தயாளு அம்மாள்
தயாளு அம்மாள் கருணாநிதியின் இரண்டாம் மனைவி. கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதி, மு. க. முத்துவை ஈன்றெடுத்த சில ஆண்டுகளில் காலமானார். பின்னர் 1949ஆம் ஆண்டில் மு. கருணாநிதி தயாளு அம்மாளை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.[1]
பிள்ளைகள்
தொகுமு. கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் பிறந்த பிள்ளைகள்:
- மு. க. அழகிரி
- மு. க. செல்வி
- மு. க. ஸ்டாலின்
- மு. க. தமிழரசு
அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் தயாளு அம்மாள்
தொகுஆ. ராசா, இந்திய நடுவண் அரசில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் தயாளு அம்மாளையும் சேர்த்து குற்றப் பத்திரிக்கையை, நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை தாக்கல் செய்துள்ளது.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-14. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
- ↑ தயாளு அம்மாள் மீது குற்றப்பத்திரிகை http://www.bbc.co.uk/tamil/india/2014/04/140425_rasacase.shtml