா என்ற பெரிய நதி உருவாகி, தெற்கு முகமாய் ஓடி, விதிசா நகர பீடபூமியையும் செழிபிக்கச் செய்து சர்மண்வதீ நதியுடன் இணைகிறது.
விளைபொருள்
தொகுஇந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாமிரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.
கருவி நூல்
தொகு- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009