தமிழ்ப் பெயர்
தமிழின் இலக்கண, ஒலிப்பியல், மரபு முறைகளுக்கு அமைய அமைந்த பெயர் தமிழ்ப் பெயர் ஆகும்.
ஒரு நபரின் பெயர் அவரின் பின்புலத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும். ஒரு அடிமைக்கு அவரின் ஆண்டையே பெயர் வைக்கும் உரிமையைப் பெறுகிறான். அதனால் அடிமைப் பெயர்களை (Slave names) பல கறுப்பின மக்களும், காலனித்துவ அரசால் வேற்று நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தென்னிந்திய மக்களும் தாங்க வேணியதாகிற்று. அதே போல் அண்மைக்காலம் வரை தமிழ்ச் சூழலில் பல பெயர்கள் சாதியையும் சேர்த்துக் குறித்து நின்றன. பிள்ளை, ஐயர், படையாச்சி போன்ற பெயர் இணைப்புகள் சாதியைச் சுட்டுகின்றன.
சமயத்தைக் குறித்தும் பெயர்கள் அமைவதுண்டு. குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த தமிழர்கள் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறிய பொழுது, தமது தாழ்வுநிலையை சுட்டி நிற்கும் சாதிப் பெயர்களை விடுத்து மேற்குநாட்டு பெயர்களை ஏற்றுக் கொண்டார்கள். சிலர் சாதியைச் சுட்டாத தமிழ் பெயர்களுடன் மேற்கு நாட்டு பெயரையும் இணைத்துக் கொண்டார்கள். தமிழ் இஸ்லாமியர்களும் தமது சமயத்தை சுட்டும் வண்ணமே பெரும்பாலும் பெயர்களைக் கொண்டிருக்கின்றார்கள்.
பிற மக்களுடான தொடர்புகள் விரிவடையும் பொழுது ஒரு பெயர் வட்டம் வேற்று பெயர் வட்டத்தோடு கலப்பதும் மருபுவதும் வரலாற்று இயல்பு. சில வேளைகளில் இது ஆக்கிரமிப்பாலும் நிகழ்வதுண்டு. சில தனித்தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மக்களிடையே காணப்படும் சமஸ்கிரத அல்லது வட மொழிப் தோற்றப் பெயர்கள் இவ்வாறு ஆக்கிரமிப்பால் சேர்ந்த பெயர்களே என்று சுட்டி, தனித் தமிழ் பெயர்களை வைக்க ஊக்கப்படுத்துகின்றனர்.
ஒரு பெயர் தமிழ் பெயரா இல்லையா என்று அறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும் வரலாற்று, மரபு, மொழிக் குறிப்புகளை வைத்து இவை தமிழ்ப் பெயர் இவை அன்று எனக் குத்து மதிப்பாகச் சொல்ல முடியும். எடுத்துக்காட்டாக யோன், யோர்டன், டேவிட் போன்றவை தமிழ் பெயர்களாக கருதப்பட வாய்ப்புக்கள் குறைவு.
புகலிடத் தமிழர்களிடம் தமிழ்ப் பெயர்கள் நீண்டதாக இருப்பதாக கருத்து நிலவுகின்றது. விண்ணப்ப படிவங்களில் கொடுக்கப்பட்ட இடங்களுக்கு மேலாக தமிழ்ப் பெயர்கள் நீண்டு செல்வதுண்டு. இதனால் சுருக்கமான பெயர்களை இவர்கள் விரும்புகின்றார்கள். இவ்வாறான தமிழ்ப் பெயர்கள் அரிது என்ற தவறான கருத்தும் புகலிட மக்களிடம் இருக்கின்றது.
பட்டியல்
தொகுதமிழ்ப் திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர்
தொகு2007ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிட்டால் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அதிமுக அரசு தமிழிலேயே பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்களித்தலுக்கான அடிப்படைத் தகுதிகளை தமிழக அரசு மாற்றியமைத்தது. திரைப்படத்தில் வன்முறை, ஆபாசம் அதிகம் இருந்தாலும் வரிவிலக்கு கிடைக்காது என்பன உள்ளிட்ட 4 புதிய நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.[1]
தமிழில் நிறுவன பெயர்ப் பலகைகள்
தொகுமுதன்மைக் கட்டுரைகள்: வணிக நிலையங்களின் தமிழ்ப்பெயர் பட்டியல்