நல்லம்பள்ளி

தருமபுரி மாவட்டதில் உள்ள சிற்றூர்

நல்லம்பள்ளி (Nallampalli) என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும்.[1][2] நல்லம்பள்ளி நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

நல்லம்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
636807

அமைவிடம்

தொகு

நல்லம்பள்ளி சேலத்திலிருந்து 55 கிமீ தொலைவிலும், மாவட்ட தலைநகரமான தர்மபுரியிலிருந்து 9 கிமீ தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை-7லில் அமைந்துள்ளது. நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 32 பஞ்சாயத்து கிராமங்கள் அமைந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1613 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7079 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3523 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3556 என்றும் உள்ளது. கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 72.7 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-09-02.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2013-09-02.
  3. http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Nallampalli/Nallampalli


"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லம்பள்ளி&oldid=4080830" இலிருந்து மீள்விக்கப்பட்டது