பொப்பிலிப் போர்
பொப்பிலிப் போர் (Battle of Bobbili) 1757 ஜனவரி 24 அன்று பொப்பிலிக் கோட்டை மீதான தாக்குதலைப் பற்றியது. ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர (இன்றைய விசயநகர மாவட்டம்) சமஸ்தானத்தில் நடந்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக இது கருதப்படுகிறது. பொப்பிலியின் இராணுவத்திற்கும் பிரெஞ்சு மற்றும் விஜயநகரத்தின் கூட்டுப் படைக்கும் இடையே இப்போர் நடைபெற்றது.
பொப்பிலிப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் போர் நடவடிக்கை பகுதி | |||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
பூசபதி அரசன் | தந்திர பாப்பநாயுடு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
மார்க்விஸ் தெ புஸ்ஸி பூசபதி முதலாம் விசயராம கசபதி | கோபால கிருஷ்ண நாயுடு தந்திர பாப்பாநாயுடு தேவுலப்பள்ளி பெத்தண்ணா புத்தராஜு வெங்கையா |
||||||||
இழப்புகள் | |||||||||
பூசபதி பூசபதி முதலாம் விசயராம கசபதிவின் படுகொலை | தந்திர பாப்பராயுடு, தேவுலப்பள்ளி பெத்தண்ணா மற்றும் புத்தராஜு வெங்கையாவின் தற்கொலைகள் |
இப்போரின் முடிவில் பொப்பிலியின் தளபதி தந்திர பாப்பராயுடு தனது கடுமையான எதிர்ப்பு மற்றும் இறுதி பழிவாங்கல் ஆகியவற்றிற்காக “பொப்பிலி புலி” என்ற பெயரைப் பெற்றார்.[1][2]
பின்னணி
தொகுபொப்பிலி கோட்டை விசாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கே 140 மைல் தொலைவில் அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பொப்பிலியின் ஜமீந்தாராக இருந்த கோபாலகிருஷ்ண ரங்கராவ் மற்றும் விஜயநகரத்தின் மன்னன் பூசபதி பெத்த விஜயராம ராஜு ஆகியோருக்கிடையே கடுமையான பகை இருந்தது. இரு இராச்சியங்களின் எல்லையில் உள்ள ஓடைகளில் உள்ள தண்ணீரை பொப்பிலி மக்கள் பலவந்தமாக எடுத்து வந்தனர். பெத்த விஜயராம ராஜு, பிரெஞ்சுத் தளபதி மார்க்விஸ் தெ புஸ்ஸியுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். ஸ்ரீகாகுளம், ஏலூரு மற்றும் ராஜமன்றி ஆகிய பகுதிகளை சாகிராக ஆண்டுக்கு ரூ.2, 00,000 தொகைக்கு குத்தகைக்கு பெற்றார். இது பொப்பிலி அரசுக்கு கடும் கோபத்தை விளைவித்தது.
விஜயராம ராஜு தனது எதிரியான பொப்பிலி ராஜாவை தோற்கடிக்க உதவுமாறு புஸ்ஸியிடம் கேட்டுக்கொண்டார். புஸ்ஸி தனது படை மற்றும் பூசபதி விஜயராம கஜபதி ராஜுவின் படையுடன் பொப்பிலி கோட்டையை நோக்கி அணிவகுத்துச் சென்றார். 23 ஜனவரி 1757 இல் பொப்பிலி போர் நடைபெற்றது. போரில் பொப்பிலிப் படை தோற்றது. கோட்டை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. எண்ணற்ற பொப்பிலி வீரர்கள் உயிரிழந்தனர். போரில் புஸ்ஸி செய்த உதவிக்கு நன்றியாக மன்னர் விஜயநகர பூசபதி பெத்த விஜயராமராஜு யானம் பகுதியை வழங்கினார். யானமில் தெ புஸ்ஸி என்ற பெயரில் ஒரு தெரு இன்றும் உள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Koteswaramma, Kondapalli (12 November 2015). The Sharp Knife of Memory. Zubaan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789384757885 – via Google Books.
- ↑ vzbmg (2002-09-02). "The tiger of Bobbili". தி இந்து. Archived from the original on 2003-05-08.
- ↑ A History of Telugu Literature p. 36