தமிழ்நாடு சட்டக் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகள் அனைத்தும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் 7 அரசு கல்லூரிகளும், ஒரு சுயநிதிக் கல்லூரியும் இணைப்பு பெற்றுள்ளன. இங்கு இளநிலை சட்டப் படிப்பில் ஐந்து ஆண்டுகள் படிப்பும், மூன்று ஆண்டு படிப்பும் என இரு வகையான பட்டப்படிப்புகள் உள்ளன. ஐந்தாண்டு பட்டப்படிப்பிற்கு நுழைவுக் கல்வித் தகுதியாக மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியும், மூன்றாண்டு பட்டப்படிப்பிற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு கல்லூரிகள்
தொகுதமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலூர் காரைக்குடி ஆகிய ஊர்களில் அரசினர் சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையிலுள்ள கல்லூரி மட்டும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்றும் பிற கல்லூரிகள் அரசினர் சட்டக் கல்லூரி என்றும் பெயரிடப்பட்டு செயல்படுகின்றன.
சுயநிதிக் கல்லூரி
தொகுசேலம் நகரில் சுயநிதி சட்டக் கல்லூரி ஒன்றும் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.