தமிழ்ச் சமூக இயக்கம்
தமிழ்ச் சமூக இயக்கம் (தமிழ்ச் சமூக அமைப்பு) (English: Tamil Society Organisation), அல்லது சமூக இயக்கம், தமிழர்களை கொண்ட ஒரு உலகளாவிய இயக்கம். கிட்டதட்ட 31 நாடுகளில் (முக்கியமாக இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ், யேர்மனி, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில்) பதியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது, இந்த இயக்கம் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், பன்னாட்டு மன்னிப்பு அவை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இணைந்து சர்வதேசரீதியில் இயங்கிவருகின்றது.
உருவாக்கம் | பதிவு அங்கீகாரம்: 23 நவம்பர் 2010 அதிகாரப்பூர்வ ஆரம்பம்: 1 மார்ச் 2011 |
---|---|
தலைமையகம் | |
உறுப்பினர் | ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் பன்னாட்டு மன்னிப்பு அவை மனித உரிமைகள் கண்காணிப்பகம் |
ஆட்சி மொழிகள் | தமிழ் ஆங்கிலம் |
செயலாளர் நாயகம் | தி.பிரதீஸ் |
வலைத்தளம் | tamilsociety |
முக்கிய இலக்குக்கள்
தொகுஉலகத்தில் அதிக நாடுகளில் இயங்கிவரும் தமிழ் இயக்கங்களில் தமிழ்ச் சமூக இயக்கம் அதிக நாடுகளில் இயங்கிவருகின்றது, அதன் முக்கிய 10 இலக்குக்கள்.
- தமிழர்களின் சுதந்திரம்.
- தமிழர்களின் அடிப்படைத் தேவைகள்.
- தமிழ்ச் சிறுவர்களின் பாதுகாப்பு.
- தமிழ் நாடு விடுதலை.
- தமிழீழ விடுதலை.
- தமிழ்ப் பெண்களின் சம உரிமை.
- தமிழ் மொழி பாதுகாப்பு.
- தமிழர்களின் கல்வி வளர்ச்சி.
- தமிழ் கலாச்சார பாதுகாப்பு.
- தமிழர் ஒற்றுமை மேம்்படுத்தல்.
- இலங்கை போர் குற்ற விசாரணை.
இவை தவிர, குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக விளையாட்டுக்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
பதிவுகள்
தொகுதமிழ்ச் சமூக இயக்கம் 2008ம் ஆண்டு பதியப்பட்ட போதும் சில அரசியல் நெருக்கடிகளால் சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்படவில்லை. மேலும், பல போராட்டத்திற்கு பின்பு 2010ம் இறுதியில் சர்வதேசத்தில் அங்கீகரிக்கப்பட்டது, எனினும் இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை நிரகரிக்கபட்டுள்ளது. 2011ம் தை மாதம் 31 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது பின்பு 2011ம் மாசி மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும் பன்னாட்டு மன்னிப்பு அவையுடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் போடப்பட்டது.
உறுப்பினர்கள்
தொகுஉறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தின் மூலமாக இணைந்துகொள்ளலாம். ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் மின்சார உறுப்பினர் அடையாள அட்டை வழங்கபட்டு வருகின்றது. மேலும், அனைத்து உறுப்பினர்களுடைய விபரங்களும் முழுமையாக தரவுத்தளம் மூலம் பாதுகாக்கபட்டுள்ளது.
- உலகத்தில் முதல் முறையாக மின்சார உறுப்பினர் அடையாள அட்டை அறிமுகபடுத்திய இயக்கம்.
மேலும்
தொகுதமிழ்ச் சமூக இயக்கம் முற்றிலும் அரசாங்க சார்பற்ற இயக்கம் மேலும் முதலாம் மாநாட்டு அமர்வில் எக்காலத்திலும் எத்தகைய சூழ்நிலையிலும் அரசியலில் இணைந்துகொள்ள மாட்டாது என்பது தீர்மனிக்கபட்டுள்ளது.
வெளியிணைப்புகள்
தொகு- தமிழ்ச் சமூக இயக்கம் - அதிகாரபூர்வ வலைத்தளம்