தந்திரா பாப்பராயுடு
தந்திரா பாப்பநாயுடு (Tandra Paparayudu) பொப்பிலி அரசாங்கத்தின் படைத் தளபதியாவார். இவர், பொப்பிலிப் போரின் போது பூசபதி முதலாம் பூபதி விஜயராம ராஜுவைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார். இது இன்றைய ஆந்திராவின் விஜயநகர மாவட்டமான விஜயநகர சமஸ்தானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும்.[1][2][3]
தந்திரா பாப்பராயுடு Tandra Paparayudu | |
---|---|
பட்டம் | பொப்பிலியின் படைத் தளபதி |
வெங்கடகிரி மகாராஜா
தொகு1652 ஆம் ஆண்டிலிருந்து பொப்பிலியின் வரலாற்றைக் காணலாம்.[4] நிசாமின் கீழ் சிறீகாகுளத்தின் நவாபின் பௌஜ்தார் சேர் முகம்மது கான் விசயநகர மாவட்டத்திற்கு வந்தபோது. அவருடன் வெங்கடகிரியின் அரசரின் 15 வது வாரிசான வெலமா சமூகத்தைச் சேர்ந்தவரும், பொப்பிலி அரசரின் மூதாதையருமான பெத்தராயடு மற்றும் போட்டியாளர்களாக இருந்த விஜயநகர குடும்பத்தின் மூதாதையரான பூசபதி மாதவ வர்மா ஆகியோர் அவருடன் வந்தனர்.[5][6] ஒரு பதிப்பில் நவாப், பெத்தராயடு வழங்கிய மகத்தான சேவைகளில் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கு நில உடைமைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. பெத்தராயடு பின்னர் ஒரு கோட்டையைக் கட்டி அதற்கு “பொப்பிலி” என்று பெயரிட்டார் எனவும் கூறப்படுகிறது. அதாவது “அரச புலி” என்று பொருள்படும். நவாபின் நற்பண்புக்கான பாராட்டுக்கான அடையாளமாக, “சேர்” (‘சேர்’ என்றால் இந்தி மொழியில் “புலி” எனப்பொருள்).[5]
மற்றொரு பதிப்பில், இராயுடுவின் மகன் இலிங்கப்பா பொப்பிலியை தனது தலைநகராகத் தேர்ந்தெடுத்து, ஒரு கோட்டையைக் கட்டி, அங்கு ஒரு நகரத்தை நிறுவி, அதற்கு “பெத்த-புலி” என்று பெயரிட்டார் (தெலுங்கு மொழியில் “பெரிய-புலி” என்று பொருள்); இந்த பெயர் இறுதியில் “பெபூலி” என்று மாற்றப்பட்டது, இறுதியாக “பொப்பிலி” ஆனது. இந்த காலகட்டத்தில் கடத்தப்பட்ட சேர் கானின் மகனை இலிங்கப்பா மீட்டதை பாராட்டும் விதமாக, சேர் கான் இலிங்கப்பாவுக்கு 12 கிராமங்களை பரிசளித்து அவருக்கு “இரங்காராவ் ”என்ற பட்டத்தை வழங்கினார். இலிங்கப்பாவுக்குப் பிறகு அவரது வளர்ப்பு மகன் வெங்கல் இரங்காராவ், அவரது மகன் இரங்கபதி, அவரது மகன் இராயதப்பா ஆகியோர் பதவிக்கு வந்தனர். இராயதப்பாவின் வளர்ப்பு மகன் கோபாலகிருஷ்ணன் தனது தந்தையிடமிருந்து ஆட்சியை எடுத்துக் கொண்டார். பழைய கோட்டையைக் கட்டும் நேரத்தில் ஒரு முஸ்லிம் துறவி பொப்பிலி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு அரச சகோதரர்களை அவர்கள் கோட்டையைக் கட்டத் தேர்ந்தெடுத்த இடம் துரதிர்ஷ்டவசமானது என எச்சரித்ததாகவும், ஆனால் அவர்கள் இந்த எச்சரிக்கையை புறக்கணித்ததாகவும் தெரிகிறது.[7]
பின்னணி
