தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களின் பொது சுகாதாரப் பிரச்சினை

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women in Tamil Nadu) என்பது கொடுமைப்படுத்துதல், கடத்தல், வரதட்சணை தொடர்பான வன்முறை, குடும்ப வன்முறை ஆகியவற்றில் அடங்கும். 2013ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 1,130 வழக்குகளைப் பதிவு செய்த காவல்துறை, 2012ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 860ஆக பதிவு செய்தது. உசிலம்பட்டி வட்டத்தில், 1987-88 காலப்பகுதியில் 2 வருட காலப்பகுதியில் சுமார் 6,000 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர். இது பதிவு செய்யப்பட்ட பெண் சிசுக் கொலையின் மிகப்பெரிய நிகழ்வாகும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஒரு முக்கிய காரணம் திருமணமான பெண்கள் கணவர்களின் சொத்து என்ற கருதப் படுவதேயாகும். மதுபான பயன்பாடும், சமுதாயத்திலும், திரைப்படங்களிலும் பெண்களை பாலியல் பொருட்களாக சித்தரிப்பதும் முக்கிய காரணிகளாக நம்பப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை சமாளிக்க "அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்" அமைத்த முதல் இந்திய மாநிலம் தமிழ்நாடு. 2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கில், ஒரு பெண் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவரது மரணத்திற்கு வழிவகுத்தது. இதன் பிறகு அனைத்து பொது கட்டிடங்களிலும் மூடிய சுற்று தொலைக்காட்சியை (சிசிடிவி) நிறுவுதல் உட்பட 13 அம்ச செயல் திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டது. 1982ஆம் ஆண்டின் குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை பதிவு செய்து, ஒரு வருடம் வரை பிணையில் வெளிவர முடியாத தக்கவைப்பை வழங்குகிறது.

வன்முறைதொகு

வன்கலவி, வரதட்சணை மரணம், துன்புறுத்தல், கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கணவனாலும் அவரது உறவினர்களாலும் உடல் ரீதியான தொல்லை ஆகிய குற்றங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை வகைகளாகும். [1] 2013 சனவரி முதல் சூலை வரையிலான காலகட்டத்தில், மாநில காவல்துறை 2012இல் இதே காலத்தில் 860 உடன் ஒப்பிடும்போது 1,130 வழக்குகளை பதிவு செய்தது. இதே காலகட்டத்தில் மாநிலத்தில் பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை 436, சென்னையில் 42, விழுப்புரத்தில் 32 ,கோவையில் 11 என இருந்தது. வன்கலவியும், கடத்தல் வழக்குகளும் குறைந்துள்ளதாகவும், கணவன் மற்றும் உறவினர்களால் கொடுமை தொடர்பான வழக்குகள் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.[2] 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையின் குற்ற அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 6,612 வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டன. இது 2006இல் 39 சதவீதமாக இருந்தது. [3] இதில், கணவர் மற்றும் உறவினர்களின் கொடுமை மற்றும் துன்புறுத்தல் ஆகியவை 53 சதவீத வழக்குகளுக்கு காரணமாகும்.[4] பெண்களின் அநாகரீக பிரதிநிதித்துவம் சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், தமிழ்நாடு பெண்கள் தொல்லை தடை சட்டம் (திருத்தம்) சட்டம் 2002, தமிழ்நாடு பெண்கள் பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2000,[5] வரதட்சணை தடைச் சட்டம் ஆகியவை தொடர்புடைய வழக்குகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட தொடர்புடைய சட்டங்களில் அடங்கும். [4]

இவ்வகைக் குற்றங்களுக்காக மாவட்டங்களில், சென்னையில் அதிகபட்சமாக 705 வழக்குகள் பதிவாகியுள்ளன. நீலகிரி மாவட்டம் 40 வழக்குகளுடன் மிகக் குறைவாக உள்ளது. 19-30 வயதிற்குட்பட்டவர்கள் அதிகபட்சமாக 62.41%ஆகவும், 15-18 வயதுக்குட்பட்டோர் 19.36%ஆகவும் 11-14 வயதுடையவ்ர்களில் 7.71%ஆகவும் உள்ளனர்.[6]

குறிப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

மேலும் படிக்கதொகு

See also: Sundaram, Shanmugha (21 August 2012). "Feminist on a mission to uplift Dalit women". இந்தியன் எக்சுபிரசு (Indian Express Limited): p. 3. http://thendralmovement.blogspot.co.uk/2012/09/agro-feminism-concept-is-pioneered-by-ms.html.