தமிழ்க் காப்பியங்கள் (காலநிரல்)
காப்பியம் என்பது தலைவனின் வரலாற்றைக் கூறும் இலக்கியம். காப்பியத் தலைவன் ஒருவனையோ, பலரையோ இது கொண்டிருக்கும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பயப்பதாக இருக்கும். செய்யுள் வடிவில் அமைந்திருக்கும். வேறு மொழியிலுள்ள நூலைத் தழுவி உருவாக்கப்பட்ட காப்பியங்களும் தமிழில் உண்டு. சமயம் தழுவிய காப்பியங்கள் தமிழில் மிகுதி.[1]
1
தொகுநூற்றாண்டு | நூல் | யாப்பு | ஆசிரியர் | செய்யுள் எண்ணிக்கை | மூலமா, தழுவலா | சமயம் |
---|---|---|---|---|---|---|
(?) | சிலப்பதிகாரம் | ஆசிரியப்பா | இளங்கோவடிகள் | 5270 அடிகள் | மூலம் | பொது |
7 | மணிமேகலை | ஆசிரியப்பா | சீத்தலைச் சாத்தனார் | 4835 அடிகள் | மூலம் | பௌத்தம் |
8 | பெருங்கதை | ஆசிரியப்பா | கொங்குவேளிர் | 16,230 அடிகள் | தழுவல் | சைனம் |
9 | சீவக சிந்தாமணி | விருத்தம் | திருத்தக்க தேவர் | 3154 | தழுவல் | சைனம் |
9 | இராமாயணம் | விருத்தம் | கம்பர் | 10,480 | தழுவல் | பொது [2] |
9 | வளையாபதி [3] | விருத்தம் | (?) | - | (?) | (?) |
9 | பாரத வெண்பா | வெண்பா | பெருந்தேவனார் | 1180 | மூலம் [4] | பொது |
2
தொகுநூற்றாண்டு | நூல் | யாப்பு | ஆசிரியர் | செய்யுள் எண்ணிக்கை | மூலமா, தழுவலா | சமயம் |
---|---|---|---|---|---|---|
10 | சூளாமணி | விருத்தம் | தோலாமொழித்தேவர் | 2131 | தழுவல் | சைனம் |
10 | குண்டலகேசி [3] | விருத்தம் | நாதகுத்தனார் | - | மூலம் | பௌத்தம் |
11 | நீலகேசி | விருத்தம் | (?) | 894 | மூலம் | சைனம் |
11 | கல்லாடம் | ஆசிரியப்பா | கல்லாடர் | 100 | மூலம் | சைவம் |
12 | பெரியபுராணம் | விருத்தம் | சேக்கிழார் | 4286 | மூலம் | சைவம் |
12 | உத்தர ராமாயணம் | விருத்தம் | ஒட்டக்கூத்தர் | 1510 | தழுவல் | வைணவம் |
3
தொகுநூற்றாண்டு | நூல் | யாப்பு | ஆசிரியர் | செய்யுள் எண்ணிக்கை | மூலமா, தழுவலா | சமயம் |
---|---|---|---|---|---|---|
13 | நளவெண்பா | வெண்பா | புகழேந்தி | 424 | மூலம் [5] | பொது |
13 | யசோதர காவியம் | விருத்தம் | (?) | 320 | தழுவல் | சைனம் |
13 | திருவிளையாடல் | விருத்தம் | பெரும்பற்றப்புலியூர் நம்பி | 1752 | தழுவல் | சைவம் |
14 | பாரதம் | விருத்தம் | வில்லிபுத்தூரார் | 4351 | தழுவல் | பொது [6] |
14 | கந்தபுராணம் | விருத்தம் | கச்சியப்ப சிவாசாரியார் | 10,345 | மூலம் | சைவம் |
4
தொகுநூற்றாண்டு | நூல் | யாப்பு | ஆசிரியர் | செய்யுள் எண்ணிக்கை | மூலமா, தழுவலா | சமயம் |
---|---|---|---|---|---|---|
15 | திருவாதவூரர் புராணம் | விருத்தம் | கடவுள்மாமுனிவர் | 545 | மூலம் | சைவம் |
15 | ஸ்ரீ புராணம் | உரைநடை | (?) | - | தழுவல் | சைனம் |
15 | உதயணகுமார காவியம் | விருத்தம் | (?) | 369 | தழுவல் | சைனம் |
15 | நாக்குமாரகாவியம் [7] | விருத்தம் | (?) | - | - | - |
15 | காதம்பரி | விருத்தம் | ஆதிவராக கவி | 1232 | தழுவல் | பொது |
5
தொகுநூற்றாண்டு | நூல் | யாப்பு | ஆசிரியர் | செய்யுள் எண்ணிக்கை | மூலமா, தழுவலா | சமயம் |
---|---|---|---|---|---|---|
16 | அரிச்சந்திர புராணம் | விருத்தம் | வீரை ஆசுகவிராசர் | 1215 | மூலம் | பொது |
16 | புரூரவ சரிதை | விருத்தம் | ஐயம்பெருமாள் | சுமார் 1000 | மூலம் | பொது |
16 | நைடதம் | விருத்தம் | அதிவீர ராம பாண்டியன் | 1172 | தழுவல் | பொது |
16 | பாகவதம் | விருத்தம் | செவ்வைச்சூடுவார் | 4973 | தழுவல் | வைணவம் |
16 | பாகவதம் | விருத்தம் | அருளாளதாசர் | 9147 | தழுவல் | வைணவம் |
17 | பிரபோத சந்திரோதயம் | விருத்தம் | மாதை திருவேங்கட நாதர் | 2019 | தழுவல் | வேதாந்தம் |
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. pp. 50, 51.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ வைணவம் என எடுத்துக்கொள்வாரும் உண்டு
- ↑ 3.0 3.1 நூல் இல்லை
- ↑ தமிழகத்தில் நிலவிவந்த கதைகளைத் தழுவி உருவாக்கப்பட்டது
- ↑ தமிழ்நாட்டில் நிலவிய கதை
- ↑ ஆசிரியர் பாடியுள்ள இறைவணக்கப் பாடல்கள்
- ↑ நூல் கிடைக்கவில்லை