தானே தாலுகா

தானே தாலுகா (Thane taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், கொங்கண் கோட்டத்தில் அமைந்த தானே மாவட்டத்தின் 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1][2] இதன் நிர்வாகத் தலைமையிட தானே நகரம் ஆகும்.

தானே தாலுகா தானே, நவி மும்பை மற்றும் மீரா-பய்ந்தர் என மூன்று மாநகராட்சிகளையும், 14 வருவாய் கிராமங்களையும் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 899330 வீடுகள் கொண்ட தானே தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 37,87,036 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 2022949 மற்றும் பெண்கள் 1764087 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 872 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 430026 (11.36%) ஆகும். சராசரி எழுத்தறிவு 79.57% ஆகும். இத்தாலுகாவின் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 6.79% மற்றும் 1.98% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 28,33,692 (74.83%), இசுலாமியர்கள் 5,60,944 (14.81%), பௌத்தர்கள் 1,62,345 (4.29%), கிறித்துவர்கள் 1,09,684 (2.9%), சமணர்கள் 82,837 (2.19%) மற்றும் பிற சமயத்தினர் 0.99% ஆக உள்ளனர்.[3]


மாநகராட்சி 2011 மக்கள் தொகை[4] பரப்பளவு (சகிமீ)
தானே மாநகராட்சி 18,41,488 147
மீரா-பய்ந்தர் மாநகராட்சி 8,09,378 79.4
நவி மும்பை மாநகராட்சி 11,20,547 344
14 கிராமங்கள் 15,623
மொத்தம் 3,787,046 570

மேற்கோள்கள் தொகு

  1. "महाराष्ट्रातील सर्व तालुके - महाराष्ट्रातील सर्व जिल्ह्यांतील तालुके महसुली विभागांनिहाय जाणून घ्या.". Prahar. 2014-11-27 இம் மூலத்தில் இருந்து 22 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722032645/http://prahaar.in/prahaarhelpline/269444. பார்த்த நாள்: 2015-08-15. 
  2. "Circle Saja Revenue Village List - Tahsil Office". Thane District Collectorate. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Thane Taluka Population Census 2011
  4. Thane Taluka - Thane. Censusindia.gov.in
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானே_தாலுகா&oldid=3557820" இலிருந்து மீள்விக்கப்பட்டது