நவம்பர் 23
நாள்
(23 நவம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 23 (November 23) கிரிகோரியன் ஆண்டின் 327 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 328 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 38 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான்.
- 1174 – சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார்.
- 1248 – மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர்.
- 1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டவன்.
- 1510 – இமெரெட்டி இராச்சியம் மீதான (இன்றைய மேற்கு ஜோர்ஜியா) உதுமானியரின் முதலாவது தாக்குதல் ஆரம்பித்தது. உதுமானியப் படைகள் தலைநகர் குத்தாயிசியைக் கைப்பற்றினர்.
- 1857 – ஐக்கிய இராச்சியத்தின் சிபெல்லா என்ற பயணிகள் கப்பல் கொழும்புக்கு அருகே மூழ்கியதில் நால்வர் உயிரிழந்தனர்.[1]
- 1867 – இரண்டு அயர்லாந்தர்களைச் சிறையிலிருந்து வெளியேற்ற உதவியமைக்காக மூன்று அயர்லாந்துத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
- 1890 – நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்லெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
- 1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1914 – மெக்சிக்கோ புரட்சி: கடைசி அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோவின் வெரக்குரூசு நகரில் இருந்து வெளியேறியது.
- 1924 – அந்திரொமேடா "நெபுலா" உண்மையில் நமது பால் வழிக்கு வெகுதூரத்தேயுள்ள பிறிதொரு விண்மீன் பேரடை என்ற எட்வின் ஹபிளின் கண்டுபிடிப்பு, முதற்தடடையாக நியூயார்க் டைம்சில் வெளியிடப்பட்டது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: ராவல்பிண்டி என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியப் போர்க் கப்பல்களினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: உருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: தரவா, மாக்கின் பவளத் தீவுகள் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தன.
- 1946 – வியட்நாம், ஆய் பொங் நகர் மீது பிரெஞ்சுக் கடற்படைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
- 1955 – கொக்கோசு (கீலிங்) தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆத்திரேலியாவுக்கு கைமாறியது.
- 1956 – தமிழ்நாடு, அரியலூரில் நடந்த தொடருந்து விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.
- 1959 – பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் ஸ்திராஸ்பூர்க் நகரில் "ஐரோப்பிய ஒருங்கிணைப்பு" பற்றிய தனது எண்ணங்களைத் தெரிவித்தார்.
- 1971 – சீனப் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
- 1974 – எத்தியோப்பியாவில் அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட 60 பேர் இடைக்கால இராணுவ அரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1978 – கிழக்கு மாகாண சூறாவளி, 1978: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வீசிய கடும் புயலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1979 – மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
- 1980 – தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற 6.9 அளவு நிலநடுக்கத்தினால் 4,800 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1985 – எகிப்தியப் பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990 – ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.
- 1992 – முதலாவது திறன்பேசி, ஐபிஎம் சைமன், லாஸ் வேகஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1996 – எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோசு அருகில் வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.
- 2001 – கணினி குற்றம் தொடர்பான சாசனம் புடாபெஸ்ட் நகரில் கையெழுத்திடப்பட்டது.
- 2003 – வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அரசுத்தலைவர் எதுவார்து செவர்துநாத்சே பதவி விலகினார்.
- 2005 – லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆப்பிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் தலைவர் இவராவார்.
- 2006 – ஈராக்கில் சாதிர் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 125 பேர் கொல்லப்பட்டு 257 பேர் காயமடைந்தனர்.
- 2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது
- 2007 – அர்கெந்தீனாவுக்குத் தெற்கே எக்சுபுளோரர் என்ற பயணிகள் கப்பல் பனிமலை ஒன்றில் மூழ்கியதில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
- 2009 – மகுயிண்டனாவோ படுகொலை: பிலிப்பீன்சில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள் 58 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2011 – அரேபிய வசந்தம்: யெமனில் 11 மாதங்கள் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து யேமனிய அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலி பதவி விலகினார்.
