தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்

(தமிழ் பாதுகாப்பு இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கல்வி, அரசாட்சி, அரச சேவைகள், நீதி நிர்வாகம் போன்ற தளங்களில் தமிழ் மொழியின் உரிமைகளை உறுதி செய்வதற்காகவும், பண்பாட்டு நோக்கில் அதீத ஆங்கில மோகத்தை கேள்விக்குட்படுத்தியும், சமய நோக்கில் சமஸ்கிரத மொழியின் மேலான்மையைக் கேள்விக்குட்படுத்தியும், தமிழ் மொழியை தற்கால சூழலுக்கேற்ப அறிவியல்-நுட்ப-பொருளாதார நோக்கில் மேம்படுத்துவதையும் நோக்காக கொண்டு பல் துறை சார் தமிழ் மொழி ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் ஆகும்.

அமைப்பாளர்கள்

தொகு

இதன் முதன்மை அமைப்பாளர்கள் பற்றிய விபரம் பின்வருமாறு:[1]

மேலும் பல் துறை சார் தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ப் பாதுகாப்பு இயக்க செய்ற்பாடுகளுடன் இணைந்திருக்கின்றார்கள்.

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தமிழ் மொழியை பேணுவதில் மேற்கொள்ளப்பட்ட முன்னைய இரு இயக்க முனைகளின் இன்றைய வடிவாக சிலரால் பார்க்கப்படுகின்றது. முதல் மொழிப்போர் இயக்கமாக கருதப்படும் தனித்தமிழ் இயக்கம் மணப்பிரவாள மொழி நடையை தவர்ப்பதையும், தமிழ் மொழியில் அதிகமாக காணப்பட்ட சமஸ்கிரத சொல்லாட்சியை குறைப்பதையும் நோக்காக கொண்டு செயற்பட்டது. இரண்டாவது மொழிப் போராக இந்தி தினிப்பு எதிர்ப்புப் போராட்டம் அமைந்தது. இது திராவிட இயக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. ஆங்கில மொழி மோகத்துக்கு எதிராக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாடுகள் பெரும்பாலும் அமைகின்றன. இது மூன்றாவது மொழிப் போராக குறிக்கப்படுகின்றது.[2]

பிற நாடுகளில் மொழிப் பாதுகாப்பு இயக்கங்கள்

தொகு

கனடாவில் பிரேஞ்சு மொழிப் பாதுகாப்பு இயக்கங்கள் செயற்படுகின்றன. இந்த இயக்கத்தின் செயற்பாடே கனடா இரண்டு உத்யோக பூர்வ மொழி கொண்ட நாடாக மாற வழிவகுத்தது.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80502035&format=html
  2. சபேசன். (மே 12, 2005) "மூன்றாவது மொழிப் போரும் - எதிர்ப்பும்", https://tamilnation.org/forum/sabesan/050514mozhi.htm