தடுப்பு மருந்துகள் குறித்த தவறான தகவல்கள்
தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான தவறான தகவல்கள் (Misinformation related to vaccination) வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவுகின்றன.[1] தவறான தகவல்கள் மற்றும் சதி கோட்பாடுகளை வேண்டுமென்றே பரப்புவதில் பொது மக்களும் பிரபலங்களும் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி குறித்துப் பரப்பப்படும் தவறான தகவல்களால் தடுப்பூசி இட தயக்கம் பொதுமக்களிடையே ஏற்படுவதால், நோயின் தாக்கம் அதிகரிக்கின்றது.[2] தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக இருந்தபோதிலும், இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் பலம் காரணமாகச் சமீப காலத்தில் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்கள் வெகு வேகமாகப் பரவுகின்றன.[3] தடுப்பூசிகள் தொடர்பான ஆதாரமற்ற பாதுகாப்பு கவலைகள் பெரும்பாலும் இணையத்தில் அறிவியல் தகவல்களாகப் பரப்பப்படுகின்றன.[4]
நீட்டிப்பு
தொகுபொதுச் சுகாதாரத்திற்கான ராயல் சமூகம் நடத்திய ஆய்வில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களில் 50% பேர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை எதிர்கொண்டுள்ளனர்.[5] டுவீட்டர், பாட்களில் தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பான பல தவறான செய்திகள் காணப்படுகின்றன. தடுப்பூசிகளுக்கு ஆதரவாகத் தோன்று கருத்துக்களும் உள்ளன. இதன் மூலம் சம்மான கருத்துக்கள் உள்ளதால் தவறான சமநிலையை ஒன்று உருவாகி உள்ளது.[6] போட்களால் உருவாக்கப்பட்ட கணக்குகள் தடுப்பூசி எதிர்ப்பு தொடர்பான தவறான செய்திகளை பேட்டாகப் பயன்படுத்துகின்றன. இத்தளங்களின் வருவாயை அதிகரிக்க இதுபோன்ற எதிர்மறையான தீம்பொருள்களை வெளிப்படுத்தவும் செய்கின்றன.
மாற்று மருத்துவம் அல்லது சதி கோட்பாடுகளில் ஆர்வமுள்ள நபர்களைத் தடுப்பூசி எதிர்ப்பு சமூகம் பயன்படுத்துகிறது என்பதை ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. மற்றொரு ஆய்வு, சதி கோட்பாடுகளை நம்புவதற்கான ஒரு முன்னோக்கு தனிநபர்கள் தடுப்பூசி போடுவதற்கான நோக்கத்தை எதிர்மறையாகக் கணிக்கக் கண்டறியப்பட்டது.[7]
தடுப்பூசி தவறானத் தகவல்களை பரப்புவது நிதி மற்றும் வெகுமதி பெற வழிவகுக்கவும், சமூக ஊடகங்களில் பதிவுகள் நன்கொடைகள் அல்லது தடுப்பூசி எதிர்ப்பு காரணங்களுக்காக நிதி திரட்டவும் வழிசெய்கின்றது.