பிறப்புகள்
- 1837 – யோகான்னசு வான் டெர் வால்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1923)
- 1864 – பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ, செருமானிய-உருசிய வானியலாளர் (பி. 1793)
- 1869 – வால்டெமர் பவுல்சன், தென்மார்க்குப் பொறியியலாளர் (இ. 1942)
- 1872 – ஆஷ் துரை, பிரித்தானிய அரசி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர், நீதிபதி (இ. 1911)
- 1897 – நீரத் சந்திர சவுத்ரி, வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1999)
- 1908 – நிக்கலாய் நோசவ், சோவியத் குழந்தைகள் எழுத்தாளர் (இ. 1976)
- 1916 – பி. கே. பேஜ், ஆங்கிலேய-கனடிய கவிஞர் (இ. 2010)
- 1921 – சுரதா, தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2006)
- 1923 – ஏ. எல். சீனிவாசன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1977)
- 1926 – சத்திய சாயி பாபா, தென்னிந்தியத் துறவி, இந்து மெய்யியலாளர் (இ. 2011)
- 1926 – தி. சு. கிள்ளிவளவன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாளர் (இ. 2015)
- 1932 – செ. வை. சண்முகம், தமிழக மொழியியலாளர், கல்வெட்டாய்வாளர்
- 1939 – ஜீவா ஜீவரத்தினம், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1997)
- 1953 – பிரான்சீஸ் காப்ரே, பிரான்சியப் பாடகர்
- 1962 – நிக்கோலசு மதுரோ, வெனிசுவேலா அரசுத்தலைவர்
- 1972 – விஜயகலா மகேசுவரன், இலங்கை அரசியல்வாதி
- 1977 – பிரகாஷ் வீர் சாஸ்திரி, சமற்கிருத அறிஞர், அரசியல்வாதி (பி. 1923)
- 1979 – கெல்லி புரூக், ஆங்கிலேய நடிகை
- 1986 – நாக சைதன்யா, தெலுங்குத் திரைப்பட நடிகர்
- 1990 – பூர்ணிதா, தென்னிந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகை.
- 1992 – மைலே சைரஸ், அமெரிக்க நடிகை
இறப்புகள்
- 1826 – யோகான் எலர்ட் போடே, செருமானிய வானியலாளர் (பி. 1747)
- 1844 – தாமசு ஜேம்சு எண்டர்சன், இசுக்காட்டிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1798)
- 1910 – ஆக்டேவ் சானுட், அமெரிக்க கட்டுமானப் பொறியாளரும் வான்பறத்தலின் முன்னோடி (பி. 1832)
- 1937 – ஜகதீஷ் சந்திர போஸ், வங்காளதேச-இந்திய இயற்பியலாளர், உயிரியலாளர், தொல்லியலாளர் (பி. 1858)
- 1976 – ஆன்றே மால்றோ, பிரான்சிய எழுத்தாளர் (பி. 1901)
- 1976 – மு. திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1907)
- 1977 – பிரகாஷ் வீர் சாஸ்திரி, சமக்கிருத அறிஞர் (பி. 1923)*1990 – ரூவால் டால், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1916)
- 1983 – லலிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, நடனக் கலைஞர் (பி. 1930)
- 1990 – ரூவால் டால், பிரித்தானியப் புதின எழுத்தாளர் (பி. 1916)
- 1992 – மு. அருணாசலம், தமிழகத் தமிழறிஞர் (பி. 1909)
- 2003 – முரசொலி மாறன், தமிழக அரசியல்வாதி (பி. 1934)
- 2012 – வீரபாண்டி எஸ். ஆறுமுகம், தமிழக அரசியல்வாதி (பி. 1937)
- 2014 – செல்வா கனகநாயகம், ஈழத்துப் பேராசிரியர், எழுத்தாளர்
- 2016 – கே. சுபாஷ், தமிழ், இந்தித் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
- 2022 – முத்து சிவலிங்கம், இலங்கை அரசியல்வாதி (பி. 1943)
சிறப்பு நாள்
- திருத்தந்தை முதலாம் கிளமெண்டு திருவிழா (கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், லூதரனியம்)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 23 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்