தனஞ்சய் முண்டே
தனஞ்சய் பண்டித்ராவ் முண்டே (Dhananjay Munde)(பிறப்பு 15 சூலை 1975)[1] ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது தேசியவாத காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். மேலும் உத்தவ் தாக்கரேவின் மகாராஷ்டிர மாநில அரசாங்கத்தில் ஆய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தனஞ்சய் முண்டே | |
---|---|
ஆய அமைச்சர் மகாராஷ்டிர அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 திசம்பர் 2019 | |
அமைச்சர் |
|
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
முன்னையவர் | சுரேசு காடே |
பீட் மாவட்டத்திற்கான பாதுகாவல் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 சனவரி 2020 | |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
முன்னையவர் | பங்கஜ முண்டே |
தொகுதி | பார்லி சட்டமன்றத் தொகுதி |
சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சிக்குழு | |
பதவியில் 22 திசம்பர் 2014 – 24 அக்டோபர் 2019 | |
ஆளுநர் | |
முன்னையவர் | வினோத் தாவ்டே |
பின்னவர் | பிரவீன் டாரேகர் |
தொகுதி | மகாராட்டிர சட்டமன்ற மேலவை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூலை 1975 பார்லி, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | www |
ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுமுண்டே 1975ஆம் ஆண்டு சூலை 15 அன்று நாத்ரா, பார்லி வைஜ்நாத், பீட் என்ற இடத்தில் வஞ்சாரி குடும்பத்தில் பிறந்தார். முண்டேவின் குடும்பம், தாயார் ருக்மணி முண்டே, மனைவி ராஜ்ஸ்ரீ முண்டே மற்றும் மகள் ஆதிஸ்ரீ முண்டே ஆகியோரைக் கொண்டதாகும்.[2]
அரசியல் வாழ்க்கை
தொகுமுண்டே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் பார்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பீட் மாவட்டத்தின் பாதுகாவலர் அமைச்சராகவும், மகாராட்டிரா மாநிலத்தின் சமூக நீதி மற்றும் சிறப்பு உதவி அமைச்சராகவும் உள்ளார்.[3][4] 24 திசம்பர் 2019 முதல், சமூக நீதி மற்றும் சிறப்பு உதவி அமைச்சராகவும் உள்ளார்.[5][6][7] முன்னதாக, இவர் மகாராட்டிர சட்ட மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.[8]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதனஞ்சய் முண்டே, ராஜ்ஸ்ரீ முண்டேவை மணந்தார்.[9]
சர்ச்சை
தொகுசனவரி 2021-ல், பாடகி ரேணு சர்மாவால் முண்டே மீது கற்பழிப்பு புகார் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இப்புகார் திரும்பப் பெறப்பட்டது.[10] [11] முண்டே கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை மறுத்தார் மற்றும் பதவி விலக எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைகளை நிராகரித்தார்.[12] ஒரு செய்திக்குறிப்பில், முண்டே ரேணு சர்மாவின் சகோதரி கருணா சர்மாவுடன் உறவில் இருப்பதாகவும், இந்த உறவின் மூலம் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், இது குறித்து தனது மனைவி மற்றும் குடும்பத்தினருக்குத் தெரியும் என்றும் கூறினார்.[13] [14]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Dhananjay Panditrao Munde". indialeader.com.
- ↑ "Cousins collide". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
- ↑ author/lokmat-news-network (2020-10-30). "बीड जिल्ह्यातील चार तालुक्यांमध्ये नुकसानीचे होणार फेर पंचनामे; पालकमंत्री मुंडे यांचे आदेश". Lokmat (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "समाजकार्य महाविद्यालयांच्या वेतनासाठी १०३ कोटींचे अनुदान". Loksatta (in மராத்தி). 2021-01-09. பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
- ↑ "Pankaja Munde trailing behind NCP's Dhananjay Munde by 30,701 votes from Parli constituency". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 2020-10-01.
- ↑ "Pankaja Munde loses Maharashtra's Parli seat to cousin Dhananjay Munde". Inshorts - Stay Informed (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-01.
- ↑ ": Maharashtra Government, Council of Ministers". Sarkaritel.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-01.
- ↑ "Munde Dhananjay Panditrao - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-10-01.
- ↑ Bhadani, Priyanka (2019-10-19). "Cousins collide". The Week. Archived from the original on 20 October 2019.
- ↑ Sutar, Kamlesh Damodar (January 12, 2021). "Singer alleges rape, Maha Minister Dhananjay Munde refutes, calls it blackmail". India Today.
- ↑ Jog (15 January 2021). "Singer Renu Sharma backs off on rape charges against Maha minister Dhananjay Munde" (in en). https://www.freepressjournal.in/mumbai/singer-renu-sharma-backs-off-on-rape-charges-against-maha-minister-dhananjay-munde.
- ↑ Marapakwar (January 16, 2021). "Finish Dhananjay Munde probe in a week, Mumbai cops told; minister not to be axed" (in en). https://timesofindia.indiatimes.com/city/mumbai/finish-dhananjay-munde-probe-in-a-week-mumbai-cops-told-minister-not-to-be-axed/articleshow/80295752.cms.
- ↑ "Dhananjay Munde denies rape charge, says he is in relationship with complainant’s sister" (in en-IN). 13 January 2021. https://www.thehindu.com/news/cities/mumbai/dhananjay-munde-denies-rape-charge-says-he-is-in-relationship-with-complainants-sister/article33565424.ece.
- ↑ "Sharad Pawar says stand vindicated as rape complaint against Dhananjay Munde withdrawn". 23 January 2021. https://www.newindianexpress.com/nation/2021/jan/23/pawar-says-stand-vindicated-as-rape-complaint-against-munde-withdrawn-2253969.html.