தவறான தகவல்களின் பட்டியல்
தொகுஉலக சுகாதார நிறுவனம் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை ஐந்து தலைப்பு பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளது. அவையாவன: நோய் அச்சுறுத்தல் (தடுப்பூசி தடுக்கக்கூடிய நோய்கள் பாதிப்பில்லாதவை), நம்பிக்கை (தடுப்பூசிகளை நிர்வகிக்கும் சுகாதார அதிகாரிகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துதல்), மாற்று முறைகள் (தடுப்பூசியை மாற்றுவதற்கான மாற்று மருந்து போன்றவை), செயல்திறன் (தடுப்பூசிகள் வேலை செய்யாது) மற்றும் பாதுகாப்பு (தடுப்பூசிகள்) நன்மைகளை விட அதிக அபாயங்கள் உள்ளன).[3]
தடுப்பூசி இடியோபாடிக் நோய்களை ஏற்படுத்துகிறது
தொகு- தடுப்பூசிகள் மன இறுக்கத்தை ஏற்படுத்துகின்றன: தடுப்பூசிகளுக்கும் மன இறுக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது மருத்துவ ஆய்வு மூலம் நிறுவப்பட்ட ஒருமித்த கருத்து.[8] தையோமெர்சல் உள்ளிட்ட தடுப்பூசி சேர்க்கைப் பொருட்கள் எதுவும் எவ்வித மன இறுக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
- தடுப்பூசிகள் தடுப்பினைத் தருவதற்குப் பதிலாக அதே நோயை ஏற்படுத்தும்: தடுப்பூசிகளைப் பாதுகாப்பானதாக மாற்ற, பாக்டீரியா அல்லது திநுண்மிகள் கொல்லப்படுகின்றன அல்லது பலவீனமடையச் செய்யப்படுகின்றன. எனவே, தடுப்பூசியில் உள்ள பாக்டீரியா அல்லது தீநுண்மிகள் ஆரோக்கியமான நபரின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தாக்க முடியாது.[9]
- தடுப்பூசிகள் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளையும், மரணத்தையும் கூட ஏற்படுத்துகின்றன: தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் பெரும்பாலான பாதகமான நிகழ்வுகள் லேசான மற்றும் தற்காலிகமான தொண்டைப் புண் அல்லது லேசான காய்ச்சல் போன்றவை, தடுப்பூசிக்குப் பிறகு பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
தடுப்பூசிக்கு மாற்று முறைகள்
தொகுதவறான தகவல்களுக்குப் பதிலளிக்கும் வகையில், தடுப்பூசிக்கு மாற்றாகத் தனிநபர்கள் மாற்று மருந்தை நாடலாம். இந்த விவரிப்பில் நம்பிக்கை கொண்ட நபர்கள் தடுப்பூசிகளை 'நச்சு மற்றும் கலப்படம்' என்று கருதுகின்றனர், அதே நேரத்தில் மாற்று 'இயற்கை' முறைகளைப் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் பார்க்கிறார்கள்.[10] தடுப்பூசிக்கான மாற்றுத் தீர்வுகளைச் சுற்றியுள்ள சில தவறான தகவல்கள் பின்வருமாறு:
- தயிர் சாப்பிடுவது மனித பாப்பிலோமா தீநுண்மியினை குணப்படுத்துகிறது :[3] எந்தவொரு இயற்கைப் பொருளையும் சாப்பிடுவதன் மூலம் மனித பாப்பிலோமா தீநுண்மியினை தடுக்கவோ குணப்படுத்தவோ இல்லை.
- ஓமியோபதி தட்டம்மைக்கு எதிராகப் பாதுகாக்க மாற்றாகப் பயன்படுத்த முடியும்: ஓமியோபதி தட்டம்மை தடுப்பில் பயனற்றவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.[11]
இனப்படுகொலையாக தடுப்பூசி
தொகு2011ஆம் ஆண்டில் பில் கேட்ஸை கட்டாயத் தடுப்பூசியினை பயன்படுத்துவதால் பூமியைவிட்டு மக்களை 'வெளியேற்ற' பயன்படுத்தலாம் என்ற தவறான தகவல்.[12] தடுப்பூசிகள் மரபணுப் பொருளுடன் தலையிடுவதாகவும் மனித டி.என்.ஏவை மாற்றுவதாகவும் பொய்யாகக் கூறப்பட்டுள்ளன.[13]
தடுப்பூசி கூறுகளில் இரசாயன சேர்க்கைகள் உள்ளன
தொகுஎதிர்ப்பு வேக்சர்சு தடுப்பூசிகள் உள்ள பொருட்கள், தையோமெர்சல், அலுமினியம் உடல் நலக் கோளாறுகள் காரணமாக ஏற்படுத்தும் திறன் கொண்டவை என்பதை வலியுறுத்துகின்றனர். தடுப்பூசிகளில் உள்ள தையோமெர்சல் ஒரு பாதிப்பில்லாத கூறு ஆகும். இது தொற்றின்மையைப் பராமரிக்கப் பயன்படுகிறது. இதில் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் இல்லை.[14] தடுப்பூசியில் அலுமினியம் ஒரு துணைப் பொருளாகச் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவில் அலுமினியம் பயன்படுத்தினால் கூட குறைந்த நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளது. சில தடுப்பூசிகளில் சேர்க்கப்பட்டுள்ள பார்மால்டிகைடு மிகக் குறைந்த அளவில் உள்ளது மற்றும் பாதிப்பில்லாதது ஆகும்.
