தராவீஹ்

இரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் தொழுகை

தராவீஹ் (Tarawih, அரபு மொழி: تراويح‎) என்பது சுன்னா இசுலாமியர் ரமலான் எனும் இசுலாமிய மாதத்தில் இரவு நேரத்தில் மேற்கொள்ளும் சிறப்புத் தொழுகை ஆகும்.

துனீசியா கைரோவன் பெரிய மசூதியில் தராவீஹ் தொழுகை
சீனக் குடியரசு தாயிபி பெரிய  மசூதியில் தராவீஹ் தொழுகை

மாறுபட்ட பெயர்கள்

தொகு

பருந்துப்பார்வை

தொகு

ஹனஃபி (Hanafi) மற்றும் ஷாஃபி (Shafi') இஸ்லாம் மார்க்க அடிப்படையில் தராவீஹ் பிரார்த்தனையானது இரட்டை ரக அத்துகளாக (raka'āt) 08/12/20 என்று மேற்கொள்ளப்படும். ஒவ்வொறு இரட்டை ரக அத்துக்கும் பின்னர் ஒரு இடைவெளி எடுத்தும் பின்னர் ஒவ்வொறு  4(2+2) ரக அத்துக்கும் பின்னர் ஒரு வேண்டுதலுடனும் இத் தொழுகை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டிலும்  இஸ்லாமிய காலண்டரின்படி ரமலான் மாதத்தில் மட்டும், இஷா தொழுகைக்குப்பின் இந்த தராவீஹ் தொழுகை மேற்கொள்ளப்படும். ரமலான் மாதத்திற்கு பிறைச்சந்திரன் தோன்றிய இரவு முதல் தராவீஹ் தொழுகை தொடங்கும். இது ரமலான் மாதம் முழுமையும் நீடிக்கும். சுன்னி முஸ்லிம்களின் நம்பிக்கைப்படி இக்காலத்தில் தராவீஹ் தொழுகை மூலமாக  குர்ஆன் முழுவதையும் "முழுமையான பாராயணம்" செய்து முடிப்பது ஒரு மத அனுட்டானம் ஆகும். ரமலான் மாதத்தில் ஓர் இரவில் திருக்குர் ஆனின் ஓர் அத்தியாயத்தை முடிப்பது விரும்பத்தக்கதாகக் கருதப்படுகிறது. ஆனால், கட்டாயமில்லை

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தாராவீ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தராவீஹ்&oldid=3684072" இலிருந்து மீள்விக்கப்பட்டது