தானா பகத்துகள்

சார்கண்டு மாநிலத்துப் பழங்குடியினர்

தானா பகத்துகள் (Tana Bhagats) இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தில் உள்ள ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் 1914 ஆம் ஆண்டு முதல் 1920 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த இந்திய விடுதலை வரலாற்றுடன் இணைந்த தானா பகத் இயக்கத்துடன் தொடர்புடையவர்களாவர். [1] [2] [3]

சார்கண்டின் ராஞ்சி மாவட்டத்தில் வீர் இயாத்ரா பகத்தின் சிலை

உருவாக்கம் தொகு

தானா பகத்துகள் ஒவரான் புனிதர்களான இயாத்ரா பகத்து மற்றும் துரியா பகத் ஆகியோரால் உருவாக்கப்பட்டனர். ராஞ்சியில் உள்ள கும்லாவைச் சேர்ந்த இயாத்ரா பகத்து, ஓவரான் சமூகத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்ட தானா பிரிவான ஒரு புதிய பிரிவை நிறுவ தெய்வீகமாக நியமிக்கப்பட்டதாக அறிவித்தார். பகான் (ஓவரான் பாதிரியார்) மற்றும் மக்தோ (மதச்சார்பற்ற விவகாரங்களில் கிராமப் பிரதிநிதி) ஆகியோரின் பாரம்பரிய தலைமையை எதிர்ப்பதன் மூலமும், ஆவி வழிபாடு மற்றும் தியாகம் செய்யும் நடைமுறைகளை நிராகரிப்பதன் மூலமும் தானாக்கள் ஓவாரான் சமூகத்தை மறுசீரமைக்க முயன்றனர். இதற்கு முந்தைய கட்டத்தில் இது குருக் தர்மம் என்று அழைக்கப்பட்டது. குருக் என்பது ஓவரான்களின் மூல மதம் ஆகும். [2]

இயக்கம் தொகு

தானா பகத்துகள் ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட வரிகளை எதிர்த்தனர் மற்றும் காந்தியின் சத்தியாக்கிரக இயக்கத்திற்கு முன்பே இவர்கள் சத்தியாகிரகத்தை நடத்தினர். சமீன்தார்கள், பனியாக்கள் (பணக்காரர்கள்), கிறித்துவ அமைப்புகள், முசுலிம்கள் மற்றும் பிரித்தானியா அரசை எதிர்த்தனர். தானா பகத்துகள் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர்களாகவும் அகிம்சையில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர்.[2]

நூற்றாண்டு விழா தொகு

இயக்கத்தின் 100 ஆண்டுகளைக் கடைப்பிடிக்கும் வகையில், கும்லா மாவட்டங்களைத் தவிர, ராஞ்சி, லோகர்டகா, லதேகார் மற்றும் சத்ரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தானா பகத்துகள் பங்கேற்ற கொண்டாட்டம் நடைபெற்றது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Tana Bhagats want early solution to their problems - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. 2.0 2.1 2.2 Dasgupta, Sangeeta (1999-02-01). "Reordering a World: The Tana Bhagat Movement, 1914-1919" (in en). Studies in History 15 (1): 1–41. doi:10.1177/025764309901500101. பன்னாட்டுத் தர தொடர் எண்:0257-6430. 
  3. "Oraon Tana Vagat Movement - Banglapedia". en.banglapedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானா_பகத்துகள்&oldid=3590374" இலிருந்து மீள்விக்கப்பட்டது