பிக் பார்மா சதி கோட்பாடு, மருந்து நிறுவனங்கள் மோசமான நோக்கங்களுக்காகவும், பொது நன்மைக்கு எதிராகவும் செயல்படுகின்றன.[16]
தடுப்பூசி தடுக்கக்கூடிய நோய்கள் பாதிப்பில்லாதவை
தொகுதட்டம்மை போன்ற தடுப்பூசி தடுக்கக்கூடிய நோய்கள் பாதிப்பில்லாதவை என்ற பொதுவான தவறான கருத்து உள்ளது. இருப்பினும், தட்டம்மை ஒரு தீவிர நோயாக உள்ளது. இது கடுமையான சிக்கல்களையும் மரணத்தையும் கூட ஏற்படுத்தும். அம்மை நோயிலிருந்து பாதுகாக்க ஒரே வழி தடுப்பூசி.[11]
குடிமை சுதந்திரத்தை மீறுவதாக தடுப்பூசி கொள்கை
தொகுதீங்கு விளைவிக்கும் நபர்களைப் பற்றிய தனிப்பட்ட நிகழ்வுகள்
தொகுதடுப்பூசி பற்றித் தனிப்பட்ட நிகழ்வுகளும் சில சமயங்களில் தவறான கதைகளும் பரப்பப்படுகின்றன.[17] கொரானா திநுண்மி-19 தடுப்பூசி காரணமாக மக்கள் இறந்ததாகக் கூறி தவறான தகவல்கள் பரவியுள்ளன.[18]
தடுப்பூசி தடுக்கக்கூடிய நோய்கள் ஒழிக்கப்பட்டுள்ளன
தொகுதடுப்பூசிகள் தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய பெரும்பாலான நோய்களைக் குறைக்க உதவியது. இருப்பினும், அவற்றில் சில இன்னும் பரவலாக உள்ளன. உலகின் சில பகுதிகளில் தொற்றுநோய்களையும் ஏற்படுத்துகின்றன. தடுப்பூசி மூலம் சமூகம் பாதுகாக்கப்படாவிட்டால், இந்த நோய் விரைவில் நாட்டிலிருந்து நாட்டிற்குப் பரவக்கூடும்.[9] தடுப்பூசிகள் ஒரு நபரைப் பாதுகாக்காது, ஆனால் சமூகத்தில் போதுமான எண்ணிக்கையிலான நபர்கள் தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் மந்தை நோய் எதிர்ப்புச் சக்தியையும் ஏற்படுத்துவதால் தடுப்பூசி எடுக்காதவருக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.[19]
பிற சதி கோட்பாடுகள்
தொகுசதி கோட்பாடுகள் போலியோ உண்மையில் நோய் அல்ல என்றும் இது டி.டி.டீ. நச்சு காரணமாகப் பரவுகின்றது என சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.[3] நாசா ரசாயனங்கள் நிறைந்த பலூன்களை வெளியிடுகிறது என்றும் இதன் விளைவாகப் போலியோ போன்ற நோய் அறிகுறிகளும் உருவாகின்றன எனவும் சதிக்கோட்பாடுகள் பரவுகின்றன. முகநூலில் 8,300 தடவைகளுக்கு மேல் பகிரப்பட்ட ஒரு காணொளி, தடுப்பூசி சிரிஞ்ச்களில் உள்ள ஒரு மைக்ரோசிப் "யார் தடுப்பூசி போடவில்லை மற்றும் அவருடைய தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்கும்" என்று கூறுகிறது.[20][21]
பாதிப்பு
தொகுதவறான தகவல்களால் தூண்டப்பட்டு, தடுப்பூசி எதிர்ப்பு செயல்பாடு சமூக ஊடகங்களிலும் பல நாடுகளிலும் அண்மையில் அதிகரித்து வருகிறது.[22]
தடுப்பூசி தவறான தகவல்களைக் கொண்ட ஒரு வலைத்தளத்தை 5-10 நிமிடங்கள் பார்ப்பது ஒருவரின் தடுப்பூசி போடுவதற்கான நோக்கத்தைப் பாதிக்கின்றது என ஆராய்ச்சி காட்டுகிறது.[4][23] சமூக ஊடகங்களில் ஒரு குழுவாக ஒழுங்கமைப்பதற்கும் தடுப்பூசி பாதுகாப்பு குறித்து பொதுவில் சந்தேகங்களை வெளியிடுவதற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க உறவு இருப்பதாக 2020 ஆம் ஆண்டு ஆய்வில் தெரியவந்துள்ளது. தவறான தகவல்களால் தடுப்பூசி பயன்பாடு குறைந்து வருவதற்கும் தொடர்பு உள்ளது அறியப்பட்டுள்ளது.[24]
