தாசரதி ரங்காச்சாரியா
தாசரதி ரங்காச்சாரியா (Dasaradhi Rangacharya) (24 ஆகஸ்ட் 1928 - 7 ஜூன் 2015),[1] ஓர் இந்திய கவிஞரும் மற்றும் தெலுங்கு எழுத்தாளரும் ஆவார். ஐதராபாத் நிசாம்களின் ஆட்சிக்கு எதிரான தெலங்காணா ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார்.[2] நிசாம்களின் ஆட்சியின் கீழ் தெலங்காணா மக்களின் வாழ்க்கை முறையை இவரது எழுத்துக்கள் பிரதிபலித்தது. இவருக்கு 2006 இல் ஆந்திர அரசின் கலா ரத்னா விருது வழங்கப்பட்டது.
தாசரதி ரங்காச்சாரியா | |
---|---|
பிறப்பு | 24 ஆகத்து 1928 ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய தெலங்காணா) |
இறப்பு | 7 சூன் 2015 ஐதராபாத்து, இந்தியா | (அகவை 86)
தொழில் |
|
தேசியம் | இந்தியா |
குறிப்பிடத்தக்க விருதுகள் | கலா ரத்னா |
துணைவர் | கமலாம்மாள் |
பிள்ளைகள் | 3 |
குடும்பத்தினர் | தாசரதி (சகோதரர்) |
சொந்த வாழ்க்கை
தொகுதாசரதி ரங்காச்சார்யா, 24 ஆகஸ்ட் 1928 அன்று ஐதராபாத் மாநிலத்தில் (இன்றைய தெலங்காணா ) பிறந்தார். பள்ளிக் கல்விக்குப் பிறகு, இவர் மேல் கல்விக்காக விசயவாடா சென்றார்.[2][3] இவர் கமலாம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது சகோதரர் தாசரதி கிருஷ்ணமாச்சார்யாவும் ஒரு எழுத்தாளர்.[4]
தொழில்
தொகுதாசரதி, 1951 முதல் 1957 வரை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் ஐதராபாத் சென்று 1957 மற்றும் 1988 க்கு இடையில் சிக்கந்தராபாத் பிரிவில் உள்ள மாநகராட்சியில் பணியாற்றினார்.[2]
எழுத்துகள்
தொகுஐதராபாத் நிசாமின் ஆட்சியின் கீழ் தெலங்கானா மக்களின் வாழ்க்கை முறையைத் தனது புதினங்களில் இணைத்த தாசரதி, தெலங்கானாவில் சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்தார். இவரது முத்தொகுப்பு நாவல்களான சில்லர தேவுல்லு, மொதுகு பூலு, ஜனபதம் போன்ற புதினங்களுக்குப் பிறகு இவர் பிரபலமடைந்தார். இவர் தனது சகாக்களின் ஆலோசனைக்கு எதிராக தெலங்கானா பேச்சுவழக்கில் அவற்றை எழுதினார். நிலப்பிரபுத்துவம் மற்றும் அப்போதைய தெலங்கானா பகுதியில் இருந்த குறைந்த எழுத்தறிவு விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை "தெலங்கானாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த புதினக்களில் அரிதானவை" என்று கருதப்படுகின்றன.[2][5] சில்லர தேவுல்லு 1969 இல் வெளியிடப்பட்டது . மேலும், அதே பெயரில் 1977 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமாக மாற்றப்பட்டது.[4]
விருதுகள்
தொகுதாசரதிக்கு 2006 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால் கலா ரத்னா விருது வழங்கப்பட்டது.[3]
இறப்பு
தொகுதாசரதி 8 ஜூன் 2015 அன்று சோமாஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனையில் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dasarathi passes away" (in ஆங்கிலம்). 9 June 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Krishnamoorthy, Suresh (8 June 2015). "Well-known writer Dasaradhi Rangacharya dead". The Hindu. http://www.thehindu.com/news/national/telangana/wellknonw-writer-dasiradhi-rangacharya-dead/article7294082.ece.
- ↑ 3.0 3.1 3.2 "Poet Dasaradhi Rangacharya, who fought Nizam, is dead". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்). 9 June 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
- ↑ 4.0 4.1 "Telangana's Voice Dasarathi No More". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 9 June 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
- ↑ Indian literature, vol. 42, New Delhi: Sahitya Akademi, 1999, p. 117
மேலும் படிக்க
தொகு- D. Ramalingam (1982). "Dasarathi Rangacharya—Chronicler of Telangana Life". Sahitya Akademi 25 (3): 50–65. https://www.jstor.org/stable/24158505.
- Mittapalli, Dr. Rajeshwar. "Chillara Devullu : A Fictional Portrait of Pre-Independence Telangana". Telugu People. TP Media India Ltd. பார்க்கப்பட்ட நாள் 27 October 2013.
வெளி இணைப்புகள்
தொகு- Dasaradhi Rangacharya's writings (in Telugu) at Archive.org