தி. சு. கிள்ளிவளவன்
தி. சு. கிள்ளிவளவன் (நவம்பர் 23, 1926—மார்ச்சு 13, 2015) என்பவர் தமிழ்நாட்டு அரசியலாளராகவும் எழுத்தாளராகவும் இதழாளராகவும் இருந்தவர். மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரைக்கு அணுக்கமாக இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.[1]
அரசியல் வாழ்க்கை
தொகுசென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார். மாணவராக இருந்தபோது நீதிக் கட்சியிலும் அதன் பின்னர் தன்மானக் கட்சியிலும் ஈடுபட்டார். 1944 ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்தில் இணைந்தார். திராவிடர் கழகம் உடைந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகிய போது 1949 இல் தி.மு.க.வில் சேர்ந்து அண்ணாவுடன் செயலாற்றினார். ஹோம்லாண்ட் என்னும் இதழின் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். முரசொலி என்னும் நாளிதழுக்கும் துணை ஆசிரியர் ஆனார். 1967 ஆம் ஆண்டில் தி.மு.க.விலிருந்து விலகி பேராயக் கட்சியில் சேர்ந்தார். 1979 ஆம் ஆண்டில் பழ. நெடுமாறன் தலைமையில் 'காமராசர் காங்கிரஸ்' என்னும் கட்சியைத் தொடங்கினார். சிறிது காலம் கழிந்ததும் அ.தி.மு.க. விலும் அதன் பின்னர் வாழப்பாடி ராமமூர்த்தியின் காங்கிரசிலும் சேர்ந்து பணியாற்றினார்.
இதழிகைப்பணி
தொகுதமிழ்நாடு நாளிதழ், பெங்களூர் தினச்சுடர் ஆகிய பத்திரிகைகளிலும் அறிஞர் அண்ணாதுரை நடத்திய ஹோம்லாண்டு, பி.பாலசுப்பிரமணியன் நடத்திய சண்டே அப்சர்வர் என்னும் ஆங்கில இதழ்களிலும் பணியாற்றினார்.
இறுதிக்காலம்
தொகுகடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கி இருந்தார். இறுதியாக நோய்வாய்ப்பட்டுக் காலமானார். அவருடைய மருத்துவச் செலவுக்காக அவர் காலமாவதற்கு சில நாள்களுக்கு முன் அ.இ.அ.தி.மு.க. ஐந்து இலக்க உருபா அவருக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.[2]
உசாத்துணை
தொகு- ↑ "அண்ணாதுரையின் நண்பர் கிள்ளிவளவன் காலமானார்". தினமலர். 13 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "கிள்ளிவளவன் மறைவுக்கு ஜெ., இரங்கல்". தினமலர். 14 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)