2003 ஆம் ஆண்டில், போலியோ தடுப்பூசிகள் குறித்துப் பரவிய வதந்திகள் நைஜீரியாவில் தடுப்பூசி இட மக்கள் காட்டிய தயக்கத்தினைத் தீவிரப்படுத்தியதுடன், மூன்று ஆண்டுகளில் நாட்டில் போலியோ நோயாளிகளின் எண்ணிக்கையை ஐந்து மடங்கு அதிகரிக்க வழிவகுத்தது.[25][26]
தவறான தகவலுக்கு எதிரான நடவடிக்கைகள்
தொகுஅமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை போன்ற பல அரசு நிறுவனங்கள் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை நிவர்த்தி செய்வதற்காக வலைப்பக்கங்களை அர்ப்பணித்துள்ளன.[27][28] 2020 ஆம் ஆண்டில், முகநூல் தனது தளத்தில் தடுப்பூசி எதிர்ப்பு விளம்பரங்களை இனி அனுமதிக்காது என்று அறிவித்தது.[29] பொதுச் சுகாதார பிரச்சாரங்கள் மூலம் நோய்த்தடுப்பு விகிதங்களை அதிகரிக்கும் பொருட்டு, உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் பதிவுகளை அதிகரிக்கும் என்றும் முகநூல் கூறியது. தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பும் ட்வீட்களை அகற்றவும், தடுப்பூசி குறித்த சர்ச்சைக்குரிய அல்லது ஆதாரமற்ற வதந்திகளைக் கொண்ட ட்வீட்களில் எச்சரிக்கை சிட்டைகளை வைக்கவும் பயனர்கள் தேவைப்படுவதாக டுவிட்டர் அறிவித்தது.[30] தடுப்பூசி தொடர்பான தகவல்களைத் தேடும்போது மக்களை அதிகாரப்பூர்வ சுகாதார ஆதாரங்களுக்கு அனுப்பத் தொடங்குவதாக டிக்டாக் அறிவித்தது. கோவிட்-19 தொடர்பான தவறான தகவல்களைக் கொண்ட 700,000க்கும் மேற்பட்ட காணொளிகளை யூடியூப் அகற்றியுள்ளது, இதில் கோவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்களும் அடங்கும்.
அறிவியல் தகவல் தொடர்பாளர்கள், தடுப்பூசி தொடர்பான எதிர்மறையான கருத்துக்களை தங்கள் செல்வாக்கின் காரணமாக நேரடியாக எதிர்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.[31] தவறான தகவலை வலியுறுத்துவதைத் தவிர்ப்பதற்காகத் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களுக்கான மறுப்புகளை நேரடியாக வழங்கவேண்டும். அறிவியல் பூர்வ சான்றுகளைப் பார்வையாளர்களின் நம்பிக்கை மற்றும் மதிப்புடன் இணைக்கும் கதைகளுடன் வழங்குவது பயனுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Misinformation about the vaccine could be worse than disinformation about the elections". POLITICO (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
- ↑ Wiysonge, Charles Shey; Wilson, Steven Lloyd. "Misinformation on social media fuels vaccine hesitancy: a global study shows the link". The Conversation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ இங்கு மேலே தாவவும்: 3.0 3.1 3.2 3.3 Hoffman, Beth L.; Felter, Elizabeth M.; Chu, Kar-Hai; Shensa, Ariel; Hermann, Chad; Wolynn, Todd; Williams, Daria; Primack, Brian A. (10 April 2019). "It’s not all about autism: The emerging landscape of anti-vaccination sentiment on Facebook". Vaccine 37 (16): 2216–2223. doi:10.1016/j.vaccine.2019.03.003. பப்மெட்:30905530.
