தடித்த அலகு வானம்பாடி
பறவை வகை
தடித்த அலகு வானம்பாடி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | இராம்போகோரிசு
|
இனம்: | இரா. குளாட்பே
|
இருசொற் பெயரீடு | |
இராம்போகோரிசு குளாட்பே (போனபர்தே, 1850) | |
வேறு பெயர்கள் | |
|
தடித்த அலகு வானம்பாடி (Thick-billed lark)(இராம்போகோரிசு குளாட்பே) அல்லது குளோட்பே வானம்பாடி என்பது அலாடிடே குடும்பத்தில் உள்ள ஒரு வானம்பாடி சிற்றினம் ஆகும். [2]
வகைப்பாட்டியல்
தொகுதடித்த அலகு வானம்பாடி, பிரான்சு நாட்டு மருத்துவர் அன்டோயின் குளோட்டின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இது முதலில் மெலனோகோரிபா பேரினத்தைச் சேர்ந்தது என்று விவரிக்கப்பட்டது. இப்போது இது இராம்போகோரிசு என்ற ஒற்றைச் சிற்றினப் பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.[3]
பரவலும் வாழிடமும்
தொகுஇது வட ஆபிரிக்காவில் மொரிட்டானியா மற்றும் மொராக்கோ முதல் லிபியா வரையிலும், அரேபியத் தீபகற்பத்தின் மத்திய பகுதிகளிலும் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட புதர் மற்றும் வெப்பபாலைவனங்கள் ஆகும்.
-
சவுதி அரேபியாவில்
-
முட்டைகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2017). "Ramphocoris clotbey". IUCN Red List of Threatened Species 2017: e.T22717275A118707081. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22717275A118707081.en. https://www.iucnredlist.org/species/22717275/118707081. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Ramphocoris clotbey - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-09.
- ↑ "Nicators, reedling & larks « IOC World Bird List". www.worldbirdnames.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-12.