தமிழர் சிற்பக்கலை

சிற்பங்கள் செதுக்குவதையும், சிற்பங்களிலும் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். இக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.

ஆனந்தத் தாண்டவ நடராசர்

சிற்பம் செய்யும் பொருட்கள்(சிலையை பல வகைகளில் செய்யலாம் அவை ):

தொகு

மெழுகு, அரக்கு, சுதை, மரம், தந்தம், கல், பஞ்சலோகம் முதலியவைகளினால் சிற்ப உருவங்கள் அமைக்கப்படுகின்றன[1].

"கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன’’ (திவாகர நிகண்டு[2])
 
குடைவரைச் சிற்பம்

தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகள்

தொகு

அ. தட்சிணாமூர்த்தி "தமிழர் நாகரிகமும் பண்பாடும்" என்ற நூலில் தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகளை விளக்கியிருக்கின்றார். அதற்காக மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பின்வரும் கருத்தை தனது நூலில் தருகின்றார். "நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் ஊட்டுகின்றன." மேலும் வை. கணபதி அவர்களின் பின்வரும் குறிப்பையும் தருகின்றார். "நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்."

சிற்பங்களின் வகைகள்

தொகு
  1. முழு உரு சிற்பங்கள்: இவை பொருளின் முன்னும் பின்னும் தெளிவாக தெரியுமாறு அமைக்கப்படும் சிற்பங்கள். எ-டு: நடராசர் சிலை.
  2. புடைப்பு சிற்பங்கள்: இவை சுவர்கள், தூண்கள், பாறைகள் எனப்பலவற்றின் மீது உருவத்தின் ஒரு புறம் மட்டும் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள். எ-டு: தூணில் வடிக்கப்பட்ட யாழி சிலைகள்.

உசாத்துணை

தொகு
  1. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=177&pno=67
  2. 12ஆவது பல்பொருட் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_சிற்பக்கலை&oldid=3872667" இலிருந்து மீள்விக்கப்பட்டது