- ↑ இங்கு மேலே தாவவும்: 4.0 4.1 Betsch, Cornelia; Renkewitz, Frank; Betsch, Tilmann; Ulshöfer, Corina (26 March 2010). "The Influence of Vaccine-critical Websites on Perceiving Vaccination Risks" (PDF). Journal of Health Psychology. doi:10.1177/1359105309353647. பப்மெட்:20348365. https://journals.sagepub.com/doi/pdf/10.1177/1359105309353647. பார்த்த நாள்: 2 January 2021.
- ↑ Burki, Talha (1 October 2019). "Vaccine misinformation and social media" (in English). The Lancet Digital Health 1 (6): e258–e259. doi:10.1016/S2589-7500(19)30136-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:2589-7500. https://www.thelancet.com/journals/landig/article/PIIS2589-7500(19)30136-0/fulltext. பார்த்த நாள்: 2 January 2021.
- ↑ Broniatowski, David A.; Jamison, Amelia M.; Qi, SiHua; AlKulaib, Lulwah; Chen, Tao; Benton, Adrian; Quinn, Sandra C.; Dredze, Mark (October 2018). "Weaponized Health Communication: Twitter Bots and Russian Trolls Amplify the Vaccine Debate". American Journal of Public Health 108 (10): 1378–1384. doi:10.2105/AJPH.2018.304567.
- ↑ Bertin, Paul; Nera, Kenzo; Delouvée, Sylvain (2020). "Conspiracy Beliefs, Rejection of Vaccination, and Support for hydroxychloroquine: A Conceptual Replication-Extension in the COVID-19 Pandemic Context". Frontiers in Psychology 11. doi:10.3389/fpsyg.2020.565128. https://www.frontiersin.org/articles/10.3389/fpsyg.2020.565128/full. பார்த்த நாள்: 3 January 2021.
- ↑ "Autism and Vaccines | Vaccine Safety | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 25 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ இங்கு மேலே தாவவும்: 9.0 9.1 "Vaccines and immunization: Myths and misconceptions". www.who.int (in ஆங்கிலம்).
- ↑ Attwell, Katie; Ward, Paul R.; Meyer, Samantha B.; Rokkas, Philippa J.; Leask, Julie (January 2018). ""Do-it-yourself": Vaccine rejection and complementary and alternative medicine (CAM)". Social Science & Medicine 196: 106–114. doi:10.1016/j.socscimed.2017.11.022. பப்மெட்:29175699.
- ↑ இங்கு மேலே தாவவும்: 11.0 11.1 "Addressing misconceptions on measles vaccination". European Centre for Disease Prevention and Control (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
- ↑ "False Bill Gates 'depopulate with vaccines' news a conspiracy theory classic - Australian Associated Press". AustralianAssociatedPress (in ஆங்கிலம்). 8 December 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
- ↑ "No, COVID-19 Vaccines Do Not Change Human DNA". www.boomlive.in (in ஆங்கிலம்). 14 December 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
- ↑ "WHO | Statement on thiomersal". WHO. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
- ↑ Kata, Anna (28 May 2012). "Anti-vaccine activists, Web 2.0, and the postmodern paradigm – An overview of tactics and tropes used online by the anti-vaccination movement". Vaccine 30 (25): 3778–3789. doi:10.1016/j.vaccine.2011.11.112. https://www.sciencedirect.com/science/article/pii/S0264410X11019086?via%3Dihub. பார்த்த நாள்: 3 January 2021.
