தாமிரம்(II) தயோசயனேட்டு
தாமிரம்(II) தயோசயனேட்டு (Copper(II) thiocyanate) Cu(SCN)2.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குப்ரிக் தயோசயனேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். கருப்பு நிறத் திண்மமாக காணப்படும் இது ஈரக் காற்றில் மெல்ல சிதைவடைகிறது. [2] 1838 ஆம் ஆண்டு காரல் எர்னசுட்டு கிளாசு முதன் முதலில் தாமிரம்(II) தயோசயனேட்டைக் கண்டுபிடித்தார். 2018 ஆம் ஆண்டு இச்சேர்மத்தின் கட்டமைப்பு உறுதிப்படுத்தப்பட்டது. [3][1]
தாமிரம்(II) தயோசயனேட்டு
Copper(II) thiocyanate | |
தாமிரம்(II) தயோசயனேட்டின் படிகக் கட்டமைப்பு
| |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
குப்ரிக் தயோசயனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
15192-76-4 | |
ChemSpider | 8279278 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10103751 |
| |
பண்புகள் | |
Cu(SCN)2 | |
வாய்ப்பாட்டு எடை | 179.71 கி/மோல்[1] |
தோற்றம் | கருப்பு தூள் |
அடர்த்தி | 2.47 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 180 செல்சியசில்சிதைவடைகிறது[2] |
0.66•10−3 செ.மீ3/மோல்[1] | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தாமிர(II) புரோமைடு, தாமிரம்(II) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | தாமிரம்(I) தயோசயனேட்டு, கோபால்ட்டு(II) தயோசயனேட்டு, பாதரச(II) தயோசயனேட்டு, அமோனியம் தையோசயனேட்டு பொட்டாசியம் தயோசயனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கட்டமைப்பு
தொகுCu(NCS)2 சங்கிலிகள் வலிமையற்ற Cu-S-Cu பிணைப்புகளால் பிணைக்கப்பட்ட இரண்டு பரிமாண அடுக்குகளாக தாமிரம்(II) தயோசயனேட்டின் கட்டமைப்பு இருப்பதாக தூள் எக்சு கதிர் விளிம்பு விளைவு சோதனை முடிவு தெரிவிக்கிறது. பாதரச தயோசயனேட்டின் உருக்குலைந்த யாகன்-டெல்லர் கட்டமைப்பின் ஒப்புமையாக இச்சேர்மத்தின் கட்டமைப்பையும் கருதலாம். கட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு தாமிரம் அணுவும் நான்கு கந்தக அணுக்களாலும் இரண்டு நைட்ரசன் அணுக்களாலும் எண்முக ஒருங்கிணைப்புகளாக பிணைந்துள்ளன. கந்தக முனை SCN- ஈந்தணைவியோடு பாலம் அமைத்து பிணைந்துள்ளது. [1]
தயாரிப்பு
தொகுதாமிரம்(II) கரைசல்களின் அடர் கரைசலுடன் நீரில் கரையக்கூடிய தயோசயனேட்டு உப்பு சேர்ந்து வினைபுரிந்தால் தாமிரம்(II) தயோசயனேட்டு கருப்பு நிற வீழ்படிவாக உருவாகிறது. [2][3] விரைவான உலர்த்தல் மேற்கொள்ளப்பட்டால் தூய்மையான தாமிரம்(II) தயோசயனேட்டு தனித்துக் கிடைக்கிறது. குறைவான அடர்த்தி கொண்ட கரைசல் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டாலும் மெதுவான உலர்த்தல் நடவடிக்கை நிகழ்ந்தாலும் தாமிரம்(I) தயோசயனேட்டு உருவாகும். [4]
பண்புகள்
தொகுதாமிரம்(II) புரோமைடு, தாமிரம்(II) குளோரைடு உப்புகளைப் போல தாமிரம்(II) தயோசயனேட்டும் காந்தவியல் பண்புகளை வெளிப்படுத்துகிறது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Cliffe, Matthew J.; Lee, Jeongjae; Paddison, Joseph A. M.; Schott, Sam; Mukherjee, Paromita; Gaultois, Michael W.; Manuel, Pascal; Sirringhaus, Henning et al. (2018-04-25). "Low-dimensional quantum magnetism in Cu ( NCS ) 2 : A molecular framework material" (in en). Physical Review B 97 (14): 144421. doi:10.1103/PhysRevB.97.144421. பன்னாட்டுத் தர தொடர் எண்:2469-9950. https://link.aps.org/doi/10.1103/PhysRevB.97.144421.
- ↑ 2.0 2.1 2.2 Hunter, J. A.; Massie, W. H. S.; Meiklejohn, J.; Reid, J. (1969-01-01). "Thermal rearrangement in copper(II) thiocyanate". Inorganic and Nuclear Chemistry Letters 5 (1): 1–4. doi:10.1016/0020-1650(69)80226-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1650. http://www.sciencedirect.com/science/article/pii/0020165069802266.
- ↑ 3.0 3.1 Claus, C. (1838). "Beiträge zur näheren Kenntniss der Schwefelcyanmetalle" (in en). Journal für Praktische Chemie 15 (1): 401–411. doi:10.1002/prac.18380150142. பன்னாட்டுத் தர தொடர் எண்:1521-3897. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/prac.18380150142.
- ↑ Smith, D. L.; Saunders, V. I. (15 March 1982). "Preparation and structure refinement of the 2H polytype of β-copper(I) thiocyanate". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 38 (3): 907–909. doi:10.1107/S0567740882004361.