தமிழில் கூத்தநூல்கள்

கூத்தநூல்கள் என்பன முத்தமிழில் நாடகத் தமிழ் சார்ந்த நூல்கள். தொல்காப்பியர் தமிழை எழுத்து, சொல், பொருள் என மொழிநோக்கில் பகுத்துக் கண்டார். பிற்காலத்தில் இம்மூன்றையும் இயல்தமிழ் என்றனர். இதனுடன் இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகியவற்றைச் சேர்த்து முத்தமிழ் என்றனர். நாடகம் என்பது கூத்து.

கூத்தானது பாடலின் இசைக்கேற்ப ஆடி, பாடலின் பொருளை மெய்ப்பாட்டால் புலப்படுத்துவது. நாடகம் என்பது கதையோட்டத்துடன் கூடிய கூத்து.

  • இயல்தமிழ் புலவர்களால் வளர்ந்தது.
  • ஏனைய இரண்டும் பாணர்களால் வளர்ந்தன.

இசைக்கருவியில் பண்ணப்படுவது பண்.
பண்ணிசையுடன் பாடுவர் பாணர்.
பண்ணிசை பொருந்த ஆடுபவர் பொருநர்.
பாடற்பொருளை மெய்படுத்திக் காட்டி ஆடுபவர் விறலியர்.
கதைப்பாட்டுடன் ஆடுபவர் கூத்தர்.

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் கூத்தநூல்கள் [1]
  1. கூத்தநூல்
  2. இசைநுணுக்கம்
  3. இந்திரகாளியம்
  4. பஞ்சமரபு
  5. பரதசேனாபதியம்
  6. நாடகத்தமிழ்நூல்

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 197
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழில்_கூத்தநூல்கள்&oldid=2161453" இலிருந்து மீள்விக்கப்பட்டது