- ↑ Rauhala, Emily. "The pandemic is amplifying the U.S. anti-vaccine movement — and globalizing it". Washington Post. https://www.washingtonpost.com/world/coronaviurs-antivax-conspiracies/2020/10/06/96ddd2c2-028e-11eb-b92e-029676f9ebec_story.html.
- ↑ Kata, Anna (28 May 2012). "Anti-vaccine activists, Web 2.0, and the postmodern paradigm – An overview of tactics and tropes used online by the anti-vaccination movement" (in en). Vaccine 30 (25): 3778–3789. doi:10.1016/j.vaccine.2011.11.112. பன்னாட்டுத் தர தொடர் எண்:0264-410X. https://www.sciencedirect.com/science/article/pii/S0264410X11019086?via%3Dihub. பார்த்த நாள்: 3 January 2021.
- ↑ "Nurse who fainted after COVID-19 vaccine shot is not dead - Australian Associated Press". AustralianAssociatedPress (in ஆங்கிலம்). 30 December 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
- ↑ "What Would Happen If We Stopped Vaccinations? | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 28 September 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
- ↑ Staff, Reuters (14 December 2020). "Fact check: COVID-19 vaccine labels would not microchip or track individuals, but serve logistical purpose". Reuters (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
{{cite web}}
:|first=
has generic name (help) - ↑ Alba, Davey. "From Voter Fraud to Vaccine Lies: Misinformation Peddlers Shift Gears". The New York Times. https://www.nytimes.com/2020/12/16/technology/from-voter-fraud-to-vaccine-lies-misinformation-peddlers-shift-gears.html?auth=login-google.
- ↑ DiResta, Renée. "Anti-vaxxers Think This Is Their Moment". The Atlantic. https://www.theatlantic.com/ideas/archive/2020/12/campaign-against-vaccines-already-under-way/617443/.
- ↑ Chou, Wen-Ying Sylvia; Oh, April; Klein, William M. P. (18 December 2018). "Addressing Health-Related Misinformation on Social Media" (in en). JAMA 320 (23): 2417–2418. doi:10.1001/jama.2018.16865. பன்னாட்டுத் தர தொடர் எண்:0098-7484. https://jamanetwork.com/journals/jama/article-abstract/2715795. பார்த்த நாள்: 2 January 2021.
- ↑ Wilson, Steven Lloyd; Wiysonge, Charles (1 October 2020). "Social media and vaccine hesitancy" (in en). BMJ Global Health 5 (10): e004206. doi:10.1136/bmjgh-2020-004206. பன்னாட்டுத் தர தொடர் எண்:2059-7908. https://gh.bmj.com/content/5/10/e004206. பார்த்த நாள்: 3 January 2021.
- ↑ "Vaccine Hesitancy, an Escalating Danger in Africa | Think Global Health". Council on Foreign Relations (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ Wiysonge, Charles Shey. "How ending polio in Africa has had positive spinoffs for public health". The Conversation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ "Why vaccination is safe and important". nhs.uk (in ஆங்கிலம்). 31 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ "Questions and Concerns | Vaccine Safety | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 25 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ Isaac, Mike. "Facebook Bans Anti-Vaccination Ads, Clamping Down Again". The New York Times. https://www.nytimes.com/2020/10/13/technology/facebook-bans-anti-vaccination-ads.html.
- ↑ Lerman, Rachel. "Vaccine hoaxes are rampant on social media. Here’s how to spot them.". Washington Post. https://www.washingtonpost.com/technology/2020/12/18/faq-coronavirus-vaccine-misinformation/.
- ↑ Steffens, Maryke S.; Dunn, Adam G.; Wiley, Kerrie E.; Leask, Julie (23 October 2019). "How organisations promoting vaccination respond to misinformation on social media: a qualitative investigation". BMC Public Health 19 (1): 1348. doi:10.1186/s12889-019-7659-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2458. https://bmcpublichealth.biomedcentral.com/articles/10.1186/s12889-019-7659-3. பார்த்த நாள்: 3 January 2021.