நடு அமைதிப் பெருங்கடலின் பவளத் தீவுகளில் ஒன்றான தரவா (Tarawa) கிரிபட்டி குடியரசின் தலைநகரமாகவும் விளங்குகின்றது.[1][2][3] இது வடக்குத் தரவா என்றும் தெற்குத் தரவா என்றும் பிரிக்கப்பட்டுள்ளது; வடக்குத் தரவாவில் கில்பெர்ட் தீவுகளில் பல தொலைதூரத் தீவுகள் அடங்கியுள்ளன. தெற்குத் தரவாவில் நாட்டின் மக்கள்தொகையில் பாதியாக 50,182 as of 2010 பேர் வசிக்கின்றனர்.[4][5] வெளிநாட்டு மக்களுக்கு இரண்டாம் உலகப் போரின் போது இங்கு நிகழ்ந்த தரவா சண்டையால் இப்பவளத்தீவு அறிமுகமானது.

தரவா
தரவா பவளத்தீவில் தெற்குத் தரவா (சிவப்பு) வடக்குத் தரவா (மஞ்சள்) காட்டப்பட்டுள்ள நிலப்படம்
புவியியல்
அமைவிடம்அமைதிப் பெருங்கடல்
ஆள்கூறுகள்1°26′N 173°00′E / 1.433°N 173.000°E / 1.433; 173.000 (Tarawa)
தீவுக்கூட்டம்கில்பெர்ட் தீவுகள்
பரப்பளவு500 km2 (190 sq mi)
உயர்ந்த ஏற்றம்3 m (10 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை56,284 (2010)
தரவா பவளத்தீவின் நிலப்படம்

புவியியல் தொகு

தரவாவில் 500 கிமீ2 பரப்புள்ள கடற்காயலும் அகலமான கடலடிப் பாறையும் உள்ளது. அனைத்துவிதமான மீன்களும் ஓடுடைமீன்களும் இயற்கையாகவே கிடைத்தாலும் வளர்ந்து வரும் பெரும் மக்கள்தொகையால் கடல்சார் வளங்கள் மிக அதிகயளவில் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. அடிக்கடி வறட்சி ஏற்பட்டாலும் சாதாரண ஆண்டுகளில் பெய்யும் மழை ஈரப்பலா, பப்பாளி, வாழை மரங்களையும் தென்னை, தாழை மரங்களையும் வளர்க்கப் போதுமானதாக உள்ளது.

வடக்குத் தரவாவில் பல தொடர்ச்சியான தீவுத்திட்டைகள் அடங்கியுள்ளன; இவற்றில் மிகவும் வடக்கில் புராரிகி தீவுத்திட்டை உள்ளது. இந்தத் தீவுத்திட்டைகளிடையே உள்ள பரந்த கடல்வெளிகளை குறைந்த அலையோதம் இருக்கும் போது கடப்பது எளிதாகும்.[6]

தெற்குத் தரவாவில் பாலங்கள் கட்டப்பட்டு, மேற்கிலுள்ள பெதியோ தீவுத்திட்டை முதல் வடகிழக்கிலுள்ள புயோடா தீவுத்திட்டை வரை, ஒரே நிலப்பட்டையாக உள்ளது.[7]

நிர்வாகம் தொகு

தரவா பவளத்தீவில் மூன்று நிர்வாக பிரிவுகள் உள்ளன:

  • பெடியோ டவுன் கவுன்சில் (அல்லது BTC), - பெடியோ தீவுத்திட்டை;
  • டெய்னைனானோ ஊரக மன்றம் (அல்லது TUC), பைரிக்கியிலிருந்து பொன்ரிக்கி வரை
  • யூதன் தரவா மன்றம் (அல்லது ETC), வடக்குத் தரவாவிற்கு அல்லது தரவா லெடா (பொன்ரிக்கிக்கு கிழக்குப் புறமுள்ள அனைத்துத் தீவுத்திட்டைகளும் சாலையால் தெற்கு தரவாவுடன் இணைக்கப்பட்டுள்ள புயோடாவும்).[8]

அம்போவில் சட்டப் பேரவையும் பைரிக்கியில் அரசு மாளிகையும் உள்ளன. கிரிபாட்டி அரசின் வெவ்வேறு அமைச்சகங்களும் பெடியோ முதல் தெற்கு நவேரவேர் வரையிலும் அமைந்துள்ளன.

மேற்சான்றுகள் தொகு

  1. http://www.kiribatitourism.gov.ki/index.php/aboutkiribati/aboutkiribatioverview பரணிடப்பட்டது 2010-06-26 at the வந்தவழி இயந்திரம் |title = Kiribati government website |publisher = Government of Kiribati | accessdate = 2014-05-29
  2. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/kr.html பரணிடப்பட்டது 2017-09-07 at the வந்தவழி இயந்திரம் |title = CIA
  3. http://publications.europa.eu/code/en/en-5000500.htm |title = European Union - list of countries in the world
  4. "Country files at earth-info.nga.mil". Archived from the original on 2012-08-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.
  5. "Kiribati Census Report 2010 Volume 1" (PDF). National Statistics Office, Ministry of Finance and Economic Development, Government of Kiribati. Archived from the original (PDF) on 10 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "North Tarawa Island Report 2012". Government of கிரிபட்டி.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "South Tarawa Island Report 2012". Government of கிரிபட்டி.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. Dr Temakei Tebano & others (March 2008). "Island/atoll climate change profiles - Tarawaieta (North Tawara)". Office of Te Beretitent - Republic of Kiribati Island Report Series (for KAP II (Phase 2). Archived from the original on 6 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 April 2015.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தரவா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவா&oldid=3930706" இலிருந்து மீள்விக்கப்பட்டது