தொகு1753இல் கோபாலகிருஷ்ண ராயுடுவின் ஆட்சியின் போது, வடக்கு சர்க்கார் பகுதிகள் ஐதராபாத் நிசாமால் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டனர். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் நிறுவனத்தின் ஆளுநர் மார்க்விஸ் தெ புஸ்ஸி ஸ்ரீகாகுளம் மற்றும் ராஜமன்றி ஆகிய சர்க்கார்களை பூசபதி மன்னர் முதலாம் பூசபதி விஜயராம கஜபதி ராஜுவிற்கு குத்தகைக்கு விட ஒப்புக்கொண்டார். புஸ்ஸிக்கும் நிசாமுக்கும் இடையிலான பிளவினால் புஸ்ஸியின் அதிகாரம் அதிகாரம் பலவீனமடைய வழிவகுத்தது. விஜயராம ராஜு தனது படைகளை புஸ்ஸியின் வசம் வைத்து, அவரது மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த உதவினார். மேலும் தனது எதிரியான பொப்பிலி மன்னரை தோற்கடிக்க உதவும்படி புஸ்ஸியிடம் கேட்டுக்கொண்டார்.
போர்
தொகு1757 ஜனவரி 24 அன்று புஸ்ஸி மற்றும் பூசபதியின் கூட்டுப் படைகள் பொப்பிலி கோட்டையை நோக்கி அணிவகுத்துச் சென்றார். கோபாலகிருஷ்ண ராயுடுவின் இராணுவம் இவர்களின் படைகளுக்கு போட்டியாக இருக்கவில்லை. இப்போரில் கோபாலகிருஷ்ண ராயுடுவின் இரானுவத்தில் தந்திரா பாப்பராயுடு படைத் தளபதியாக இருந்து இறுதி வரை தைரியமாக போராடினர்.
அதிக எண்ணிகையிலான புஸ்ஸியின் படைகளுக்கு எதிராக நீண்ட நேரம் தந்திரா பாப்பராயுடுவால் போராட முடியவில்லை. கோட்டைக்குள் இருந்த வெங்கடகிருஷ்ண ரங்கராவின் மனைவியும் தந்திரா பாப்பராயுடுவின் சகோதரியுமான ராணி மல்லம்மா தேவி தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியை அறிந்த தந்திரா பாப்பராயுடு பூசபதி விஜயராம கஜபதி ராஜுவை கொல்வதாக சபதம் செய்தார்.[8]
போருக்குப் பின்னர்
தொகுவெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த பூசபதி விஜயராம கஜபதி ராஜு வின் கூடாரத்தின் பின்புறம் வழியாக நுழைந்த தந்திரா பாப்பராயுடு, தேவுலப்பள்ளி பெத்தண்ணா மற்றும் புத்தராஜு வெங்கையா ஆகிய னூஅவரும் சேர்ந்து பூசபதி விஜயராம கஜபதி ராஜுவை கொன்றனர். பூசபதியின் வீரர்களிடமிருந்து தங்களை காப்பாற்ற முடியாது என்பதை அறிந்த மூவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Koteswaramma, Kondapalli (12 November 2015). The Sharp Knife of Memory. Zubaan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789384757885 – via Google Books.
- ↑ "The Story of the Bobbili Katha".
- ↑ BMG (2 September 2002). "The tiger of Bobbili". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 May 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030508153126/http://thehindu.com/thehindu/mp/2002/09/02/stories/2002090200940200.htm.
- ↑ Sastri, Alladi Jagannatha (8 November 2018). A Family History of Venkatagiri Rajas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780344943096.
- ↑ 5.0 5.1 Francis 2002, ப. 252.
- ↑ "The tiger of Bobbili". தி இந்து. 2 September 2002 இம் மூலத்தில் இருந்து 8 May 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030508153126/http://thehindu.com/thehindu/mp/2002/09/02/stories/2002090200940200.htm.
- ↑ Handelman 2013.
- ↑ "The Story of the Bobbili Katha".