தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் மொத்த இட ஒதுக்கீடு 69% ஆகும். அதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BC) 26.5%, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் (BCM) 3.5% உள் இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%, பட்டியல் சாதியினருக்கு (SC) 15%, பட்டியல் சாதிகளில் ஒன்றான அருந்ததியருக்கு (SCA 3% உள் இடஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 1% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.[1]தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. [2] 2021ஆம் ஆண்டு முதல் மேற்படி இட ஒதுக்கீட்டின் கீழ் தமிழ் வழியில் கற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு 20% ஆகும்[3]
தற்போது கீழ்கண்டவாறு தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.
பொது வகுப்பினர் | துணை வகுப்பினர் | துணை வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு % | மொத்த இட ஒதுக்கீடு % | இந்திய அரசில் வகுப்பினர் |
---|---|---|---|---|
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பொது) | 26.5% | 30% | இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீடு | 3.5% | |||
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) | 13% | 20% | |
சீர்மரபினர் (Denotified Tribes) | 7% | |||
பட்டியல் சமூகத்தினர் | இதர பட்டியல் சமூகத்தினர் | 15% | 18% | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
அருந்ததியர் உள் ஒதுக்கீடு | 3% | |||
பட்டியல் பழங்குடிகள் | 1% | 1% | ||
மொத்த இட ஒதுக்கீடு | 69% |