தடங்கம்

தருமபுரி மாவட்ட சிற்றூர்

தடங்கம் (Thadangam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

தடங்கம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636705

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 5 கிலோமீட்டர் தொல்லைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 297 கிலோமீடர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'20.4"N 78°07'21.7"E[2] ஆகும்.

மக்கள் வைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மொத்த குடியிருப்புகள் 2221, மொத்த மக்கள் தொகைகள் 8601.[3] இதில் 4299 ஆண்களும், 4302 பெண்களும் அடங்குவர். கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 71.6 % ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடங்கம்&oldid=3611819" இலிருந்து மீள்விக்கப்பட்டது